Sunday, October 16, 2016

ஜன்னலை திற காற்று வரட்டும் (TRUE STORY)

Vavar F Habibullah
1980 களின் துவக்கத்தில்....
நான் என் மாமாவின் ஜலால் மருத்துவமனையில் CMO மற்றும்
மெடிகல் டைரக்டராக பணி புரிந்த நேரம்.
ஒரு புகழ்பெற்ற குடும்பத்தை சார்ந்த பெண் டாக்டர் அங்கு பணி புரிய விருப்பம் கொண்டு
என்னை வந்து சந்தித்தார்.அவருடன் அவரது தாயாரும் வந்திருந்தார்.தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சில விபரீதங்கள் காரணமாகவே தன் மகள் இங்கு பணி புரிய ஆர்வம் கொண்டிருப் பதாக அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு முஸ்லிம் பெண் டாக்டர் என்பதால் அந்த ஊர் ஜனங்களுக்கு அவரை மிகவும் பிடித்து போய் விட்டது.
சற்று நாட்கள் செல்ல...

அவர் கணவரை விவாகரத்து செய்த விஷயம் சிலருக்கு தெரிய வந்தது.
அவர் தனிமையில் வாழ்வதை தெரிந்து
கொண்ட சில பெரிய மனிதர்களும்,தனவான் களும், சில கனவான்களும் அவரை இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ள தூது விட்டனர்.
இதை அறிந்த டாக்டரும் அவர் குடும்பமும் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானது. இதை என்னிடம் சொல்லி அவர்கள் மிகவும் வருந்தினர்.
ஒரு நாள் அவர் தனது ராஜினாமா கடிதத்தை
என்னிடம் தந்து விட்டு பணியில் இருந்து
விலகி விட்டார்.
டாக்டரின் கதை சற்று துயரமானது...
அவரது கணவர் ஒரு பெரிய குடும்பத்தை
சார்ந்தவர். அமெரிக்காவில் பணிபுரியும்
மருத்துவர்.திருமணம் முடிந்த பின்னர் மனைவியை அமெரிக்கா அழைத்து சென்று
விட்டார். கணவன் மனைவி உறவுகள் அங்கு சரியாக அமையவில்லை.
மனைவியை பெரிய அளவில் கொடுமை செய்ய முற்பட்டார் கணவர். வீட்டில்
அடைத்து வைத்து சித்திரவதை செய்தார் அவர். தாக்கு பிடிக்க முடியாத மனைவி ஒருநாள் வீட்டை விட்டு தப்பித்து சென்று நேராக போலீஸ் நிலையம் சென்றார்.தனக்கு நேர்ந்த துயர சம்பவங்களை பட்டியலிட்டு போலீஸிடம் கொடுத்தார்.
அமெரிக்க போலீஸ் ஆக்சனில் இறங்கியது.
கணவர் கைது செய்யப்பட்டார். அவரின் மருத்துவ பதவி ரத்து செய்யப்பட்டது.
பெண் டாக்டர் பாதுகாப்புடன் இந்தியாவுக்கு
அனுப்பி வைக்கப்பட்டார்.இந்தியா வந்த பின் மண விலக்கும் பெற்றார்.
சில வருடங்கள் உருண்டன....
ஒரு நாள் குடும்பத்தோடு என்னை காண
வந்தார்.அவரது இரண்டாவது கணவரையும் அழைத்து வந்தார்.கணவர் ஒரு பேராசிரியர்.
அவர தந்த தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவரது முதல் கணவர் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருப்பதாகவும் தினமும் வீட்டிற்கு வந்து தொந்தரவு தருவதாகவும்,ஒரு முறை அவர் பலமாக அடித்து காயப்படுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.
(Her first husband(doctor) has repeatedly beaten her second husband (professor) in front of her almost every day and made him miserable)
அரசியல் பக்க பலமுள்ள குடும்பம் என்பதால் போலீஸ் கூட பாராமுகமாக இருப்பதாகவும் நான் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
என்றாலும் முதல் கணவரின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறைந்ததாக தெரியவில்லை.
இதனால் மனம் உடைந்த இரண்டாம் கணவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி போய் விட்டார்.அவர் ஓடிப் போன பின்னர் தான் முதல் கணவரின் தொல்லைகள் ஓரு முடிவுக்கு வந்தன.
விவாக ரத்து ஆன பின்னரும் முதல் கணவன் மார் தங்கள் முன்னாள் மனைவியருக்கு தொல்லைகள் தருவது ஏன் என்பது மட்டும் புரியவில்லை.
சட்டங்கள் பாதுகாப்பு தரலாம்.
தொடரும் உறவிலிருந்து பாதுகாப்பு
பெறுவது எப்படி....
விவாகரத்து பெற்ற பின்னரும் முதல் மனைவியை பிரிய மறுப்பதேன்?
தொல்லைகள் தருவது ஏன்?
அவர்கள் வாழ அநுமதிக்காதது ஏன்?
ஆண் 'பொசசிவ் மைண்ட்' செட் அப்பால் வரும் பின் விளைவா இல்லை தன் உரிமையை பிறருக்கு விட்டு கொடுக்க இயலாத மனப்பான்மையா?
இன்றுள்ள சூழலில் மலிந்து வரும் விவாக ரத்து மேளாவில் இந்த புதிருக்கான விடையை தேடிக் கண்டு பிடிப்பது சற்று சிரமமான விஷயம் தான்.
சரி....தலாக் எப்போது செய்யலாம்?
IT IS BETTER TO DIVORCE
BEFORE MARRIAGE THAN
AFTER THE MARRIAGE.


Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails