Sunday, February 25, 2018

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே .."

Saif Saif
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே.."
பிள்ளைகளின் பிறந்ததுமே நல்லவனாகவோ,
கெட்டவனாகவோ குணங்கள் அமைவதில்லை..
பிள்ளைகள் வளரும் சூழல் மற்றும் அமையும் நட்பைப் பொறுத்து பழக்க வழக்கங்கள் அமையும்..
அதனால் தான் வாத்தியார் பிள்ளை மக்காகவும்,போலீஸ்
மகன் திருடனாகவும் மாற நேரிடுகிறது..ஒரு சில இடங்கள் விதிவிலக்கு.
ஒன்றாக பிறந்த மக்களுக்கும் ஒரே குணாதிசயங்கள் அமையாமல் போவது இதனால் தான்..மேலும் இரட்டை குழந்தைகளுக்கு கூட வெவ்வேறு குணாதிசங்கள் தான்.

இந்த சூழ்நிலைகளின் பாதிப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதை பார்ப்போம்..
உதாரணமாக தந்தை புகை,மது பழக்கம் உள்ளவராக இருந்தால் அதை பார்க்கும் குழந்தைகள் சில சமயம் அந்த பழக்கத்திற்கு அடிமையாகலாம்..இல்லையென்றால் வெறுத்து ஒதுக்கலாம்..
வெறுப்பதற்கு காரணம் தாயானவள் தந்தையின் இக்காரணங்களுக்காக தந்தையை திட்டும் போது நாம் அக்காரியத்தை செய்தால் தாயின் அன்பை இழக்க நேரிடும் என்ற உணர்வு மனதில் ஆழமாக பதிந்து விடுவது தான்..
குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு அதிகம் தேவைபடுகிறது..அதை இழக்க பிள்ளைகள் விருப்பப் படுவதில்லை..
அதனால் தான் தந்தையை விட குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு அதிகம்.
"அது நல்லவனாவதும்,
கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பதிலே" என்ற வரிகள் எத்தனை உண்மை என்பதும் விளங்கும்.
மனிதன் பலஹீனமானவன் தான்..தப்பே செய்யாதவன் மனிதன் அல்ல..ஆனால் தப்பு என்று தெரிந்த ஒன்றை மீண்டும் மீண்டும் செய்வது தான் தப்பு..
குழந்தைகள் தப்பு செய்யும் போது கண்டிக்காமல் இருந்தால் அக்குழந்தை அந்த தப்பை தொடர்ந்துச் செய்யும்..
தப்பான பழக்கங்களை (கணவன்,மனைவி சண்டை உட்பட)
குழந்தைகளுக்கு முன்னால் தவிர்த்து கொள்வது நலம்..
பிள்ளைகளை எவ்வளவு தான் அறிவுரைகள் சொல்லி வளர்த்தாலும்,
இஸ்லாத்தின் அடிப்படை போதனைகள் இல்லையென்றால் அவர்களிடம் மாற்றங்களை
கொண்டு வர முடியாது..
நம்மில் பலர் பிள்ளைகளை ஓத அனுப்புகிறார்கள்..அது மட்டும் போதாது.
பிள்ளைகளுக்கு இந்த ஓதலோடு மார்க்கக் கல்வி மிக அவசியம்..
அந்த மார்க்கக் கல்வி தான் சின்ன வயதில் மனதில் பல தாக்கங்களை ஏற்படுத்தும்..
எந்த வகையான நண்பர்களோடு பழகினாலும்,மோசமான சூழலில் இருந்தாலும் மனதில் இறையச்சம் உள்ள பிள்ளைகள் தவறிழைப்பது அரிது தான்..
அந்த இறையச்சத்தை அடிக்கடி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இறைவனின் பார்வை எப்போதும் நம்மீது இருந்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை அவர்கள் உள்ளத்தில் பதியம்
போட வேண்டும்..
அவர்களுக்காக அதிகம் துஆ கேட்க வேண்டும்..
சில இடங்களில் பிள்ளைகளை எதற்கெடுத்தாலும் "நாசமா எக்கேடும் கெட்டு போ" என்று ஏசுவதோடு அல்லாமல் "உன்னை வைத்து எங்களுக்கு எதுவும் ஆக வேண்டியதில்லை.." என்று வெறுப்பாக பேசி விடுவார்கள்..
இப்படி வளர்க்கப்படும் குழந்தை பெற்றோரை விரோதியாகவே பார்க்கும்.கெட்ட பழக்கங்களில் இலகுவாக ஆட்பட்டு விடும்..
"நீ தான் எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.தங்கையை பார்த்துக் கொள்ள வேண்டும். உன்னை
தவிர யார் பார்த்துக் கொள்வார்கள்" என்றெல்லாம்
ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து அன்போடு வளர்க்கப்படும் பிள்ளைகள் தவறு செய்ய தயக்கம் காட்டும்.பாசமாக இருக்கும்.
பிள்ளைகளுக்கு வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்திருக்க வேண்டும்.எதையும் மறைத்து வைக்க கூடாது..
வரவு செலவு கணக்குகள் கூட பிள்ளைகளிடம் கொடுத்து பார்க்கச் சொன்னால் வீட்டின் நிலைமையை பிள்ளைகள்
உணர்ந்து நடக்கும்..
இப்படி பெற்றோரின்
நிலை உணர்ந்து இறையச்சத்தோடும், கண்டிப்போடும்,
கண்காணிப்போடும், அன்போடும் வளர்க்கப்படும் பிள்ளைகள் வருங்காலத்தில் சிறந்த தலைமுறையினராக உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
#இன்ஷா அல்லாஹ்..
Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails