Saturday, February 10, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Colachel Azheem

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Colachel Azheem
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர்



சிறு வயதிலேயே எழுத்தில் ஆர்வம், பத்தாம் வகுப்பு படிக்கும் போதே சமூக சேவையில் நாட்டம் காரணமாக குளச்சலில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பயணித்தார் .
பல்வேறு துறைகளில் செயற்கரிய சாதனைபடைத்த நமது சமுதாய பெருமக்களை வெளிச்சம் போட்டு காட்டவில்லை என்றால் அடுத்த தலைமுறைக்கு தெரியாமலேயே போகும் என்பதால் குமரி மாவட்ட பிரபலங்கள் குறித்து கள ஆய்வு செய்து வருகிறார் ...Colachel Azheem

குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல்..
குளச்சலில் இவரது மூதாதையர் அரபி பாடசாலை நடத்திய காரணமாக லெப்பை வீடு என்று அழைக்கப்பட்டனர். இவரது தந்தை பெயர் முகமது தாஹா.
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார் ..
குளச்சல் இஸ்லாமிய இளைஞர் முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும்,  குளச்சல் ஓரியன்ட் மெட்ரிக் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார்..
இவரது  எழுத்தார்வத்திற்கு முஸ்லிம் முரசு பத்திரிகை வடிகாலாக அமைந்தது.
சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிகிறார்..
சமரசம் பத்திரிகையிலும் இவரது எழுத்துகள் அவ்வப்போது வெளியாகியுள்ளது..
தற்போது குமரி மாவட்ட முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ..

இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சுதந்திர போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள் மற்றும் விளையாட்டுத்துறை சாதனை படைத்தவர்கள் சுமார் 500 பேர்களின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து ஒரு வலைத்தளம் இவரது  நண்பர் துணையுடன் பதிவேற்றி வருகிறார்
 Indianmuslimlegends. blogspot. com என்ற வலைத்தளம் இந்தியாவில்  மிக அதிகமாக தேடப்படும் ஒரு வலைத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது...
காஷ்மீர் பிரச்சனை குறித்து சமரசம் இதழில் வெளியான இவரது  கவிதையை .. நூற்றுக்கணக்கான வாசகர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்கள்... இவரது  பத்திரிகை பதிவுகளை T. A. Azheem என்ற லைக் பேஜ் மூலம் பகிர்ந்து வருகிறார்...மிகச்சிறந்த எழுத்தாளரான இவர் பலராலும் நன்கு அறியப்பட்டவர்
அறிவோடு அடக்கமும் ,நற்குணமும் மார்க்கப்பற்றும் மிக்கவர்
மேடைப் பேச்சிலும் சிறிது ஈடுபாடு உண்டு..

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது  சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்

Jazaakum'Allah Khairan.
நன்றி
அன்புடன் ,
அ.முகம்மது அலி ஜின்னா 

Colachel Azheem
தொடர்புக்கு 9443250277.


No comments: