Tuesday, February 20, 2018

நாகப்பட்டினம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா




  

[2/21, 7:05 AM] மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு உதவியுடன் இன்று 100 ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவசமாக நாகப்பட்டினம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக ₹ 10,30,000 மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது
[2/21, 7:05 AM] ‪+91 98651 98268‬: இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் ₹ 20 லட்சம் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியரோடு ஆலோசனை செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு தொடங்கி விட்டது.
[2/21, 7:05 AM] ‪+91 98651 98268‬: *முஸ்லிம் ஏழை சகோதரிகளுக்கு தகுந்த உதவி வாங்கிக் கொடு, சமுதாயமே !!* இப்படி முஸ்லிம் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒரு சங்கம் இருப்பதே பலருக்கு (99.99%) தெரியாது !!! இது பற்றி விழிப்புணர்வு கொடுக்காதது நம் சமுதாயத்தின் தவறே!!! கொண்டு சேருங்கள் இச் செய்தியை!!

ஆதரவற்ற முஸ்லிம் விதவைகளுக்கு உதவும் பொருட்டு கர்நாடக நவாப் அவர்களால் “முகம்மதியன் கோஷா விதவை சாரிட்டி” என்ற பெயரில் 01.10.1892 ல் ஒரு சங்கம் துவங்கப்பட்டது. பின்னர் இதன் பெயர் “முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்” என்று மாற்றியமைக்கப்பட்டது.இச்சங்கம் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் (Collector of Madras) அவர்களை தலைவராகவும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) [PA (G) to the Collector of Madras] துணைத் தலைவராகவும் கொண்டு இயங்கி வருகிறது.
மேற்படி முஸ்லிம் மகளிர் சங்கத்தின் உறுப்பினர்களின் சந்தா தொகையையும் பொதுமக்களிடமிருந்து பெறும் நன்கொடையையும் சேர்த்து தணிக்கை செய்தப்பின் எவ்வளவு தொகை வருகிறதோ அதில் பாதித் தொகையை (50 சதவீதம்) அரசு மானியமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கிட அரசாணை (நிலை) எண் 406 பொதுத் (அரசியல்) துறை நாள் 01.8.1991-ல் சங்கங்கள் பதிவுச்சட்டம் XXI of 1860 ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அரசாணை (நிலை) எண் 77 பிவ, மிபிவ(ம) சிந (எஸ்1) துறை, நாள் 11.12.2001-ன் படி ஒவ்வொரு ஆண்டும் மேற்படி சங்கம் வசூலிக்கும் மொத்த தொகைக்கு இணையான தொகையை மானியமாக வழங்கிட அரசு உத்திரவிட்டுள்ளது.
*முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் (MWAS)*
மேற்படி சங்க அமைப்பினை தமிழ்நாட்டிலுள்ள அணைத்து மாவட்டங்களிலும் சங்கங்களின் பதிவுச் சட்டத்தின் கீழ் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் என்ற பெயரில் துவங்கிட அரசு ஆணை நிலை எண் 14, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை நாள் 23.04.2007 ல் உத்திரவிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இச்சங்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சித் தலைவரை பதவி வழித் தலைவராகவும், திட்ட அலுவலர்-மகளிர் திட்டம் அவர்களை பதவி வழி உப தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நல அலுவலரை அமைப்பாளர்/பொருளாளராகவும், முக்கியமான மற்றும் தலை சிறந்த உள்ளூர் மக்களிடயே இருந்து மாவட்ட ஆட்சியர் மூலம் நியமிக்கப்பட்டு, பின்னர் சங்கத்தின் பொதுகுழு கூட்டத்தில் உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் கெளரவச் செயலாளர் ஒருவர், கெளரவ இணைச் செயலாளர் இருவர் மற்றும் உறுப்பினர்கள் மூவர் ஆகியோரைக் கொண்டு இயங்கி வருகிறது.
இச் சங்கத்தின் சில நோக்கங்கள் பின்வருமாறு :
1) ஆதரவற்ற முஸ்லிம் விதவை பெண்களுக்கு உதவி செய்தல் மற்றும் மாதாந்திர உதவித் தொகை வழங்குதல் மற்றும் சங்கத்தின் நிதி நிலைக்கேற்ப வேறு வகையில் உதவி புரிதல்,
2) ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு கைவினைப் பொருள்கள் செய்ய பயிற்சி அளித்தல் மற்றும் சிறு தொழில் துவக்க உதவிடல்,
3) ஆதரவற்ற முஸ்லிம் விதவைகள் மற்றும் வயதானவர்களுக்கு இருப்பிடம் அமைத்துக் கொடுத்தல் .
4) ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தி மருத்துவ உதவிகள் கிடைக்கச் செய்தல்,
5) தையல், பூ வேலைப்பாடுகள் மற்றும் காலணிகள் செய்வது போன்ற பயிற்சிகள் அளித்து எளிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிரின் வாழ்க்கைத் தரம் மேம்படச் செய்தல்,
6) மிகவும் எளிய நிலையில் உள்ள முஸ்லிம் மகளிருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து சலுகைகள்/ உதவி தொகைகள் கிடைக்க வழிவகை செய்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரச் செய்தல்,
7) வியாபாரம், தொழில் மற்றும் கல்வித் துறையில் முஸ்லிம் மகளிர்களுக்கு உதவி செய்து அவர்களை அத்துறையில் தேர்ச்சி பெறச் செய்தல்,
8) சுய உதவிக் குழுக்கள் அமைத்து பயிற்சி அளித்து தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் பலதரப்பட்ட கடனுதவி வழங்கும் திட்டத்தின் (TAMCO) மூலம் தேவையான பெண்களுக்கு சிறிய வியாபாரம் துவக்கக் கடனுதவி அளித்தல்,
9) பொதுவாக கஷ்டப்படும் முஸ்லிம் பெண்களுக்கு சங்கம் தகுதியானவர்கள் என்று நினைத்தால் அவர்கள் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக புதிய திட்டங்கள் தீட்டி உதவி புரிதல்.
இச்சங்கங்கள் துவங்கும் போது ஒவ்வொரு சங்கத்திற்கும் தலா ரூ.1 இலட்சம் விதைத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சங்க வளர்ச்சிக்காக இச்சங்கங்கள் திரட்டும் நிதி ஆதாரத்திற்கு ஒவ்வொரு சங்கத்திற்கும் ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ. 20 இலட்சம் இணை மானியமாக அரசால் 1:1 என்ற விகிதாசாரத்தில் 2011-2012 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டது.
2012-2013 ஆம் ஆண்டு முதல் அரசால் ஒப்பளிக்கப்பட்டு வந்த இணைமானியத் தொகை 1: 2 என்ற விகிதாசாரத்தில் ஒவ்வொரு சங்கத்திற்கும் அதிக பட்சம் ஆண்டிற்கு ரூ. 20 இலட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- பூதலூர் அப்துல் மாலிக்

No comments: