Thursday, July 16, 2015

வரவேற்கும் வண்ணத் திரை

வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வரும் தூசிகளையும், தேவையற்ற பூச்சிகளையும் ஜன்னலுக்கு வெளியே வடிகட்டி அனுப்பிவைப்பவை திரைகள். ஆரோக்கியத்தோடு அழகையும் அதிகரித்து காட்டுபவை. இவற்றை வீட்டின் நீள அகலத்துக்கு ஏற்பவும், சுவரின் நிறம், சுவரிலுள்ள கலைப் பொருட்கள், மற்றும் ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும்.

அழகான தொங்கு திரைகளை ரசனையாக தேர்ந்தெடுக்க உள் அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ:

வீடுகளின் அமைப்பை பொருத்து டிசைன், ஸ்டைல் ஆகியவற்றைத் தீர்மானிக்க வேண்டும். சுவரின் நிறம், தரையின் நிறம், ஃபர்னிச்சர் நிறத்துக்கு ஒத்து வரும் திரைகளே அழகு சேர்ப்பதாக அமையும்.

வீட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான நிறம், ஸ்டைலில் தொங்கு திரை தேர்வு செய்வது அரிது. வரவேற்பரை, உணவருந்தும் அறை, படுக்கை அறை, என்று அறைகள் அதிகம் இருந்தாலும் எல்லா அறைக்கும் பொதுவாக நன்றாக தோன்றும் துணியை தேர்வு செய்யவும்.

பிளைனாகவோ அல்லது நவீன ஓவியங்கள் தீட்டப்பட்ட திரைகளை வாங்கலாம். அதேநேரம் பழங்கால கட்டிடங்கள், உயரமான மேற்கூரைகள் உள்ள வீடு என்றால் பழங்கால ஓவியங்கள் உள்ள தொங்கு திரைகளை வாங்கலாம்.

தேர்வு செய்யும் துணியின் மாதிரியை வாங்கி வீட்டின் சுவரில் வைத்து பார்க்கவும். இதன் மூலம் நல்ல திரைகளை தேர்ந்தெடுக்க முடியும். உங்கள் ஜன்னல் கம்பிகள் என்ன டிசைனில் இருக்கிறது என்பதை பொருத்து திரைகளை வாங்கவும், ஜன்னல் கம்பிகள் பூ டிசைனில் இருந்தால் பூ போட்ட டிசைன் திரை பொருத்தமாக இருக்கும்.
நன்றி Source : http://www.dinakaran.com/

No comments: