Wednesday, August 15, 2018

சிறந்த தர்மம்

பிரபல தொழிலதிபர் (LuLu) யூசுப்அலி அவர்கள் கேரள வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் 2.65 மில்லியன் திர்கம்ஸ்(50 மில்லியன் ரூபாய்கள்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.

வாழ்த்துக்கள்.....

கோடிகளில் புரளும் பண முதலைகள் இவரைப் பார்த்தாவது மனம் இளகட்டும்.

Yousuf Ali, chairman and MD of LuLu Group has announced Rs50 million (Dh2.65 million) donation to the Kerala chief minister’s relief fund. Apart from this he had donated R20 million (Dh1.06 million) to the prominent newspapers in Kerala last week for their flood relief initiatives.
-Gulf news
13-08-2018
அபுதாபியை தலைமையிடமாக கொண்டு, உலகம் முழுவதும் இயங்கி வரும் நிறுவனம் lulu(லுலு), கேரளா மாநிலத்திற்கு வெள்ள நிவாரண தொகையாக 50 மில்லியன் ரூபாய், இந்திய மதிப்பில் ரூ.26 கோடியை நிவாரணமாக வழங்கி உள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது.

------------------------------------------------------


சிறந்த தர்மம் எது?

"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1426

இறுக்கினால் இறுகி விடும்

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்" என்று கூறினார்கள்.

அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்"; என்று கூறியதாக உள்ளது.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), 
நூல்: புகாரி 1433, 1434




No comments: