Saturday, October 15, 2016

நீதி தேவன் மயக்கம்Vavar F Habibullah
நீதி தேவன் மயக்கம்
'சட்டம் ஒரு இருட்டறை....'
சொன்னவர் அறிஞர் அண்ணா.
ஒரு படத்தில் எம்ஜிஆர் பாடுவார்...
'நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா!
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா......!'
சட்ட வல்லுநர்களால் சட்டத்தை வளைக்கவும் முடியும், நிமிர்த்தவும் முடியும் என்பதற்கு இவை சான்று பகர்கின்றன.
மனித சமுதாயத்தை நல்வழியின் பால் அழைத்து செல்லவே சட்டங்கள் பயன்படு கின்றன. நல்ல பாதைக்கு அழைத்து செல்ல இயலாத மனித சட்டங்களால் மனித குலத் துக்கு எந்த பயனும் இல்லை.
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் பிரதம நீதி பதிகளின் பிரதான சேம்பரில் சட்டங்களை மனித குலத்துக்கு வழங்கிய பிதாக்களின் பட்டியல் (Greatest Law Makers of the World) அவர்கள் பெயரால் அழகாக அணி வகுத்து ஜட்ஜ்களின் இருக்கைகளை சுற்றிலும் அலங்கார வடிவில் நிர்மாணிக்கப்பட்டு இன்றும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது

மோசஸ், சாலமன் வரிசையில் முகமது நபியின் பெயரும் பதிக்கப்பட்டுள்ளது.
முகமது நபியை "தி கிரேட்டஸ்ட் லா மேக்கர் ஆப் த வேர்ல்ட்" என்று புகழாரம் சூட்டுகிறது.
குரான் தரும் சட்ட திட்டங்கள் எக்காலத்துக்கும் உகந்தது என்பதை ஊர்ஜிதம் செய்யும் வகையில் குரான் பிரதி ஒன்றும் செதுக்கப்பட்டு காட்சி அளிக்கிறது.
பிரான்சின் மாவீரன் நெப்போலியன் முகமது நபியின் "சரீயத்" குடும்ப உறவு சட்டங்களை வானளாவ புகழ்ந்து பேசுகிறான்.அவன் இயற் றிய 'நெப்போலியன் கோட்' Nepoleon Code..
கூட முகமது நபியிடம் இருந்தும், திருகுர்ஆனில் இருந்தும் கடன் வாங்கியதாக வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறான்.
பிரஞ்சுப்புரட்சியின் தத்துவங்களான
சமத்துவம், சகோதரத்துவம் போன்றவற்றை முகமது நபியின் செயல்பாட்டிலிருந்து கற்றுக் கொண்டதாக அவன் திறந்த மனதோடு ஒப்புக் கொள்கிறான்.
ஆசியா - ஆப்பிரிக்கா இரு துருவங்களுக்கி டையே வாழும் மனிதர்களின் கருப்பு, வெள்ளை நிற - இன வேறுபாடுகள் நீங்கி மனிதனில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாடு நீங்க இஸ்லாம் வகுத்த பலதார மணம் ஒன்றே சிறந்த வழி என்று போதனை செய்கிறான்.
பல இனங்களை உள்ளடக்கிய ஒரு குடும் பத்தில் உருவாகும் குழந்தைகள் மூலமே ஒரு சமத்துவம் நிறைந்த ஒரு சமுதாய அமைப்பை உருவாக்க இயலும் என்பது அவனது கருத்தாக இருந்தது.
நிற - இன பேதங்கள் மறைய இதுவே சரியான வழி என்பது அவனது நம்பிக்கையாகவும் இருந் தது. இதனாலேயே நெப்போலியன் பிரஞ்சு மக்களால் 'அலி போனபார்ட்' என்று செல்லமாக அழைக்கப்பட்டான்.
குறிப்பாக சொன்னால் முகமது நபியின் கொள்கைகளை தாங்கி பிடிக்கும் ஒரு தீவிர பக்தனாகவே அவன் தன்னை காட்டிக் கொண்டான் என்பதே சரித்திரம் அவனைப் பற்றி எழுதும் வரலாறு.
பிரஞ்சுப் புரட்சியின் நாயகன் மாவீரன் நெப் போலியன் போனபார்ட் ......
'முகமது நபியே வீரத்திலும் ஞானத்திலும் தனக்கு ஒரு இனஸ்பிரேசன் ஆக திகழ்ந்தார்' என்று மனம் திறந்து ஒப்புக் கொள்கிறான்.
இந்த பண்பினாலேயே முகமது நபியை பற்றி அந்த நாளில் தன் புத்தகத்தில் தாறுமாறாக எழுதிய தத்துவ மேதை வால்டேரை மிகவும் கண்டித்தான்.கடுமையாக விமர்சிக்கவும் செய்தான்.

Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails