Wednesday, October 5, 2016

மரணம் இப்படி அடுத்துதான் இருக்கிறது


என்னப்பா எப்படி இருக்கிறே, இப்ப ஒண்ணும் இல்லே அண்ணன், முடியலியே என்று மருத்துவமனைக்கு வந்தேன், இரத்தம் பரிசோதித்து விட்டு பாகிஸ்தான் டாக்டர் சொன்னார் கடுமையான மலேரியா ஜுரம், மருந்தெல்லாம் தந்து இப்போ ஒண்ணுமில்லே மாலை நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவேன், பிறகு ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு நான் கூப்பிடுகிறேன், அப்ப பேசலாம் என்று மூன்றரை மணிக்குச் சொன்னான், அப்படிச் சொன்னவன் அந்த ஐந்தரை மணிக்கு தொடர்பை தாண்டி அங்கே சென்று விட்டான், இனி மஹ்ஷரில்தான் அவனை என்னால் சந்திக்க முடியும்.
இதுவெல்லாம் இன்றைக்கு மௌத்தாகிவிட்ட என் உடன் பிறந்த தம்பி நஜீமுல்லாவைப் பற்றி நான் சொல்லவரும் செய்திதான். மரணம் இப்படி அடுத்துதான் இருக்கிறது என்பதை உறுதியுடன் மனதில் எப்போதும் கொண்டிருக்கும் என்னையும் கூட இந்த இரண்டு மணிக்கூர் இடைவெளியில் நடந்து விட்ட மாற்றம் நிலைகுலைந்து போகத்தான் வழி செய்திருக்கிறது. எனினும் என்னை இப்படி ஒரு பதிவு போடவும் வைத்திருக்கிறது.
நண்பர்களே, அன்பர்களே, இதை கண்ணுறும் யாவரும் மரணித்து இறைவனிடம் சேர்ந்து விட்ட என் தம்பிக்காக அவன் இரட்சிப்புக்காக துவா செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன், உங்கள் உள்ளம் உருகும் துவா எனக்கு பொறுமையையும் இந்த துயரத்தை கடந்து செல்லவும் உதவும், அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன் !





உகாண்டா வாழ் நண்பர்களுக்கு, இன்று மாலை வபாத்தாகிவிட்ட என் தம்பி நஜீமுல்லாவின் ஜனாஸா நல்லடக்கம் நாளை 5/10/16 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வாண்டகயா பள்ளியில் நடைபெறும் மய்யித்து தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் என்பதையும், வாய்ப்புள்ளோர் அந்த தொழுகையில் கலந்து அவருக்காக பிரார்த்திக்க வரும்படியும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
நாளை மாலை 4.00 மணி, வாண்டகயா பள்ளி

Raheemullah Mohamed Vavar


எனது தாய் மாமன் மகன் வாவர் நஜீமுல்லாஹ் இன்று மாலை ஜின்ஜா, உகாண்டாவில் வஃபாத் ஆகிவிட்டான்.
இவர் வாவர் டாக்டர் ஹபீபுல்லாஹ், வாவர் அபு ஹாஷிமா, வாவர் ரஹிமுல்லாஹ், வாவர் அத்தாவுல்லாஹ் மற்றும் வாவர் செய்ஃபுல்லாஹ்வின் சகோதரர்.
அல்லாஹ் அன்னாரின் பாவத்தை மன்னித்து சுவர்க்கத்தில் நல்லடியார் கூட்டத்தில் சேர்ப்பானாக.
நண்பர்கள் அவனுடைய மஹ்ஃபிரத்துக்கு துவா செய்யவும்.
Death notification.
My first cousin Vavar Nazeemullah died today at Junja, Uganda.
Please pray for him.
Mohamed Kowdu

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
யா அல்லாஹ்! இந்த சகோதரரை நீ மன்னிப்பாயக! இவர் விட்டுச் சென்றவைகளுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! இவருடைய கப்ரை விசாலமானதாக்குவாயக!  அதில் ஒளியை ஏற்படுத்துவாயாக/ஆமீன்







No comments:

LinkWithin

Related Posts with Thumbnails