Wednesday, February 28, 2018

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 3 )

வாழ்வியல் தத்துவங்கள் ....!
( பாகம் 3 ) 
*
இருப்பதை விருப்பாக்கு
விரும்பியது இனிதாகும்
இனியதை மகிழ்வாக்கு
மகிழ்ச்சி நிலையாகும்
*
 திறமையை சீர்படுத்து
செயலை நேர்படுத்து
செய்வனயாவும் திறன்படும்
வாழ்வில் செழுமை சேரும்
*
சிந்தித்து திட்டமிடு
நியாயமாய் செயல்படு
நிந்தனைகள் நிறுத்திவிடு
நிம்மதி தேடிவரும்
*
சந்தர்ப்பம் தேடிப்பிடி
தளராது செயல்படு
செய்வினை சீர்படும்
செல்வங்கள் வந்துசேரும்
*
விழுந்துவிட்டால் புதைத்துவிடுவது
மனிதனின் இயல்பு
விழுந்ததும் வீறுகொண்டு எழுவது
வீரனுக்கு அழகு.
*

சிரித்துப்பார்
எதிரியின் முகத்திலும்
புன்சிரி எதிரொளிக்கும்
கொடுத்துப்பார்
ஏழையின் வயிறும் உன்னை
மீண்டும் பிரசவிக்கும்
*
மனஇறுக்கம் தவிர்
மகிழ்வுவந்து குடியேறும்
இருப்பதை விரும்பு
இன்னல்கள் விலகும்
*
நல்லெண்ணம் வளர்
நற்செயல்கள் பு ரி
நன்மைகள் நாடிவரும்
நன்மக்கள் புடைசூழும்

                                 Abdul Kader Sangam

No comments: