Wednesday, February 28, 2018

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 3 )

வாழ்வியல் தத்துவங்கள் ....!
( பாகம் 3 ) 
*
இருப்பதை விருப்பாக்கு
விரும்பியது இனிதாகும்
இனியதை மகிழ்வாக்கு
மகிழ்ச்சி நிலையாகும்
*
 திறமையை சீர்படுத்து
செயலை நேர்படுத்து
செய்வனயாவும் திறன்படும்
வாழ்வில் செழுமை சேரும்
*
சிந்தித்து திட்டமிடு
நியாயமாய் செயல்படு
நிந்தனைகள் நிறுத்திவிடு
நிம்மதி தேடிவரும்
*
சந்தர்ப்பம் தேடிப்பிடி
தளராது செயல்படு
செய்வினை சீர்படும்
செல்வங்கள் வந்துசேரும்
*
விழுந்துவிட்டால் புதைத்துவிடுவது
மனிதனின் இயல்பு
விழுந்ததும் வீறுகொண்டு எழுவது
வீரனுக்கு அழகு.
*

Tuesday, February 27, 2018

பின் குறிப்பு

வெந்து தணிந்து
விண்ட பகுதிகளின்
கரிக்கட்டை கொண்டு
அடியும் நுனியுமற்று
கிறுக்கும் கோடுகள்
பின்னலிட 
புது உருவம் காட்டும்.
பிண்டம் கருகிய
முடை நற்றமும்
சுவாசத்தில் அடர்ந்து
ரோமக்கால்களையும் மீட்டும்
முடிச்சை அவிழ்க்கவும்
நீட்சியை அளக்கவும்
சோபலென்றால்
கூடுப்புழுக்கள் யென
இன்னொரு கவிதை எழுதலாம் நான்
வேறு என்ன செய்ய?

இவர் ஒரு வாழும் தெரசாவோ .




dr.habibullah with Madam Gerdi Gutperle the founder of Agasthiar Muni Children Hospital on her recent visit to the hospital.
Vavar F Habibullah

பழையன போற்றுதும் புதியன புகுதலும் இயல்பு ,வாழ்த்துவதிலும் மகிழ்வு .








உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
செழுமையாய் சேவை செய்து
பசுமையாய் மனதில் நிறுத்திட
இறை வணக்கம் இயல்பாய் இருந்திட
இறைக் கருணையும் இருத்தல் வேண்டும்
நமக்கும் நற்பண்புகள் வந்திடும்
நமக்கும் நற்பயன்கள் கிடைத்திடும்

தமிழ்ப் பேசும் ஆங்கில படம்.

எழுதியவர் - தாஜ்
தெரு விளக்குகள் எல்லாம் அணைந்து விட்டது. திசைகள் அத்தனையும் பூரணமான இருட்டு. மணி எட்டேகால் சொச்சம்தான். காற்று சூறையாக சப்தம் காட்டியபடி தாறுமாறாக வீசியது. இந்தக் கோடையில், காய்ந்து சருகாகி மடிந்துப்போன சாலைப் புழுதியெல்லாம் காற்றில் மேலெழுந்து கண்களில் அப்பியது. மேலெல்லாம் நாற்றப் பூச்சு. நட்சத்திர மண்டலம் புழுதிப் பெருக்கில் மறைந்துப் போனது. தேய்ந்து போய் வளர்ந்த நிலவையும் காணோம். மின்னல் மின்னி நெளிய, இடி இடித்துக் காட்டியது. மழைவரும் என்று பேசிக்கொண்டு சிலர் ஓட்டமும் நடையுமாய் விரைந்தார்கள்.

தூறல் பலமாக விழுந்தது,  விழுந்த நிலையில் திடுமென நின்றது. சட்டென சுழல் காற்று வேகம் காட்டியது. ஓட்டிவந்த சைக்கிளை தொடர்ந்து மிதிக்க முடியவில்லை. இறங்கிவிட்டேன். சரி, சைக்கிளை தள்ளிக்கொண்டும் போகலாம் என்றாலும் இயலவில்லை. விடாது சுழற்றியடித்த காற்று, சைக்கிளை தள்ளக்கொண்டு போகவிடாது அலைக்கழித்தது.  உடல் பலஹீனம்வேறு. போராட இயலவில்லை. சற்று நேரம் இயங்கவே முடியாமல் அப்படியே நின்றுவிட்டேன். என் முன்னே காலம் இருளாக கவிழ்ந்து கிடப்பதாகப் பட்டது! ரசிக்கக் கூட முடியவில்லை.

Monday, February 26, 2018

இதுவும் ஓர் வகை மனிதாபிமானம்தான்!

Taj Deen
ஓர் பன்னிரெண்டு ஆண்டுகாலம் சௌதி அரேபியாவின் கிழக்கு கடற்கரை நகரமான் 'டமாம்'(Damam)மில் தொடங்கி, அதன் சுற்றுபுற நகரங்களில் நகர்ந்து, சௌதியின் மைய நகரமும், தலைநகருமான ரியாத்,(Riyadh) மற்றும் அதைத் தொட்ட நாலாப்பக்கமும் சுமார் முன்னூறு, நானூறு கிலோ மீட்டர் அளவில் பல திக்குகளிலும் தொழில் சார்ந்து சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்படியொரு வேலை!
சௌதி அரேபிய என்றால்... பெட்ரோலும், பாலைவான்முதான்! அந்நாட்டின் 'பாலைவனம்' ஓர் கண்கொள்ளாக் காட்சி என்பதில் இம்மியும் சந்தேகமே இல்லை! நகரத்தை விட்டு தாண்டிப் போனால்.. பார்க்கும் திக்கெல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம்வரை மஹா சமுத்திரம் மாதிரி மணல்கொண்டு காட்சியாக இருக்கும்!

Sunday, February 25, 2018

உங்கள் தலைக்கு மேலே உயராத ....

#நிஷாமன்சூர்


உங்கள் தலைக்கு மேலே உயராத
பலவீனமான பிரார்த்தனைகளைக் கொண்டு
சிரியாவுக்காகப் பிரார்த்திக்கச் சொல்லாதீர்கள்,
சுவர்க்கத்து மலர்கள் என்று கசிந்துருகி
கொல்லப்பட்ட குழந்தைகளைப்
புனிதப்படுத்தி அமைதி கொள்ளாதீர்கள்
வலியில்லாத பிரார்த்தனைகளும்
ரத்தம் சிந்தாத நல்லாசிகளும்
உறக்கத்தின் சளைவா போல் ஒழுகி வடிகின்றன.
அரசியலற்ற பக்தியின் முனைமழுங்கிய அம்புகளை
தளர்ந்த கைகளில் எய்தபடி புலம்பும்
நோஞ்சான்களின் சாபத்தால்
விளையப்போவது ஒன்றுமில்லை.
#நிஷாமன்சூர்

"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே .."

Saif Saif
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே.."
பிள்ளைகளின் பிறந்ததுமே நல்லவனாகவோ,
கெட்டவனாகவோ குணங்கள் அமைவதில்லை..
பிள்ளைகள் வளரும் சூழல் மற்றும் அமையும் நட்பைப் பொறுத்து பழக்க வழக்கங்கள் அமையும்..
அதனால் தான் வாத்தியார் பிள்ளை மக்காகவும்,போலீஸ்
மகன் திருடனாகவும் மாற நேரிடுகிறது..ஒரு சில இடங்கள் விதிவிலக்கு.
ஒன்றாக பிறந்த மக்களுக்கும் ஒரே குணாதிசயங்கள் அமையாமல் போவது இதனால் தான்..மேலும் இரட்டை குழந்தைகளுக்கு கூட வெவ்வேறு குணாதிசங்கள் தான்.

Thursday, February 22, 2018

அறிய வேண்டிய அரிய மனிதர்கள் ... 17 சமுதாயக்கவிஞர் தா. காசீம்

Colachel Azheem

இசை முரசு நாகூர் ஹனிபா அவர்கள் கம்பீரக் குரலில் பாடிய பல்வேறு பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் மர்ஹூம் தா. காசீம் அவர்கள்.
1960 முதல் 1990 வரை இஸ்லாமிய தமிழ் இலக்கிய உலகில் ஆதிக்கம் செலுத்திய கவிஞர் எழுத்தாளரும் தா. காசீம் அவர்கள்.
*தீன்குலக்கண்ணு எங்கள் திருமறைப்பொண்ணு...
*தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு..
*மதினா நகருக்கு போக வேண்டும்...
*உலகத்தில் நான் உன்னருளை...
*தாயிப் நகரத்து வீதியிலே...
*அண்ணல் நபி பொன்முகத்தை கண்கள் தேடுதே...

Wednesday, February 21, 2018

தகுதியை வளர்த்துவிட்டால். கடின்ம் எளிமை ஆகிவிடும்



விருப்பங்கள் கனவு காண வைக்கின்றது ,
கனவுகளை நினைவாக்க நினைக்க
முயற்சி சிறிதானதால் கனவுகள் பொய்யாகின்றது
செயலில் கவனக்குறைவு வெற்றியில் தடையானது

தேவையில்லாத காரியத்திற்காக  அதிக நேரத்தை செலவிடுவதில் முனைப்பு
ஒவ்வொரு மணிநேரத்திற்கும் இண்டர்நெட்டில் உலாவுதல்
பயனுள்ள ஒன்றை செய்துகொள்ளக்கூடிய நேரம் நேரத்தை எடுத்துக்கொள்வில்லை .
ஓய்வு நேரத்தில் உயர்வாக சிந்திக்கவில்லை
சிந்திப்பதோ சிரமமான காலத்தில்
விருப்பங்கள்  நிறைவேற்ற முடியாதநிலை

Tuesday, February 20, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் எழுத்தாளர் 'சீர்காழி' தாஜ்.......


சீர்காழியைச்சேர்ந்த நண்பர் தாஜ் 'தமிழ்ப்பூக்கள்' என்னும் வலைப்பதிவினை நடாத்தி வருகின்றார். இவரை எனக்குப் பல வருடங்களாகத்தெரியும். இவருடனான எனது தொடர்பு முதன் முதலில் ஏற்பட்டதற்குக் காரணம் தமிழகத்தில் சிநேகா பதிப்பக வெளியீடுகளாக வெளியான 'அமெரிக்கா' மற்றும் 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆகிய நூல்கள் மூலமாகத்தான். அவ்விரு நூல்களையும் தமிழகத்து நூல் நிலையக்கிளைகளிலிருந்து இரவல் வாங்கி வாசித்து, அவை பற்றிய தனது கருத்துகளை நீண்ட இரு கடிதங்களாக அனுப்பி வைத்திருந்ததுடன் இவருடனான எனது தொடர்பு ஆரம்பமாகியது. அக்கடிதங்கள் இரண்டினையும் இன்னும் ஞாபகத்துக்காகப் பாதுகாத்து வருகின்றேன்.


நண்பர் சீர்காழி தாஜ் எழுத்தாளரும் கூட. கவிதைகள், கதைகள் என்று இவரது எழுத்துப்பங்களிப்பு பன்முகத்தன்மை வாய்ந்தது. இணைய இதழ்கள், தமிழகத்து வெகுசன மற்றும் சிற்றிதழ்கள் எனப்பல ஊடகங்களில் இவரது பல படைப்புகள் வெளியாகியுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா




  

[2/21, 7:05 AM] மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் கூட்டமைப்பு உதவியுடன் இன்று 100 ஆதரவற்ற முஸ்லிம் பெண்களுக்கு இலவசமாக நாகப்பட்டினம் மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக ₹ 10,30,000 மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது
[2/21, 7:05 AM] ‪+91 98651 98268‬: இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் ₹ 20 லட்சம் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியரோடு ஆலோசனை செய்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பயனாளிகள் தேர்வு தொடங்கி விட்டது.
[2/21, 7:05 AM] ‪+91 98651 98268‬: *முஸ்லிம் ஏழை சகோதரிகளுக்கு தகுந்த உதவி வாங்கிக் கொடு, சமுதாயமே !!* இப்படி முஸ்லிம் ஏழைகளுக்கு உதவுவதற்காக ஒரு சங்கம் இருப்பதே பலருக்கு (99.99%) தெரியாது !!! இது பற்றி விழிப்புணர்வு கொடுக்காதது நம் சமுதாயத்தின் தவறே!!! கொண்டு சேருங்கள் இச் செய்தியை!!

வெள்ளை துப்பட்டி

பால்ய நாட்களின் நினைவுகளை நாளும் சுமக்கையில் இந்த வெள்ளை துப்பட்டியும் அந்நினைவுகளோடு இணைந்து கலக்க விளைவு வெண்மையாய் சற்று மென்மையாய் காற்றில் அசைந்தாடி இதயத்தை வருடிக் கொண்டிருக்கிறது இன்னமும்!
இப்போதெல்லாம் இஸ்லாமிய சமூகத்தில் வளரும் தலைமுறையில் அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியில் "ஹிஜாப்" என்றாலே அது தற்பொழுது பலரும் அணியும் கருப்பு நிறத்தினாலான "புர்கா" என்றழைக்கப்படும் ஆடை மட்டுமே என்று மனதில் அழுந்தப் பதிந்துப் போய்விட்டது!

மழைக்காலத்து ஈரம்

-தாஜ்

காலை மணி பத்து. டிஃபன் சாப்பிட்டாகிவிட்டது. முற்றத்தில் சூரியனின் உக்ரம் விழுந்து, குட்டிச் சுவற்றைப் பற்றி மெலேறுகிறது. தாயாரின் திட்டு சின்னச் சின்ன வார்த்தைகளின் முனங்களாக கிளம்பி, வெடிக்கத் துவங்குகிறது. கொல்லைப்புறக் கதவை திறக்கிறேன், தளைகொள்ளா பச்சையடர்ந்த மரங்கள் வளைந்து கிடக்கின்றன. நல்ல பருவம் கொண்ட அம் மரத்தின் நாளைய கனிகள், அதன் கிளைகளில் இன்றைய காய்களாக முத்து முத்தெனத் திரண்டுக் கொத்துக் கொத்தாகத் தெரிகிறது. கோழியைத் சேவல் திரும்பத் திரும்ப துரத்துகிறது. பக்கத்து வீட்டில், தாயுக்கும், அவரது மூத்த மகளுக்குமான வழக்கமான வாய்ச் சண்டை, நேரம் தப்பாமல் இன்றைக்கும் தடித்து உரக்க தெளிவாக கேட்கிறது. யார், யார்யாரோடு படுத்தார்கள் என்கிற உச்சக்கட்ட ஆய்வு நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. தினம் தினம் கேட்டு சளித்துப் போன வசவு! ஆனால்,  அவர்களுக்கு அது சலிப்பதாக இல்லை. என்றாலும், பொழுதின் மற்ற நேரங்களில், அந்த தாயும் மகளும், வெளியுலகம் காண கொள்ளும் அன்னோன்னியம் காண்போரை வியக்கச் செய்யும்!

உறவுகளைப் பேணுவோம்


இஸ்மாயில் ஸலபி

இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும்.

துரதிஷ்டவசமாக மார்க்க ஈடுபாடு உள்ள பலரிடம் கூட இன்றைய சமூக சூழல் இரத்த உறவை விட நட்பையும் இடையில் ஒட்டிக்கொண்ட உறவையும் முக்கியத்துப் படுத்தும் நிலை இன்று தோன்றியுள்ளது. நட்புக்காகவும், இன்னும் பல தொடர்புகளுக்காகவும் நேரத்தையும், பணத்தையும் செலவிடத் தயாராகவுள்ள பலர் குடும்ப உறவுக்காக சில நிமிடங்களைக் கூட துறக்கத் துணிவதில்லை.

Monday, February 19, 2018

நேரம் கெட்ட நேரம்.

நேரம் கெட்ட நேரம்.
எழுதியவர் 
Taj Deen / தாஜுதீன் 
----------------
என் பயணங்களை
இரவில் தான் தேர்வு செய்கிறேன்
நீண்டதூரம் இருளில் பயணிப்பது
தவிர்க்க முடியாத அனுபவம்
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
வெள்ளையாய் கண்சிமிட்டுகின்றன
முந்தாநாள் பார்த்த முழுநிலவு
இன்றைக்கு தேய்ந்து கொண்டிருக்கிறது
கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம்
கவிழ்ந்து கிடக்கிறது மையிருட்டு
இருள் பெருக்குமது சுகமானது
யாருக்கும் யார்முகமும் பிடிபடாது
இருளில் எல்லோருக்கும் உண்டு
இன்னொரு முகம்

Friday, February 16, 2018

பழையன போற்றுதும் புதியன புகுதலும் ஒரு புதையலைப்பார்த்த மகிழ்வு உள்ளத்தில்


நீடூரின் பழைய புகைவண்டி நிலைய கட்டிடம் இப்போது இருக்கும் புதியதைவிட பெரியது, அன்றைய மக்களின் விசாலமான மனதைப்போல!
எவெரேனும் ஹஜ்ஜுக்குச் சென்றாலும், திரும்ப வந்தாலும் ரயில் நிலையம் முழுக்க மக்கள் வெள்ளம் தான்!.
மாலை நேரங்களில் மதரஸா ஆசிரியர்கள் மாணவர்களுக்கும் கூட அது ஓர் சிறந்த ஓய்விடம்.
ஆலமரத்தின் விழுதுகளில் தொட்டில் கட்டி ஆடும் சிறுவர்களின் குதூகலம்....
அதெல்லாம் பழைய காலம்!
இன்றைய முதியோர்களின் வசந்த காலம்!

பெண்ணியம் பேணு

தமிழ் பிரியன் நசீர்....................................
கொள்ளை போய்விடாதே!!
உன் கொள்ளையழகுப் பூவழகை
குறி பார்க்கும் குரங்குகளும்
கொத்தித் தின்னும் கழுகுகளும்
மனிதமுலாம் பூசி ..........
மனம் புசிக்க காத்திருக்கும்
புனிதம் மறந்த மிருகங்கள் வாழும்
பொல்லாத காடிது ...!!

தகப்பனார் ....

தகப்பனார் ....
தோலில் சுமப்பவள்
அன்பான அன்னை
தோளில் சுமப்பவர்
வாஞ்சனையான வாப்பா ....
நேரான பாதைகளில்
குடும்பமது பயணிக்க
கூரான அறிவூட்டும்
தலைவனாம் தந்தை

வெளியேற்றம்..!

#நிஷாமன்சூர்
வெளியேற்றம்..!
எப்படியாவது இங்கிருந்து
வெளியேறி விட வேண்டும்
ஒரு பெரும் மீன் வலையின் உயிர்புள்ள நரம்பொன்று
மரணத்தின் கடைசித் துடிப்புகளை
உணர்ந்துணர்ந்து திடுக்குறுவதுபோல
இன்னும் எத்தனை கொலைகளுக்குத்தான் சாட்சியாக இருப்பது
எப்படியாவது இங்கிருந்து
வெளியேறி விடவேண்டும்
நமக்குக் கிடைத்தவை இரண்டு வாய்ப்புகள்
சூதுமிகு கரமொன்றின் குறுவாளாக இருப்பது
அல்லது கொலைவாளில் வழிந்துறையும் குருதியாக இருப்பது
நாம் எப்போதும் முந்தையதையே தேர்ந்தெடுக்கிறோம்
பின்னர் குற்றவுணர்வின் புதைசேற்றில் மூழ்கித் தவிக்கிறோம்
எப்படியாவது இங்கிருந்து
வெளியேறி விடவேண்டும்

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 3 )


சிந்தித்து திட்டமிடு
நியாயமாய் செயல்படு
நிந்தனைகள் நிறுத்திவிடு
நிம்மதி தேடிவரும்
*

சந்தர்ப்பம் தேடிப்பிடி
தளராது செயல்படு
செய்வினை சீர்படும்
செல்வங்கள் சேர்ந்தவரும்

*
விழுந்துவிட்டால் புதைத்துவிடுவது
மனிதனின் இயல்பு
விழுந்ததும் வீறுகொண்டு எழுவது
வீரனுக்கு அழகு.
*

Tuesday, February 13, 2018

இதுதான் காதல் என்பதா?

Yembal Thajammul Mohammad


இறைவனின் திருத்தூதர் என்று அறியப்படும் முன்னரே முஹம்மது(ஸல்) அவர்கள். மக்களிடையே நம்பிக்கையும் புகழும் பெற்றவராக விளங்கினர். இதனால் கவரப்பட்ட கதீஜா பிராட்டியார்(ரலி) அவர்கள், தம்முடைய வணிகப் பொருட்களை விற்கும் பொறுப்பாளராக அவர்களை நியமித்தார்.
முதலாவதாக ஹுபஷா, ஜராஷ்(தாயிஃப்) ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைத்தார். முஹம்மது(ஸல்) அவர்கள் வெற்றிகரமாக வணிகம் செய்து திரும்பியதால் அவர்களுக்கு இரண்டு ஒட்டகங்களை அன்பளிப்பாக வழங்கினர் கதீஜா(ரலி). பின்னர் சிரியாவில் உள்ள பாஸ்ட்ரா’வுக்கு அனுப்பினார்.அப்போது முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்யவும் அவர்களுடைய பண்புநலன்களை ஆய்ந்தறியவும் மைஸரா எனும் ஊழியரையும் உடன் அனுப்பி வைத்தார்.(இந்த பாஸ்ட்ரா’ பயணம் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது)

சுவையான பகோடா!

தேவையான பொருள்கள்
கோஸ் (அரிந்தது)
1கப்
பெரிய வெங்காயம் (அரிந்தது)
1கப்
பச்சை மிளகாய்
3
இஞ்சி பூண்டு விழுது
1 மேசைக் கரண்டி
சோயா சாஸ்
1 மேசைக் கரண்டி
மைதா மாவு
4 மேசைக் கரண்டி
அரிசி  மாவு
2 மேசைக் கரண்டி
சோளமாவு

Sunday, February 11, 2018

காயிதேமில்லத் ஊடகக் கல்விக்கான சர்வதேச அகாடமி ( QIAMS )-யின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானுடன் ஒரு சந்திப்பு

சந்திப்பு : முதுவை ஹிதாயத்


சென்னையில் ஊடகக் கல்விக்காக ஒரு சர்வதேச அகாடமியானது கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் பெயரில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகாடமியை அவரது பேரன் எம்.ஜி. தாவூத் மியாகான் ஏற்படுத்தியுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த அகாடமியை பார்த்து மகிழும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது அந்த அகாடமியின் பொதுச்செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகானை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.
ஊடகக் கல்விக்கான ஒரு சிறப்பு மிகு அகாடமியை ஏற்படுத்தியதற்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின் போது அவர் கூறியதாவது :

Saturday, February 10, 2018

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Colachel Azheem

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் டி. ஏ. ஆசிம் Colachel Azheem
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த சொற்பொழிவாளர் ,மனிதநேயம் பெற்றவர்

Friday, February 9, 2018

கல்வி - படிப்பு - கற்றல்

20-25 வருடம் படித்து 30-35 வருடம் வேலை செய்ய வேண்டும்… இதுதான் கட்டமைக்கப்பட்ட நமது வாழ்ககை முறை.. கல்வி கொடுப்பவனும் வேலை கொடுப்பவனும் ஒருவனே!!!

7 வயதிற்கு பிறகே கற்பதற்கான பக்குவம் வரும் நிலைமையில் ஏன் 3 வயதிலிருந்து பள்ளிக்கு அனுப்பும் கட்டாய நிலமை… இந்த வயதிலேயே சிந்தனையைத் தடுக்கவேண்டும் என்பதே இப்போதைய கல்வி முறையின் திட்டம்… 7 வயது வந்து சிந்தித்து உள்வாங்கும் முன்னே இங்கே வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு வேண்டிய அடிபணிதலை பயிற்றுவிக்கிறார்கள்..

‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நாம்?_

*குழந்தைகளைத் திட்டுங்கள்.!*
_‘குழந்தையைத் திட்டவே மாட்டேன்’ என்று சொல்கிறவரா நாம்?_
_அப்படியெனில் நமக்காகத்தான் இந்தப்பதிவு !_

கையில் கத்தையான செய்தித்தாள்களின் கத்தரிப்புகளுடன் *என்னை சந்தித்த என் நண்பர் ஒரு மனநல ஆய்வியலாளர் !*
இந்திய குழந்தைகளின் தற்கொலை பற்றிய செய்தித் துண்டுகள் அவர் கையில் இருந்தவை !

லண்டனில் கவுன்சலிங் மற்றும் ஆராய்ச்சி செய்யும் அவர் எப்போதாவது இந்தியா வந்து போவார்.
இப்போது அவர்  ‘தற்கால இந்தியக் குழந்தைகளின் மனநிலை’ குறித்து ஓர் ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார் !அதற்கு தோதாகக் கடந்த சில நாட்களாகச் சேகரித்த செய்திகள் அவை. நீலத் திமிங்கல விளையாட்டுத் தற்கொலைகளை அவர் பொருட்படுத்தவில்லை.

சூஃபித்துவம் – உயர் உளவியல்

மாபெரும் அறிஞர்களில் ஒருவரான ஷைகு அஹ்மத் ஸர்ரூக் அண்மையில், அதிக காலத்திற்கு முன் அல்ல, ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன், சொன்னார்கள்: “சூஃபித்துவம் என்பது அறிவுடன் ஒத்திசைந்து இயங்கும் வகையில் இதயத்தை அதனுடன் இணைப்பதற்கான ஒரு கலையாக வடிவமைக்கப்பட்டது.”
அது, இஸ்லாத்தின் நல்ல பண்புகளையும் நடத்தைகளையும் தூய்மையாகக் கட்டி எழுப்புவதுதான்.

*புதிய சிந்தனை அல்ல இது....* *புத்துணர்சியூட்டும் சிந்தனை.*

வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு முட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தான். அவன் தன் ஊருக்கு செல்ல ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி நீரில் இறங்கி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ள நீர் அவனை நிலை தடுமாற செய்தது.

பத்து நிமிடங்கள் முன்னதாக:*

பத்து நிமிடங்கள் முன்னதாக:*

காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.

அஜ்மானில் தமிழக கல்வியாளருடன் ஒரு சந்திப்பு

அஜ்மானில் தமிழக கல்வியாளருடன் ஒரு சந்திப்பு

அஜ்மானில் தமிழகத்தைச் சேர்ந்த கல்வியாளர் ஷேக் ஜப்பார் அலி வசித்து வருகிறார்.
அவருடன் மேற்கொண்ட சந்திப்பில் இருந்து கிடைத்த விபரம் வருமாறு :
ஷேக் ஜப்பார் அலி வாணியம்பாடியில் கடந்த 1948-ஆம் ஆண்டு பிறந்தவர். இவரது பெற்றோர்கள் ஷேக் தாவுது மற்றும் ஜைத்தூன் பீவி ஆவர்.
இவருடன் மனைவி, மூன்று மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது மகள் சென்னையில் உள்ள பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியை பொறுப்பில் இருந்து வருகிறார். இவரது மூன்று மருமகள்களும் அஜ்மானில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகளாக பணியாற்றி வருகின்றனர்.

Thursday, February 8, 2018

அறிய வேண்டிய அறிய மனிதர்கள்...(5). பேராசிரியை நசீமா பானு

 பேராசிரியை நசீமா பானு

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் நெருங்கிய உறவுமுறை பேத்தி என்ற தகவல் என்னை ஆச்சர்யப்படுத்தியது..
பேராசிரியை நசீமா பானு பிறந்தது வளர்ந்தது எல்லாம் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகேயுள்ள தேரூரில்..
ஆரம்பக்கல்வியை சுசீந்திரம் எஸ்எம்எஸ்எம் மேல்நிலைப்பள்ளியிலும், பட்டப்படிப்பை நாகர்கோவில் இந்து கல்லூரியிலும், எம.ஏ.முதுகலைப் படிப்பை திருவனந்தபுரம் காரியவட்டம் பல்கலை கல்லூரியிலும் பயின்று புதுவை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பணியில் சேர்ந்தார்..

Tuesday, February 6, 2018

"அன்னை" என்பவள் நீதானா!

நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து,
நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும்,
நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும்,
நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,

நிற்கதியாய் தவிக்கவிட்டு நின் சொந்தம் விலகிடவும்,
நீ யொருத்தி தனிநின்று நெருடலுடன் வாழ்ந்திடவும்,
நெடுந்தூரம் சென்றிடவே நீசர்சிலர் விரட்டியதால்,
நின்கணவர் நிழல்தொடர்ந்தாய் நித்தமும் இறைதொழுதாய்!

Monday, February 5, 2018

கதிர் வீசிடும் காலை...

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்

நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்

திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் தீனுக்கும்
நீயே அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹ் அல்லாஹ்
அல்லாஹூ அல்லாஹூ
அல்லாஹூ அல்லாஹ்


அரபுலகின் முதல் விண்கலம்...

வானியலையும் , விண்வெளியையும் ஆராய்ச்சி செய்யும் காலம் கடந்த முயற்சியில் அரபுலகம் இறங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரியது..
துபாயில் செயல்பட்டு வரும் முகமது பின் றாசித் ஸ்பேஸ் செண்டர் MBRSC சார்பில் இந்தாண்டு விண்ணில் ஏவும் இலக்குடன் வடிவமைக்கப்படும் சாட்டிலைட் துவக்க நிகழ்ச்சியில் துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் றாசித் அல் மக்தூம் கலந்து கொண்டார்...
எந்தவொரு அந்நிய நாட்டின் தொழில்நுட்ப உதவியும் இல்லாமல் முழுவதும் அரபுலகின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநர்கள் சிந்தனையில் உருவாகும் சாட்டிலைட் கலீபாசாட் என்று பெயரிட்டுள்ளதாக பெருமிதத்துடன் துபாய் பிரதமர் கூறியுள்ளார்
Colachel Azheem

பள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரி

பள்ளிவாசல்ல பயான் பேசுர மாதிரியே பேஸ்புக்ல பேசுனா எவன் கேட்பான்
இதென்ன முஸ்லீம்கள் மட்டும் இருக்கும் இடமா
பொதுதளத்தில் பேசத்தெரியாதவர்களை நட்பில் வைத்திருப்பது
அமைதிக்கி பங்கம் விளைவித்து நட்பில் நஞ்சு வந்துவிடும்
நான் முஸ்லீம் தான் எனது மதவழிபாட்டுதளத்திலும் என் இல்லத்திலும் ..............அதே நேரம்
வேலை பப்ளிக் யாவிலுமே ..... மனிதத்தைவிரும்பும் சராசரி மனிதனே..........................காரணம்
சுமார் 18 வருடங்கள் பலதரப்பட்ட மத மொழி நிறத்தாரோடு வாழ்பவன் அவர்கள் என்னை முஸ்லிமாக பார்ப்பதில்லை பொறுப்பான மனிதனாகவே பார்க்கிறார்கள்
நபிகள் சொல்கிறார்கள் .........குல்லுகும் ராயின் வர்ராயி மஸ்ஊலுன் அன் ரஃயதிஹி .............யென்று அதாவது

Sunday, February 4, 2018

ஒன்ஸ் அப்பான் எ டைம் .... / Abu Haashima


ஒன்ஸ் அப்பான் எ டைம் ....
அதாவது கொஞ்ச காலத்துக்கு முன்னாலே...
குமரி மாவட்டம் அப்படின்னு ஒண்ணு தமிழ் நாட்டிலே இருக்கு.
" வஞ்சி நாடதனில் நன்செய்
நாடெனச் செந்தமிழ் வழங்கும்
தேயம் ஒன்றுளது - அதன்
அந்தமில் பெருவளம் அறியார் யாரே "
அப்படின்னு மனோன்மணியம் சுந்தரனார் புகழ்ந்து பாடிய செழிப்பான நாடு நாஞ்சில் நாடு.
" பண்ணைப் பழுத்த பழ நாடு - சுற்றிப்
பார்த்திட கண்கள் குளிரும் நாடு " என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும் பாடியிருக்காரு.
நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் இந்த மாவட்டம் நீர்வளம் , நில வளம் , மலைவளம், கடல் வளம் என எல்லா வளமும் பெற்று எழிலோடு இலங்கும்
செழுமை நிறைந்த பூமி !
ஆனி ஆடிச் சாரல் இந்த மண்ணுக்கே உரித்தான முத்தான வான் முத்து.
வாழையில் எத்தனை
வகை உண்டு என்பதை இங்கேதான் கேட்க வேண்டும்.