துரோகியின் குற்றச்சாட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும்
உண்மையின் சிறுதுளிக்குள்
மூழ்கி மூர்ச்சையடைகிறாய் நீ
பின் நேர்மையின் தடயங்களைச் சிறு காகிதப் படகாக்கினாய்
பின் இக்கட்டான தருணங்களில் அணிந்திருந்த நம்பிக்கைகளை துடுப்பாக்கினாய்
பின் ஆரம்பகால எதிர்பார்ப்புகளற்ற உழைப்பை
Monday, October 31, 2016
Sunday, October 30, 2016
சுவைத்துக் கொண்டே இருப்பேன் ....!
வாழ்வில்
அறியாமையை
அகற்ற முயன்று
முடிவில்லா தொடர் கண்ணியில்
அங்கமானேன்
வாழ்வின்
தேடல்களில்
தொடர்ந்து சென்று
மூழ்கிவிடாமல் முழுமூச்சுடன்
நீந்துகிறேன்
அறியாமையை
அகற்ற முயன்று
முடிவில்லா தொடர் கண்ணியில்
அங்கமானேன்
வாழ்வின்
தேடல்களில்
தொடர்ந்து சென்று
மூழ்கிவிடாமல் முழுமூச்சுடன்
நீந்துகிறேன்
Friday, October 28, 2016
நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்./ கிருஷ்ணன்பாலா
நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துக்கள்.
உங்களுக்கு நல்ல சரவெடி ஒன்றைப் பரிசளிக்கின்றேன்,; இதைப் பத்திரமாகக் கொளுத்திப் போடுங்கள்.
வெடிக்கட்டும் சர வெடிகள்
-----------------------------------------
தேனும் பாலும் ஆறாய் ஓடும்;
திருவாளத்தான் தென்நாட்டில்;
நானும் நீங்களும் நம்புகிறோம்;
நம்தலை வர்கள் சொல்கின்றார்!
மானம் கெட்ட அரசியலை
மாய்ந்து மாய்ந்து தினம் பேசி
நானும் நீங்களுமிருந்து விடில்
நமக்கேன் துன்பம்? சொல் தோழா!

Tuesday, October 25, 2016
திருமறையின் தோற்றுவாய்” -ஓர் அறிமுகம்..../ ஏம்பல் தஜம்முல் முகம்மது
”திருமறையின் தோற்றுவாய்” என்று தமிழுலகம் போற்றியுரைக்கின்ற திருக் குர்’ஆனின் முதல் அத்தியாயமான ”அல்-ஃபாத்திஹா சூரா”வை முற்றிலும் தழுவி எழுதப்பட்ட ஆக்கம் இது:-
Yembal Thajammul Mohammad---------------------------------------------------------------------------
வெளிச்ச வாசல்….!
===============================================
1.அளவே இல்லா அருளாளன்
நிகரே இல்லா அன்பாளன்
நலமே செய்யும் பண்பாளன்
நாயன் அல்லாஹ் திருப்பெயரால்...
என் ஆசிரியர் பணி நியமனமும் விலகலும். ..!
Hilal Musthafa
1979--ஆம் ஆண்டாக இருக்கலாம். ஆம். அப்படித்தான் நினைவிருக்கிறது.
அந்தக் கால கட்டங்களில் தலைவர் அப்துஸ் ஸமது சாஹிபின் மணிவிளக்கு மாதவிதழில் நான் துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். மச்சான் நாகூர் ஜபருல்லாஹ்வும் என்னுடன் துணையாசிரியராகப் பணி புரிந்து வந்தான்.
மணிவிளக்கு அலுவலகம், மண்ணடி மரைக்காயர் லெப்பைத் தெருவில் இருந்தது. அதற்கு எதிர்ப் புறம் ஏழு கட்டிடம் தாண்டி முஸ்லிம் லீகின் தலைமையகம் இருந்தது.மாநில முஸ்லிம் லீகின் தலைமை நிலையப் பணியையும் நாங்கள் கவனித்துக் கொண்டு வந்தோம். மணிவிளக்கில் சம்பளம். தலைமை நிலையத்தில் சமூக சேவை.

மார்பகப் புற்றுநோய் — கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 2)
Shahjahan R
கட்டுக்கதை-11 : குடும்பத்தில் ஒருவருடைய தந்தைக்கு மார்பகப் புற்றுநோய் இருந்தது என்பது, அவருடைய தாய்க்கு மார்பகப் புற்றுநோய் இருந்த அளவுக்கு ஆபத்துக் காரணி அல்ல.தாயாருக்கு புற்று நோய் இருந்தது என்பது மகளுக்கு எந்த அளவுக்கு ஆபத்துக்காரணியோ, அதே அளவுக்கு தந்தைக்கு இருந்ததும் ஓர் காரணியாகும். ஆனால், ஆண்களுக்கு மார்பகப் புற்றுநோய் மிகவும் அரிதாகவே (ஆயிரத்தில் ஒருவருக்கு) வருகிறது. குடும்பத்தின் பரம்பரை நோய் வரலாற்றை மதிப்பிடும்போது எல்லாருடைய நோய்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை-12 : கருச்சிதைவு செய்து கொள்வதால் புற்றுநோய் ஆபத்து அதகரிக்கும்.
தவறு. பெண்களின் வாழ்வில், பல்வேறு காரணங்களால் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். ஹார்மோன்களின் மாற்றம் மார்பகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியை ஹார்மோன்கள் தூண்டி விடுகின்றன. கருவுறுதல் அல்லது கருச்சிதைவும் ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால், (இயற்கையான அல்லது செயற்கையான) கருச்சிதைவு காரணமாக மார்பகப் புற்றுநோய் வரும் ஆபத்து அதிகரிப்பதில்லை என ஆய்வு முடிவுகள் காட்டியுள்ளன.
அறிந்தும் அறியாதது ....!
இருப்பதைத்
தக்கவைத்துக்கொள்ள
அத்தனை முஸ்தீபுகளையும்
அவதானித்தும்
கைவிட்டு
போய்விடும் சிலவும்
இருக்கும் பலவும்
தன்னிருப்பை தெளிவுபடுத்த
தக்கவைத்துக்கொள்ள
அத்தனை முஸ்தீபுகளையும்
அவதானித்தும்
கைவிட்டு
போய்விடும் சிலவும்
இருக்கும் பலவும்
தன்னிருப்பை தெளிவுபடுத்த
மார்பகப் புற்றுநோய் — கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 1)
Shahjahan R
• தவறு. மார்பகத்தின் அமைப்புக்கேற்ப வடிவமைக்கும் (உட்புறம் மெல்லிய இரும்பு அல்லது பிளாஸ்டிக் பட்டைகள் வைத்த) பிரா அணிவதால், அது நிணநீர் கணுக்களை அழுத்துகிறது, அதனால் மாசுகள் உடலுக்குள் தங்கி விடுகின்றன, அதனால் மார்பகப் புற்றுநோய் வருகிறது என்ற கதை அபத்தமானது. அறிவியல்ரீதியாக பொருந்தாதது. அணியும் பிராவின் வகை அல்லது அதன் இறுக்கத்துக்கும் மார்பகப் புற்றுநோய்க்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப (இறுக்கமாகவோ தளர்ச்சியாகவோ) பிரா அணியலாம், அணியாமலும் இருக்கலாம்.
கட்டுக்கதை-2 : மார்பகத்தில் வரும் கட்டிகள் எல்லாமே புற்றுக்கழலைகள்தான்.
🇴🇳 🇹🇭🇮🇸 🇩🇦🇾 -இது ஒரு உண்மை சம்பவம்...
Saif Saif
கணவருக்கு வேறு ஊருக்கு மாற்றல் வந்து விட்டது..கூடவே பதவி உயர்வு..ஆனால் அவளுக்கு ஏனோ அவ்வளவு மகிழ்ச்சியில்லை..ஆனால் எதையும் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை..
புது ஊருக்குப் போன ஒரே மாதத்தில் அவளுக்கு உடலெல்லாம் எரிச்சல்,தோல் அரிப்பு ..
சூடு, அலர்ஜி என்று கணவர் ஆறுதல் சொல்லி மருந்து வாங்கி கொடுத்தாலும் நாளுக்கு நாள் எரிச்சலும் ,அரிப்பும் அதிகமாகிப் போனது...
வேறு வழியின்றி ஒரு தோல் மருத்துவரை சந்தித்த போது
"தோலெல்லாம் அரிக்குது சமயத்துல துணியெல்லாம் கூட ஈரமாகுது.." அவள் டாக்டரிடம் சொன்னாள்..
அவளுடைய பேச்சில் ஒரு வித கோபமும் ,விரக்தியும் கலந்து கிடப்பதை கண்டு கொண்ட டாக்டர் கேட்டார்.
"என்னம்மா பிரச்சினை..எதையாவது மனதில அடக்கி வச்சிருக்கியா வெளியில சொல்ல முடியாததா..?
அதற்கு மேல் அவளால் மறைக்க முடியவில்லை..
Monday, October 24, 2016
மார்பகப் புற்றுநோய் - கட்டுக்கதைகளும் பதில்களும் (பகுதி 3)
by Shahjahan R
கட்டுக்கதை-16 : பருமனாக இருக்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு மற்றவர்களை விட அதிகம்.
• பருமனாக இருப்பதாலேயே மார்பகப் புற்றுநோய் வருவதில்லை. ஆயினும். உடல் பருமன் அல்லது அளவுக்கு மீறிய எடை புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கவே செய்கிறது. குறிப்பாக, மாதவிலக்குப் பருவம் கடந்தவர் அல்லது வாழ்வின் பிற்காலத்தில் பருமனானவர் என்றால், நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.
கட்டுக்கதை-17 : கருத்தரிப்பு சிகிச்சைகளால் மார்பகப் புற்றுநோய் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
• மார்பகப் புற்றுநோய்க்கும், பெண்களுக்கே உரிய ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோனுக்கும் தொடர்பு உண்டு; எனவே, கருத்தரிப்பு சிகிச்சைகள் புற்றுநோயை உருவாக்கும் என்ற கருத்து உருவானது. ஆனால், ஆய்வுகளில் அதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தக்காரணியை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இத்துறையில் ஆய்வுகள் நடத்துவது அவ்வளவு எளிதான செயலும் அல்ல.

"இந்த வருண்காந்தி யார்?
அப்துல் கையூம்
வருண்காந்தி விஷயம் ஒரேநாளில் உலகம் முழுதும் பரவி விட்டது போலும். இன்று ஒரு அரபி நண்பர் கேட்டார் "இந்த வருண்காந்தி யார்? காந்திஜியின் கொள்ளுப் பேரன்தானே?" என்று. பொதுவாகவே காந்திஜியின் மீது அரபிகளிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு. பாவம் காந்தி பெயர் இப்படி நாறுகிறதே என்று நினைத்தேன்.காந்தி குடும்பத்துக்கும் நேரு குடும்பத்திற்கும் ஒரு எழவு சம்பந்தமும் இல்லை என்று புரிய வைப்பதற்குள் எனக்கு தாவு கழன்று விட்டது.
ரவீந்தரநாத் தாகூருக்கும் ஷர்மிளா தாகூருக்கும் எப்படி எந்த சம்பந்தமும் இல்லையோ அப்படித்தான் இதுவும்.
இவ்வளவு குழப்பத்திற்கும் காரணம் பெரோஸ் காந்திதானே..?
பெரோஸ் ஜஹாங்கிர் கேந்தி (Feroze Jahangir Ghandy) பார்ஸி சமூகத்தைச் சார்ந்தவர். அவருடைய மதம் Zoroastrianism. ஃபெரோஸ் கான் உடைய தந்தை பெயர் ஃபரீதுன் ஜஹாங்கிர் காந்தி .
மதவெறியோ துவேசங்களோ இல்லாத ஒரு நாடு.
பின்தங்கிய ஒரு நாடு, இன்னமும் பன்னாட்டு உதவிகள் கொண்டு பொருளாதாரத்தை கட்டமைத்து வரும் ஒரு நாடும் கூட, தலைநகரில் கூட உள்கட்டமைப்புக்கள் இன்னும் சரிவர உருவாக்க முடியாத ஒரு நாடு, என்றாலும்........
பெண்கள் எல்லாம் அதிகாலையிலும் நடு இரவிலும் சர்வ சாதாரணமாக சுதந்திரமாக தங்கள் பணி நிமித்தமும் இன்னமும் அவசர அவசியங்களுக்கு சாலைகளில் நடந்து சென்று கொண்டிருக்கும் காட்சி இங்கே மிக மிக சாதாரணம்.
தம்பி நஜீமுல்லாஹ்வின் இறப்புக்கு பிறகு இன்று சந்தித்த ஒரு கத்தோலிக்க பாதர்- என் கரங்களைப் பற்றி ஆறுதல் கொள்ளுமாறு பரிந்து பேசி, இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் என்று சொல்லி வைக்கிறார்.
ஆக, கற்பழிப்புக்களோ, பாலியல் வன்கொடுமைகளோ, மிக முக்கியமாக ஒரு நாட்டை முழுவதுமாக சீரழிக்கும் மதவெறியோ இல்லை துவேசங்களோ இல்லாத ஒரு நாடுதான் இந்த உகாண்டா, இப்படி இருப்பதால் நிச்சயம் இந்த நாடு முன்னேறத்தான் செய்யும் !

Raheemullah Mohamed Vavar
Friday, October 21, 2016
இரவு நேரத்தில்
Abu Haashima
இரவு நேரத்தில்
கணவன் உண்டது போக மீதமிருப்பதை உண்ணலாம் என்று காத்திருந்து ...கணவனும் வந்து ...
அவன் பக்கத்திலிருந்து பரிமாறி ...
பேச்சு சுவாரஸ்யத்தில் கணவன் மிச்சமில்லாமல் உண்டு முடிக்க ...
மலர்ந்த முகத்தோடு பாத்திரங்களை ஒதுக்கி விட்டு வரும் மனைவியிடம் ....
" நீ சாப்பிடவில்லையா ?" என்று
கணவன் கேட்க ....
" எனக்கு பசியாக இருந்தது . அதனால் நீங்கள் வருவதற்கு முன்னாலேயே உண்டு முடித்து விட்டேன் " என்று சொல்லும்
மனைவியை வரமாகப் பெற்றவன்....
என்ன செய்வான் ?
சென்ற வருட குவைத் மழை ...
by.J Banu Haroon
மழைக்கு தயாராகி விட்டது வானம் ...
இரண்டு நாட்களாக இரவினில் சாரல் ...
விடிந்ததிலிருந்தே விடியற்காலை தான் ...
பட்டை தீட்டின வெயிலும் போச்சு ...
சூரியனையும் காணவில்லை ...
சந்திரனையும் காணவில்லை ....
இன்னும் இருட்டவில்லை ...தூரவில்லை ...
குடைகளை பத்திரப்படுத்துகிறேன் ....
வானமும் குடை பிடித்திருக்கிறது ....
பனிப்பொழிவுபோல் குளிர் நிறைக்கிறது ...
எப்போது பெய்யும் மழை ?....
அடிக்கடி அண்ணாந்து பார்க்கச் சொல்கிறது ...
சென்ற வருடம் ஐப்பசி இரண்டில் ..
ஆரம்பித்த அடைமழை ....
விடாது பெய்து எங்கும் நிறைத்தது ...
கடலூரை மூழ்கடித்து ....
போக்குவரத்தை துண்டித்து படுத்தியது ...
சென்னையை மூழ்கடித்து ...
எங்கும் போட் விட்டு அலைக்கழித்து ..
அமைதி தொலைக்க வைத்தது ...
நாங்களும் சென்னையில் தான் அப்போது ...
சென்ற வருட குவைத் மழை ...
==================================
இன்று ,மழைக்கு தயாராகி விட்டது வானம் ...
இரண்டு நாட்களாக இரவினில் சாரல் ...
விடிந்ததிலிருந்தே விடியற்காலை தான் ...
பட்டை தீட்டின வெயிலும் போச்சு ...
சூரியனையும் காணவில்லை ...
சந்திரனையும் காணவில்லை ....
இன்னும் இருட்டவில்லை ...தூரவில்லை ...
குடைகளை பத்திரப்படுத்துகிறேன் ....
வானமும் குடை பிடித்திருக்கிறது ....
பனிப்பொழிவுபோல் குளிர் நிறைக்கிறது ...
எப்போது பெய்யும் மழை ?....
அடிக்கடி அண்ணாந்து பார்க்கச் சொல்கிறது ...
சென்ற வருடம் ஐப்பசி இரண்டில் ..
ஆரம்பித்த அடைமழை ....
விடாது பெய்து எங்கும் நிறைத்தது ...
கடலூரை மூழ்கடித்து ....
போக்குவரத்தை துண்டித்து படுத்தியது ...
சென்னையை மூழ்கடித்து ...
எங்கும் போட் விட்டு அலைக்கழித்து ..
அமைதி தொலைக்க வைத்தது ...
நாங்களும் சென்னையில் தான் அப்போது ...
Thursday, October 20, 2016
இருப்பும் பொழைப்பும் ....!
ரோமாபுரிக்குப் போனால் ரோமானியனாக இரு!
இது ஒரு சொல்வழக்கு, வேறொன்றும் இல்லை. இதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் ஒரு ஊருக்கு போனால் அங்குள்ள மக்களோடு அவர்களது கலாச்சாரத்தோடு ஒத்துப்போக வேண்டுமென்பதே யன்றி அவர்களைப் பற்றி குறை சொல்வதற்கல்ல.
எங்கெங்கே போனாலும் அங்கங்கே அப்படி அப்படி இருப்பது எல்லோருக்கும் சாத்தியமா?

புதிய வானம் - புதிய பூமி
Dr Vavar F Habibullah
டாக்டர்.ரெய்ஹான்
புதுமைகள் நிறைந்தது மனித வாழ்க்கை.
பழையன கழிதலும், புதியன புகுதலும்
வார்த்தைக்கு அழகு சேர்க்கலாம்!
வாழ்க்கைக்கு சுவை தருமா?
அநுபவித்தோரால் மட்டுமே இதனை
உணர முடியும்.
டாக்டர்.ரெய்ஹான்....
எனது நெருங்கிய நண்பர்.
பிரபல டெர்மோ காஸ்மடாலஜிஸ்ட்.
புனித மக்கா நகரில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
தெய்வீக களை சொட்டும் அருள் முகம். கருணை சுரக்கும் கண்கள், அடர்ந்த தாடி.
தோற்றத்துக்கேற்ற கூரிய அறிவுத்திறன்.
அவர் சிறப்பை சொல்லிக் கொண்டே போகலாம்.
சுருங்கச் சொன்னால் ஒரு பண்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிஞர்.
திருகுர்ஆனை மனனம் செய்த ஒரு ஹாபிஸ்.
ஹஜ் காலங்களில் மக்கா மாநகரில் ஹாஜிகள் நலனுக்காக இவர் புரியும் சேவைகள் சொல்லி மாளாது.இந்திய ஹாஜிகளுக்காக இவர் நிகழ்த்தும் பேருரைகள் மிக்க பயனை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
டாக்டர் என்று சொல்வதை விட ஒரு பெரிய மார்க்க அறிஞர் என்றே இவர் இன்றும் போற்றப்படுகிறார்.பெரும்பாலான இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.சிறந்த பேச்சாளர்.வளை குடா வாழ் இந்நியர் மத்தியில் மிகவும் பாப்புலராக திகழ்பவர்.

Sunday, October 16, 2016
ஜன்னலை திற காற்று வரட்டும் (TRUE STORY)
Vavar F Habibullah
1980 களின் துவக்கத்தில்....நான் என் மாமாவின் ஜலால் மருத்துவமனையில் CMO மற்றும்
மெடிகல் டைரக்டராக பணி புரிந்த நேரம்.
ஒரு புகழ்பெற்ற குடும்பத்தை சார்ந்த பெண் டாக்டர் அங்கு பணி புரிய விருப்பம் கொண்டு
என்னை வந்து சந்தித்தார்.அவருடன் அவரது தாயாரும் வந்திருந்தார்.தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்த சில விபரீதங்கள் காரணமாகவே தன் மகள் இங்கு பணி புரிய ஆர்வம் கொண்டிருப் பதாக அவர் தெரிவித்தார்.
அவர் ஒரு முஸ்லிம் பெண் டாக்டர் என்பதால் அந்த ஊர் ஜனங்களுக்கு அவரை மிகவும் பிடித்து போய் விட்டது.
சற்று நாட்கள் செல்ல...
காங்கோ பயணக்குறிப்பு ....!
ராஜா வாவுபிள்ளை
காங்கோ பயணக்குறிப்பு ....!
குள்ளமனிதர்கள் (PYGMIES) தொடர்ச்சி.
சொல்லச் சொல்ல சுவாரசியம் குறையாத இந்த நிகழ்வுகளில் தொகுப்பில், கழிந்தவாரம் குள்ளமனிதர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தோம்.
இந்தவாரம் குள்ளமனிதர்களான பட்வா இனத்தவர்களின் திருமண சடங்குகளையும் திருமணவாழ்வையும் பற்றிய நிகழ்வுகளையும் பார்ப்போமா ?
பட்வா இனத்தில் அல்லாது மாற்று இனத்தவரை மணப்பதற்கு அனுமதி இல்லை. பட்வா இளைஞர் இளம்பெண்களின் திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. முட் வா இளைஞனின் பெற்றோர்கள் நல்ல குணநலன்கள் உள்ள இளவயது பெண்களில் பிடித்தவராகப் பார்த்து தனது மகனுக்கு பொருத்தமான பெண்ணைத் தேர்வுசெய்கின்றனர். பின்னர் பெண்ணின் பெற்றோருடைய அனுமதியுடன் பெண்ணின் வீட்டிற்கு பலவகையான கலயம் கலயமாக தேனும், தேனிலிருந்து வடிக்கப்பட்ட ஒருவகை பானமும் பழவகைகளும், பாடம் செய்யப்பட்ட இறைச்சியும் முதற்கொண்ட பரிசில்களுடன் சென்று பெண்கேட்கும் சம்பிரதாயமான சடங்குகளை நிறைவேற்றுகின்றனர்.
Saturday, October 15, 2016
நீதி தேவன் மயக்கம்
Vavar F Habibullah
நீதி தேவன் மயக்கம்
'சட்டம் ஒரு இருட்டறை....'சொன்னவர் அறிஞர் அண்ணா.
ஒரு படத்தில் எம்ஜிஆர் பாடுவார்...
'நாணல் போல வளைவது தான் சட்டமாகுமா!
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா......!'
சட்ட வல்லுநர்களால் சட்டத்தை வளைக்கவும் முடியும், நிமிர்த்தவும் முடியும் என்பதற்கு இவை சான்று பகர்கின்றன.
மனித சமுதாயத்தை நல்வழியின் பால் அழைத்து செல்லவே சட்டங்கள் பயன்படு கின்றன. நல்ல பாதைக்கு அழைத்து செல்ல இயலாத மனித சட்டங்களால் மனித குலத் துக்கு எந்த பயனும் இல்லை.
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் பிரதம நீதி பதிகளின் பிரதான சேம்பரில் சட்டங்களை மனித குலத்துக்கு வழங்கிய பிதாக்களின் பட்டியல் (Greatest Law Makers of the World) அவர்கள் பெயரால் அழகாக அணி வகுத்து ஜட்ஜ்களின் இருக்கைகளை சுற்றிலும் அலங்கார வடிவில் நிர்மாணிக்கப்பட்டு இன்றும் போற்றி பாதுகாக்கப்பட்டு வருகிறது
Friday, October 14, 2016
பெயர் தெரியா பெரியவர்
நேசித்தவரை இழந்துவிட்டோமோ என்று எண்ணக்கூடியவரை உங்கள் கண்ணெதிரிலே நடமாடிக்கொண்டிருப்பதை அமைதியாக கண்டுக்கொண்டிருப்பதுதான் சோதனையின் அவலம்!
-பெயர் தெரியா பெரியவர்
ஒரு தடவை தானே என்றுதான்
ஒவ்வொரு தவறும் துவக்கப்படுகின்றது!
-பெயர் தெரியா பெரியவர்
பொய்கள் சொல்லி சொல்லி உங்கள் முகம் முழுவதும் விஷமேறி நீலம் பூத்திருக்கிறது!

Wednesday, October 12, 2016
நான் பிரமித்துப் போனேன்.
அப்துல் கையூம்
தொப்பி அணிந்து இஸ்லாமிய அடையாளத்துடன் இந்த போட்டோவில் இருக்கும் என்னுடன் , நெற்றியில் விபூதியும் சந்தனப்பொட்டு சகிதமாக இந்து மத அடையாளத்துடன் காணப்படும் இவரை இதற்கு முன்பு எனக்கு பழக்கமில்லை. இவர் யாரென்றே எனக்குத் தெரியாது.அண்மையில் நான் தாயகம் சென்றபோது ஒரு திருமண நிகழ்ச்சியில், இவரைத் தேடிக் கண்டு பிடித்து, இந்த உடன்பிறவா சகோதரருடன் எடுத்துக்கொண்ட எனது முதல் செல்ஃபி இது.
இவரோடு எடுத்துக்கொண்ட இப்புகைப்படத்தை என் வாழ்க்கையில் மிகச் சிறந்த தருணமாக நான் நினைக்கிறேன். இவர் பெயர் ராஜா. அதிக விபரம் இவரைப் பற்றித் தெரியாது....
அதற்கு முன் இப்பதிவுக்கான ஓரு காரணம்..
என்ன உலகம்? என்ன மனிதர்கள்?
என்ன உலகம்? என்ன மனிதர்கள்?
அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.
நல்லாதானே இருந்தார்?இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள், தங்களின் மரணத்தை நினைத்து பார்ப்பதில்லை.
இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் - ஹராம் அதாவது நேர்மையான - நேர்மையற்ற உழைப்பும் அதன் வருமானமும் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் அளவீடாக உள்ளது.
தானாக உழைக்காமல் பிறரை ஏமாற்றி வாழ நினைப்பவனை மனித தோற்றம் கொண்ட மிருகம் என்றே கருதலாம்.
கிழவன்
Yasar Arafat
பணம் தேடும் பந்தயத்தில் பழைய/நொண்டி குதிரைகள் அவமானப்படுத்தப்படுகின்றன; வெற்றிப்பெறும் குதிரைகள் சிலாகிக்கப்படுகின்றன; வெற்றி தோல்விக்கு இடையில் குதிரைகளைப் பற்றி இவர்களுக்கு கவலையே இல்லை!-கிழவன்
தவறவிட்ட வாழ்க்கையென்று;
நன்றாக வாழும்போது தோன்றுவதில்லை!
-கிழவன்
விருப்பமானவர்களிடம் எப்போதும் நீங்கள் இரண்டாம் பட்சமாய்தான் நிற்கவைக்கப்படுகிறீர்கள் என்ற வலியோடு காத்திருக்கும் தருணம் அவ்வளவு இலகுவானதல்ல!
-கிழவன்
பிஞ்சுகளை இன்னொருவருடன் ஒப்பீடு செய்கிறீர்கள்; நல்லவேளை இன்னும் அவர்கள் இன்னொரு பெற்றோருடன் உங்களை ஒப்பீடு செய்ய துவங்கவில்லை!
-கிழவன்
Tuesday, October 11, 2016
அந்த அழகை வார்த்தைகளில் சொல்வது கடினம் என்றாலும்
அன்புடன் புகாரி
கடந்த ஞாயிறு இலையுதிர்கால மரங்களின் எழிலைக் காணச் சென்றிருந்தேன். அந்த அழகை வார்த்தைகளில் சொல்வது கடினம் என்றாலும் நான் 2003ல் ஒரு கவிதையே எழுதினேன். அது இதோபச்சைத் தாவர
இலைகளின் நரம்புகளில்
பஞ்சவர்ணக் கிளியின்
இரத்தம் பாய்ச்சிப்
பரவசம் பொங்கப்
படபடக்க வைப்பதாரோ
நானறியேன்
மஞ்சளும் சிகப்பும்
முதற்காம மஞ்சத்தில்
ஒன்றுக்குள் ஒன்று
குதித்தெழுந்தால் வரும்
கிளுகிளுப்பு நிறங்களில்
எழிலாய்ச் சிரிக்கும்
இலைகளே இலைகளே!
Monday, October 10, 2016
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி
டாக்டர் அன்சாரி
நமதூர் பக்கம் வாசுதேவ நல்லூர்காரர்
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மாணவர்
நாகர்கோவில் பிரபல வழக்கறிஞர் பகருதீன் ஆதமின் மருமகன்.
எனது நண்பர் மற்றும் நெருங்கிய உறவினர்.
நமதூர் பக்கம் வாசுதேவ நல்லூர்காரர்
திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மாணவர்
நாகர்கோவில் பிரபல வழக்கறிஞர் பகருதீன் ஆதமின் மருமகன்.
எனது நண்பர் மற்றும் நெருங்கிய உறவினர்.
Saturday, October 8, 2016
கவிதை அல்ல ...
கவிதை அல்ல ...
நெற்றியில் உரசும்
தாயின் முத்தம்
நிம்மதிக் குவியலை
நிலைக்கச் செய்கிறது ...
மனசார பொழிந்திடும்
தந்தையின் பாசம்
வாழ்க்கையின் பாதைகளை
செப்பனிட்டு சீரமைக்குது ....
இதயத்தால் சிந்திடும்
மனைவியின் அன்பு
Thursday, October 6, 2016
மரணம் சூழ்ந்த வாழ்க்கை
Dr.Vavar F Habibullah
மரணம் சூழ்ந்த வாழ்க்கை
மருத்துவன் என்ற முறையில் மரண தரிசனங்களே வாழ்வின் அன்றாட நிகழ்வாகி விட்ட நிலையில், மரணத்தோடு போராடும் நோயாளிகள் குறிப்பாக குழந்தைகள், அதைக் கண்டு துயர்படும் தாய்மார்கள்
அவர்களின் நெஞ்சை பிளக்கும்
அழுகை சத்தங்கள், ஓலங்கள், ஒப்பாரிகள்
காண்பவர், கேட்பவர் மனதை ஈரமாக்கும்.
உல்லாச உலகம் ஒன்று உலகில் இருக்கிறது
என்ற எண்ணம் மரணத்தை நித்தமும் காண்பவர் மனதில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்துவதில்லை.வாழ்க்கையை சுவைக்க மரண அநுபவங்கள் அதிகம் தேவை.
இளம் வயதில் நான் சந்தித்த முதல் மரணம்..
என் தாயின் தாய் மாமன் மரணம். நான் அதை பார்க்கக் கூடாது என்று என்னை ஒரு அறையில் அடைத்து பூட்டி விட்டார்கள்.
இறந்தவர்களை மீண்டும் பார்க்க முடியாது என்ற எண்ணம் மனதில் தோன்றாத வயது.
தொடர்ந்து குடும்பத்தில் ஏற்பட்ட அகால மரணங்கள்......
தாயின் தாய், தாய், தந்தை, தந்தையின் உடன் பிறப்புகள், தாயின் உடன் பிறந்தோர். அவர் தம் இளம் வாலிப குழந்தைகள். தாய் மாமன்மார், தூக்கி வளர்த்த அத்தைமார், மனைவியின் தாய் தந்தையர்,சகோதரனின் இளம் மகள், தங்க மகனின் பால்மணம் மாறா பச்சிளம் பாலகன்.......
எண்ணற்ற உற்றார், உறவினர், அருமை நண்பர்கள், சந்தோஷத்திலும், துன்பத்திலும் நம்முடன் உறவாடி அன்பு செலுத்தியவர்கள்.
இப்படி மனதோடும், ஊனோடும், உயிரோடும் கலந்து உறவாடிய பந்த பாசங்களை ஒவ் வொன்றாக இழந்து வரும் நிலையில்....
சிங்கம் போல் வாழ்ந்த என் சின்ன தம்பி கூட என்னை விட்டு மறைந்து விட்டான் என்ற செய்தி என்னையும் சற்று நிலை குலைய வைத்து விட்டது.
நஜீம்
தம்பி நஜீம்...
எவருக்கும் கட்டு படாதவன்
கைகட்டி, வாய் பொத்தி சேவகம் செய்யாதவன்.
சுதந்திர பறவை அவன்.
அவன் கால் படாத ஊரில்லை, நாடில்லை
அவன் அறியாத மொழிகளில்லை
ஆகாயம் போல் வாழ்ந்தவன்.

Wednesday, October 5, 2016
மரணம் இப்படி அடுத்துதான் இருக்கிறது
என்னப்பா எப்படி இருக்கிறே, இப்ப ஒண்ணும் இல்லே அண்ணன், முடியலியே என்று மருத்துவமனைக்கு வந்தேன், இரத்தம் பரிசோதித்து விட்டு பாகிஸ்தான் டாக்டர் சொன்னார் கடுமையான மலேரியா ஜுரம், மருந்தெல்லாம் தந்து இப்போ ஒண்ணுமில்லே மாலை நாலு மணிக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவேன், பிறகு ஐந்து அல்லது ஐந்தரை மணிக்கு நான் கூப்பிடுகிறேன், அப்ப பேசலாம் என்று மூன்றரை மணிக்குச் சொன்னான், அப்படிச் சொன்னவன் அந்த ஐந்தரை மணிக்கு தொடர்பை தாண்டி அங்கே சென்று விட்டான், இனி மஹ்ஷரில்தான் அவனை என்னால் சந்திக்க முடியும்.
இதுவெல்லாம் இன்றைக்கு மௌத்தாகிவிட்ட என் உடன் பிறந்த தம்பி நஜீமுல்லாவைப் பற்றி நான் சொல்லவரும் செய்திதான். மரணம் இப்படி அடுத்துதான் இருக்கிறது என்பதை உறுதியுடன் மனதில் எப்போதும் கொண்டிருக்கும் என்னையும் கூட இந்த இரண்டு மணிக்கூர் இடைவெளியில் நடந்து விட்ட மாற்றம் நிலைகுலைந்து போகத்தான் வழி செய்திருக்கிறது. எனினும் என்னை இப்படி ஒரு பதிவு போடவும் வைத்திருக்கிறது.
நண்பர்களே, அன்பர்களே, இதை கண்ணுறும் யாவரும் மரணித்து இறைவனிடம் சேர்ந்து விட்ட என் தம்பிக்காக அவன் இரட்சிப்புக்காக துவா செய்யும் படி கேட்டுக் கொள்கிறேன், உங்கள் உள்ளம் உருகும் துவா எனக்கு பொறுமையையும் இந்த துயரத்தை கடந்து செல்லவும் உதவும், அல்லாஹ் நம் அனைவருக்கும் போதுமானவன் !
Tuesday, October 4, 2016
SPECIALISTS/SUPER SPECIALISTS
Vavar F Habibullah
SPECIALISTS/SUPER SPECIALISTS
வெளி நாடுகளில் பணிபுரிய நிச்சயம் அவர்கள் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.இதற்கு அறிவுக்கூர்மையும் அசாத்திய திறனும் அவசியம்.
இந்திய டாக்டர்கள், அங்கெல்லாம் புகழ்பெற்று விளங்குவதற்கு அவர்களின் திறமையே காரணம்.
டாக்டர்கள் இப்போது அதிக அளவில் IAS, IPS தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு உயர் அதிகாரிகளாக பணி புரிந்து வருகிறார்கள்.
காரணம் முன்போல் மருத்துவ துறையை அவர்கள் விரும்பாததே காரணம்.
அரசு டாக்டர்கள் எவ்வளவு உயர்ந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டில் எந்தவித மரியாதையும் இல்லை.
தாலுகா ஆபீஸ் பியூனுக்கு கிடைக்கும் மரியாதை கூட அரசு டாக்டர்களுக்கு கிடைப்பதில்லை.
மருத்துவ கல்லூரி பேராசியர் நிலை இதை விட மகா கேலிக்குரியது.
ஏழை நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கவே பிறந்தவர்கள் போல் இவர்கள் மகா கட்டு பாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். அரசியல் வாதிகளால் இவர்கள் சில நேரங்களில் பந்தா டப்படுவதும் உண்டு. சில நேரங்களில் நோயா ளிகள் இவர்களை தாக்குவதும் உண்டு.
திகில் நிமிடங்கள் (தொடர்ச்சி)/அப்துல் கபூர்
திகில் நிமிடங்கள்
சென்ற பதிவின் தொடர்ச்சி ....இனியவர்களே
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
இரு சக்கர வாகன திருடர்கள் நீட்டிய கத்தி என் வயிற்றை குறி வைத்ததும் யா அல்லாஹ் என்னை காப்பாற்று என்று ஆங்கிலத்தில் கத்தி சப்தமிடுகிறேன் ....
எனது குரல் வளையிலிருந்து பழுத்து விழுந்த சப்தத்தை காற்று இழுத்துச் சென்று சம்பவ இடத்தின் எதிர் புறமுள்ள ரயில்வே குடியிருப்பில் நிலை கொள்ளச் செய்கிறது...
குடியிருப்புகளில் உறங்கத் துவங்கிய கருப்பின தொழிலாளிகள் சிலர் அறைகளுக்கு வெளி வந்து உள் வராந்தாவின் வேலியருகே நின்று என்னை விட்டு விடுங்கள் என்று திருடர்களிடம் சொல்லுகிறார்கள் ...
(தொழிலாளிகளுக்கு வெளியே வர இயலாது)
நாங்கள் இந்த இந்தியனை விடமாட்டோம் என்று தொழிலாளிகள் பக்கம் திரும்பி காட்டமாக திருடர்கள் பதில் சொல்கிறார்கள் ...
திகில் சம்பவம் .../அப்துல் கபூர்
திகில் சம்பவம் ...
இனியவர்களேஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
இறையருளால் நாங்கள் வாழ்ந்திடும் உகாண்டாவில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் எனக்கு கம்பாலாவில் நிகழ்ந்த மறக்க இயலாத உண்மை சம்பவத்தை எனது நினைவுகள் அசை போட உங்களோடு பகிர்கிறேன் ...
30.09.2011 அன்று உகாசேவாவின் முதல் உணவுத் திருவிழா நிகழ்வுகளின் ஒருங்கிணைப்பாளராகிய நான் முதல் கலந்துரையாடல் கூட்டத்தை இனிதாய் முடித்து ....
நானும் எனது ஆருயிர் நண்பர்கள் Mohamed Kassim - Mohamed Gaffoor மற்றும் ஏனைய உறுப்பினர்களும் அவரவர் இல்லங்களுக்கு விரைந்திட வளாகத்தின் கீழ்த் தளத்திற்கு வருகிறோம் அப்போது முன்னிரவை கடந்து பின்னிரவை நோக்கி நேரம் நடந்து செல்கிறது ...
ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் செல்வதற்கு உகாண்டாவில் இரு சக்கர வாகனங்கள் மிகவும் சுறுசுறுப்பாய் இயங்கும் அவைகளை Boda Boda என்று அழைப்பார்கள் ...
வெளியே நிற்கும் எங்களை கண்டதும் போடா போடா ஓட்டுனர் ஒருவன் போகலாமா என்று கேட்டதும் வேண்டாம் போடா என்று சொல்ல மனமில்லாத நான் வாடா என்று அழைத்து அவன் கேட்ட ஒரு டாலர் வாடகைக்கு நண்பர்களிடம் விடை பெற்று வாகனத்தின் பின்னால் அமருகிறேன் ...
Monday, October 3, 2016
இதற்கும் புன்னகைதானா
உலகத்தையே தன் அகிம்சையால் வென்றெடுத்தார் அண்ணல் காந்தி
வன்முறையோ அவரைத் தன் தோட்டாக்களால் கொன்றுபோட்டது
*
முதன் முதலின் பத்திரிகையில் வெளியான என் கவிதை இதுதான்
*
*
அண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும் பிறவிகள் உண்டாமே
உனக்கொரு பிறவியில்லையா
தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல் போய்விட்டன
கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும் பிறவிகளெடுத்து விட்டனர்
உனக்கு மட்டும் பிறவியே இல்லையா
வன்முறையோ அவரைத் தன் தோட்டாக்களால் கொன்றுபோட்டது
*
முதன் முதலின் பத்திரிகையில் வெளியான என் கவிதை இதுதான்
*
இதற்கும் புன்னகைதானா?
*
அண்ணலே
மண்ணுயிர் யாவுக்கும் பிறவிகள் உண்டாமே
உனக்கொரு பிறவியில்லையா
தினம்
உன்னைத் தேடித்தேடி
என் கால்களில்
பாதங்களே இல்லாமல் போய்விட்டன
கோட்சேக்களெல்லாம்
மீண்டும் மீண்டும் பிறவிகளெடுத்து விட்டனர்
உனக்கு மட்டும் பிறவியே இல்லையா
Sunday, October 2, 2016
உகாண்டாவில் நிலக்கடலையும் இரட்டைப்பிள்ளையும் ....!
ராஜா வாவுபிள்ளை
உகாண்டாவில் பலவகையான எண்ணெய்வித்துக்கள் விளைகிறது. அவற்றில் நிலக்கடலையும் ஒன்றாகும்.
எண்ணெய்வித்துக்கள் மற்றும் அதன் எண்ணெய் சார்ந்த தொழிலிலும் பலவருடங்களாக ஈடுபட்டுவருவதால் இந்த
பதிவை போடவேண்டுமென தோன்றியது.
ஆனால் நிலக்கடலையில் இருந்து சமையல் எண்ணெய் எடுப்பதில்லை மாறாக உணவிற்கான கூட்டாக கடலை சட்டினிக்கும் குழம்புக்கும் இடையிலான ஒருவகை சாஸ் சமைத்து உண்ணுகிறார்கள். அதில் மஷ்ரூம், புகைபோட்ட கருவாடு, கீரைவகைகளையும் போட்டும் சமைப்பார்கள். எரிப்போ மசாலாவோ எதுவும் சேர்ப்பதில்லை. உடலுக்கு மிகவும் ஆரோக்யமான உணவு. எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது நிலக்கடலை குழம்பை மதியஉணவில் உண்பதை வழக்கமாகிக் கொண்டுள்ளேன்.
Subscribe to:
Posts (Atom)