Tuesday, February 27, 2018

பழையன போற்றுதும் புதியன புகுதலும் இயல்பு ,வாழ்த்துவதிலும் மகிழ்வு .








உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய் மனதில் நிறுத்திட
இறை வணக்கம் இயல்பாய் இருந்திட
இறைக் கருணையும் இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்

"நீடூருக்கு அருகில் இரயில் பாதை இருந்தும் ஒரு இரயில் நிலையம் இல்லாமலும் இருந்தது.
தற்போது நீடூரில் இரயில் நிலையம் அமைந்திருக்கும் இடம் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களின் சொந்த இடமாகும். அந்த இடத்தை இனாமாக கொடுத்தது மட்டுமல்லாமல் அக்காலத்திலேயே செலவு செய்து இரயில் நிலையம் ஏற்படுவதற்கு மூல புருஷராக இருந்தார்கள்."
பழையன போற்றுதும் புதியன புகுதலும் இயல்பு .அவ்வகையில்
நீடூருக்கு அகல இரயில் பாதை வந்தபோது இரயில் நிலையமும் அழகாக சிறப்பாக புதியவடிவம் தந்தது மக்களுக்கு மகிழ்வைத் தருவதுடன் மக்களின் இரயில் பிரயாணமும் அதிகமானது .
அதற்க்கு தகுத்ததுபோல் நீண்ட platform அமைக்கப்பட்டதும் மக்களுக்கு உதவியாக உள்ளது
ஆனால் அதன் பராமரிப்பு குறைந்ததின் காரணமாக பிளாட்பாரத்தில் புட்கள் வளர அதனை சுத்தம் செய்யாமல் இருப்பதைக்காண நீடூரைச் சார்ந்த தன்னார்வளர்கள் சிலர் புகைவண்டி நிலைய காப்பாளர் அனுமதி பெற்று அதனை சுத்தப்படுத்தி இரயில் பிரயாணம் செய்வோரை மகிழ்வித்தனர்
தர்மம் அடுப்பங்கரையிலிருந்து துவங்க வேண்டும்
நம் வீடு ,நம் தெரு,நம் ஊர் இப்படியாக அது விரிவடைகின்றது
உணவில் கூட்டு இருப்பின் பிடிப்பு
குடும்பத்தில் கூட்டு இருப்பின் பிணைப்பு
சேவையில் சேர்ப்பு இருப்பின் வளர்ச்சி
அதன் பொறுபபை Nidur Jafrudeen ஏற்றுக்கொண்டு செயல்பட்டார் .அவருக்கு நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்
சுத்தம் செய்ய உதவி புரிந்தோர்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகின்றோம் அவர்களது பணி தொடரட்டும்
குறிப்பாக இரண்டு நாள் வேலை செய்ய
ஒரு நாள் வேலை செய்ய
வேலை செய்யும் ஒருநபர் சம்பளமாக
இப்படி தந்தவர்கள் ....
மஷாயிக்தெரு map பாபு
ரைமில்தெரு ஜெஹபர்அலி
அலிகாலணி பாரூக்.
கோல்டன் தெரு சையது
புதுமனைத்தெரு ஜெப்ருதீன்.
அரபித்தெரு உபைத்துல்லா
மஷாயிக்தெரு map பாபு
ரைமில்தெரு ஜெஹபர்அலி
அலிகாலணி பாரூக்.
கோல்டன் தெரு சையது
தகுதியானவர்களை சரியாக அடையாளம் காட்டி சிறப்பித்தல் அவர்களது சேவையை ஊக்குவிக்கும்
அவர்களை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்
இவர்களைப்போல் மற்றவர்களும் பணி செய்து வாழ இறைவனிடம் இறைஞ்சுகின்றோம் .ஆமீன்
இறைவன் அவர்களுக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
Jazaakum'Allah Khairan.
நன்றி
"May Allâh reward him [with] goodness.".
அன்புடன்
அ.முகம்மது அலி ஜின்னா

No comments: