திடீரென இறப்பு இறைவனை நாடி
திடீரென இறப்பு செய்தி அதிர்ச்சி அனைவருக்கும்
திடீரென நிகழ்வாக நமக்கு
திட்டமிட்ட நிகழ்வு இறைவனுக்கு
இறைவன் கொடுப்பான் எடுப்பான்
இறைவன் கொடுப்பதும் எடுப்பதும் அவன் உரிமை
இறைவன் கொடுத்த உயிரை எடுக்க நமக்கு உரிமையில்லை
இறைவன் கொடுத்ததை எடுத்ததால் வருந்துவதில் பயனுமில்லை
மரணம் வாழ்கையின் உண்மை
Thursday, July 30, 2015
Wednesday, July 29, 2015
ஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் - தி இந்து
ஆசானுடன் கடைசி நாள்: கலாம் ஆலோசகரின் உணர்வுக் குறிப்புகள் - தி இந்து
ஸ்ரீஜன் பால் சிங்
அப்துல் கலாமுடன் ஸ்ரீஜன் பால்சிங்| ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து
அவருடன் நான் கடைசியாகப் பேசி 8 மணி நேரம் மட்டுமே கடந்திருக்கிறது. (இது கலாமின் ஆலோசகர் ஸ்ரீஜன் பால்சிங் அவரது ஃபேஸ்புக்கில் இப்பதிவை பதிந்த போது குறிப்பிடப்பட்டிருந்த நேரம்) தூக்கம் என் கண்களுக்குள் நுழைய மறுத்து இமைகளை விட்டு விலகிச் செல்கிறது. துக்கம் கண்ணீராகக் கரை புரண்டோடுகிறது. அதில் கலாமின் நினைவுகள் கலந்து வழிந்தோடுகின்றன.

Tuesday, July 28, 2015
மறைந்த தன் தாயார் குறித்து டாக்டர் அப்துல் கலாம் எழுதிய கவிதை....
கடல் அலைகள், பொன் மணல்
புனித யாத்ரீகர்களின் நம்பிக்கை
இராமேஸ்வரம் பள்ளிவாசல் தெரு
இவையெல்லாம் ஒன்று கலந்த உருவம் நீ
என் அன்னையே!
சுவர்க்கத்தின் ஆதரவுக் கரங்களாய்
எனக்கு நீ வாய்த்தாய்
போர்க்கால நாட்கள் என் நினைவிற்கு வருகின்றன
வாழ்க்கை ஒரு அறைகூவலாய் அமைந்த
கொந்தளிப்பான காலம் அது.
கதிரவன் உதிப்பதற்குப் பல மணி நேரம் முன்பே
எழுந்து நடக்க வேண்டும் வெகுதூரம்
கோயிலடியில் குடியிருந்த ஞானாசிரியரிடம்
பாடம் கற்கச் செல்லவேண்டும்.
மீண்டும் அரபுப் பள்ளிக்குப் பல மைல் தூரம்
மணல் குன்றுகள் ஏறி இறங்கி
புகைவண்டி நிலையச் சாலைக்குச் சென்று
நாளிதழ் கட்டு எடுத்து வந்து
அந்தக் கோயில் நகரத்து மக்களுக்கு வினியோகிக்க
வேண்டும்
அப்புறம்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்
இரவு படிக்கச் செல்லும் முன்
மாலையில் அப்பாவுடன் வியாபாரம்
Sunday, July 26, 2015
சொல்லத் தோணுது 44 - கொண்டாட்டம் யாருக்கு?
தங்கர் பச்சான்
இன்னும் மூன்று வாரங்களில் நாம் விடுதலை பெற்றதற்கான 68-ம் ஆண்டு கொண்டாட்டத்தைக் கொண்டாடி மகிழப் போகிறோம். நாம் எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள்தான். ஆனால், 56 சதவீத மன்னர்களுக்கு (மக்களுக்கு) சொந்த வீடுகூட இல்லை. குருவிகளுக்காவது தங்கிக்கொள்ள கூடுகள் இருக்கின்றன. மனித இனம் காட்டுமிராண்டிகளாக இருந்து, மனிதர் களாகப் பரிணமித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும்கூட இன்னும் வீடுகள் இல்லாமல் வீதிகளிலும், மரத் தடிகளிலும் வாழ்வதைப் பற்றி இங்கே யாருக்கும் கவலையில்லை. இந்நிலை யில் ‘இந்தியா ஏழைநாடு’ என சொல் லிக் கொள்ளவும் மறுக்கிறது. அத்துடன் வெட்கமே இல்லாமல் பணக்கார நாடு களில் ஒன்றாகக் காட்டிக் கொள்ளவும், வல்லரசு நாடாகத் தன்னை பறைசாற்றிக் கொள்ளவும் படாதபாடுபடுகிறது.

Monday, July 20, 2015
உனக்குப் பிடிக்காத என் நட்பு வட்டம் / நிஷாமன்சூர்
என் நண்பர்களை உனக்குப் பிடிப்பதில்லை
ஏனெனில் அவர்கள் அழுக்கன்களாக இருக்கிறார்கள்
நீ அறிந்திருக்க நியாயமில்லை,
நானும் அந்த அழுக்கன்களில் ஒருவனாக இருந்தேன் என்பதை.
என் நண்பர்களின் குடும்பத்தினரை உனக்குப் பிடிப்பதில்லை
ஏனெனில் அவர்கள் என்மீது அதிக உரிமை எடுத்துக் கொள்கிறார்கள்
நீ அறிந்திருக்க நியாயமில்லை,
நான் படுமோசமாகத் தோற்று நின்றசமயம்
தம் கழுத்தில் கிடந்த சொற்ப நகைகளையும் கழற்றிக் கொடுத்தவர்கள் அவர்களென்பதை.

வெளியில் வெளிவராத தியாகிகள்...
உனக்காய்; உங்களுக்காய்;
பனியில் வீழ்ந்து; அனலில் புரண்டு;
வெளிநாட்டு பணமெல்லாம் எங்கள்
குருதியின் கடைக்குட்டி..
வியர்வையாய் மாற்றி;
வாசம் வீச தாய் நாட்டிற்கு அனுப்புவதெல்லாம்
புத்தம் புது ஆடைகளில் நீங்கள் பூத்துக் குலுங்க;
மறுவேளை உணவு இருக்காயென
என் பிள்ளைகளின் வினாவிற்கு
விடைக் கிடைக்கவே
வினா குறியோடு நிற்கிறோம்
ஏதோ ஒர் கரையிலே!

Sunday, July 19, 2015
தமிழருக்கு எதிரான கூட்டங்கள் தலைதெறிக்க ஓடியே விடட்டும் !
பிரிந்திருக்கும் எதிர்கட்சிகளின் இணைந்த கைகள் உறுதியாய் உயரமாய் எழுந்த நேரங்களில் எல்லாம், யாருடனோ ஒட்டிக் கொண்டிருந்த வெற்றி மகள் ஓடித் தேடி வந்து அடைக்கலமானதே இந்திய வரலாறுகளாக இருந்து கொண்டிருக்கிறது. அலையென மக்கள் தலைகளும், போகவும் வரவும் முடியாத போக்குவரத்து ஸ்தம்பித்தலும் ஏழு கிலோ மீட்டர்கள் நடந்துதான் வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் கூட, நடப்பில் இருக்கும் தமிழக அரசியலை அடியோடு மாற்றிப் போட்ட ஒரு நிகழ்ச்சி என்றோ, ஒவ்வொரு தமிழனையும் தன்னிலை அறிய வைத்த உன்னத மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டதென்றோ சொல்லி வைக்க முடியாத நிலைதான்.
காரணம், மக்களின் பாதிப்புக்களை சொல்லிய போது கையாண்ட வார்த்தைகள் உணர்ச்சியை தட்டி எழுப்பவில்லை, கட்சியின் நிலைப்பாடு கடந்து மக்களின் அடியுணர்வுகள் அவர்களின் பாஷையில் அங்கலாய்க்கப்படவில்லை, அடச்சீ... இப்படியும் ஒரு அரசா என்று கூட்டத்திலிருந்து திரும்பி வரும் கட்சியை சாராத ஒரு பொது மனிதன் சொல்லாத வரை, நிகழும் அரசியல் நிலையில் தாக்கம் எதுவும் ஏற்பட்டு விடவில்லைதான்.

சொல்லத் தோணுது 40 - மாயமான்!
...தங்கர் பச்சான்
விளம்பரபற்ற மனிதர்களை கவனிக்க எப்படி ஆட்கள் இல்லையோ, அப்படித்தான் விளம்பரமற்றப் பொருட்களும். ஆனால், தகுதி இல்லாத ஒன்றை கூவிக் கூவி விளம்பரப்படுத்தினால், ஒன்றுக்கும் உதவாத உயிரைக் கொல்கிற பொருட்களையும் மக்கள் மனங்களில் இடம்பிடிக்க வைத்துவிட முடிவும். பணம் இருந்தால் யாரையும், எதையும் விளம்பரப்படுத்திக் கொள்ளலாம். எந்தப் பொருளையும் மக்கள் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வாங்கும் அளவுக்கு பித்து பிடிக்க வைத்துவிடலாம். பணம் இருந்தால் எந்த விளையாட்டையும் விளம்பரப்படுத்தி அனைவரையும் ஈர்த்துவிடலாம் என்பதெல்லாம் நடைமுறையில் நாளுக்கு நாள் நாம் காணும் காட்சிகள்.
உணவும், நீரும் மனிதனுக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வாறு முக்கியமானதுதான் விளையாட்டும். ஆனால், இளரும் தலைமுறைகள் விளையாட்டை விளையாடுவதை விட்டுவிட்டு, மற்றவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கின்றன.

மொழிச் சித்திரம்: சித்தம் போக்கு! / தாஜ்
காதல் உடை
மோதல் நடை!
மாண்பு உடை
வீம்பு நடை
கூட்டை உடை
விவேக நடை
உடை உடை நடை நடை!
நவகாளி முகுர்த்த நடை
காந்தியை சுட்டொழித்த நடை
மசூதி இடிப்பு நடை
மும்பாய் வெடிப்பு நடை
கோத்ரா நடை
மோடிகளின் நடை
குஜராத் கறுப்பு நடை
கசாப்பு கடை நடை
நடை நடை
அல்-கொய்தா காழ்ப்பு நடை
குண்டுகள் வெடிக்கும்
அரக்க நடை
கோவை குண்டு நடை
ரயிலில் நாச நடை
நடைப் பாதைகளும்
அது வெடிக்கும் நடை
தெறிக்கும் உயிர்களில்
அது களிக்கும் எதிர் நடை!
மோதல் நடை!
மாண்பு உடை
வீம்பு நடை
கூட்டை உடை
விவேக நடை
உடை உடை நடை நடை!
நவகாளி முகுர்த்த நடை
காந்தியை சுட்டொழித்த நடை
மசூதி இடிப்பு நடை
மும்பாய் வெடிப்பு நடை
கோத்ரா நடை
மோடிகளின் நடை
குஜராத் கறுப்பு நடை
கசாப்பு கடை நடை
நடை நடை
அல்-கொய்தா காழ்ப்பு நடை
குண்டுகள் வெடிக்கும்
அரக்க நடை
கோவை குண்டு நடை
ரயிலில் நாச நடை
நடைப் பாதைகளும்
அது வெடிக்கும் நடை
தெறிக்கும் உயிர்களில்
அது களிக்கும் எதிர் நடை!
மிதக்கும் தீவுகள் ....!
உகாண்டாவில் இருந்து தொடங்கும் நைல்நதியின் தாயான விக்டோரியா ஏரியில் சிறிதும் பெரிதுமாக பல தீவுகள் உள்ளன.
சிறிய தீவுகள் மீனவர்களுக்கு மாற்றுத் தங்குமிடமாகவும் மரங்களை வெட்டி எரித்து கரியாக்கி காசாக்கும் கயவர்களுக்கு சொர்கபுரியாகவும் இருக்கிறது. பெரிய தீவுகளில் விவசாயம் செய்து மக்களும் வசிக்கின்றனர்.
நீர் எல்கையில் இருக்கும் தீவுகளுக்கு இரண்டு பக்கத்து நாடுகள் உரிமம் கொண்டாடி சச்சரவுகளும் அவ்வப்போது அரங்கேறும்.
உறவுகள் மேம்பட உன்னத 10 வழிமுறைகள்.!!!
மனித வாழ்க்கையில் உறவுகள் என்பது பல சொந்தபந்தங்களை உள்ளடக்கி வாழையடி வாழையாக வளர்ந்து கொண்டுபோவதாகும். உறவுகள் மனிதனது வாழ்வில் மிகமிக அவசியமான ஒன்றாகவும் திகழ்கிறது. ஒருகாலத்தில் குடும்ப உறவுகள் புரிந்துணர்வுடன்,சகிப்புத் தன்மையும் கொண்டு ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் ஒன்றிணைந்து உறவுகளில் விரிசலடையாமல் பாதுகாத்து அதிகபட்சமாக ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்ந்தார்கள்.
அப்படி மகிழ்வுடன் கூடிவாழ்ந்த உறவுகளின் இன்றைய நிலையை பார்ப்போமேயானால் பரிதாபமாக இருக்கிறது. உறவுகளுக்குள் புரிந்துணர்வு இல்லாமல் சின்னச்சின்ன பிரச்சனைகளெல்லாம் பெரிதாக்கப்பட்டு சின்னாபின்னமாக பிரிந்து உறவுகள் உடைந்து போய்க்கொண்டு இருக்கிறது.பாசங்களும் பந்தங்களும் மனதைவிட்டு பிரிந்து சிதறிக் கொண்டிருக்கிறது. உறவுகள் வலுப்பெற்று இருந்தால் குடும்பங்கள் மேலோங்கியிருக்கும்.இதை உணர்ந்து நடந்து கொண்டோமேயானால் வாழ்நாள் முழுதும் உறவுகளுடன் மகிழ்வோடு வாழலாம்.
எனவே உறவுகள் மேம்பட நல்லுபதேசங்களுடன் கூடிய வழிமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

Thursday, July 16, 2015
வரவேற்கும் வண்ணத் திரை
வீட்டிற்குள் அழையா விருந்தாளியாக வரும் தூசிகளையும், தேவையற்ற பூச்சிகளையும் ஜன்னலுக்கு வெளியே வடிகட்டி அனுப்பிவைப்பவை திரைகள். ஆரோக்கியத்தோடு அழகையும் அதிகரித்து காட்டுபவை. இவற்றை வீட்டின் நீள அகலத்துக்கு ஏற்பவும், சுவரின் நிறம், சுவரிலுள்ள கலைப் பொருட்கள், மற்றும் ஃபர்னிச்சர் ஆகியவற்றுக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும்.
அழகான தொங்கு திரைகளை ரசனையாக தேர்ந்தெடுக்க உள் அலங்கார நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் இதோ:
வீடுகளின் அமைப்பை பொருத்து டிசைன், ஸ்டைல் ஆகியவற்றைத் தீர்மானிக்க வேண்டும். சுவரின் நிறம், தரையின் நிறம், ஃபர்னிச்சர் நிறத்துக்கு ஒத்து வரும் திரைகளே அழகு சேர்ப்பதாக அமையும்.

விண்ணைத் தொட சதாநேரமும் கனவு கவிதைகளோடு!
எல்லாமே கவிதை - மொழிச் சித்திரம் / தாஜ்
---------------------------------------------------------
சிரிப்பதோர் கவிதை
அழுவதோர் கவிதை
முறைப்பது முணங்குவது கவிதை
காட்டுக்கத்தல் மௌனப் பேச்சு மட்டுமின்றி
உறங்குவதும் விழிப்பதும் கூட கவிதை
உண்ணுவதும் கவிதையென்றால்
உண்ணா நோன்புமோர் கவிதை!
காதல் என்றைக்கும்
வாழும் ஜீவகவிதை இங்கே!
காதலன், காதலிக்கு வசீகரிக்கும் கவிதையெனில்
காதலி, காதலனுக்கு மதி மயக்கும் கவிதை!
கணவனுக்கு அடங்கா மனைவி
மனைவிக்கு விளங்கா கணவனும் கூட
தாம்பத்திய கவிதைதான்!
பெற்றெடுக்கும் குழந்தைகள்
நவரச கவிதைகளாகி போக
கண்விழிக்கா கவிதை போல்
நாம்தான்
தூக்கத்தில் விரைகிறோம்
விண்ணைத் தொட
சதாநேரமும் கனவு கவிதைகளோடு!

Monday, July 13, 2015
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார் யார்?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார் யார்?
அம்பானியா? அல்லது அதானியா?
இரண்டு பேரும் கிடையாது....
ஹைதராபாத்தை சேர்ந்த "அஸார் மக்சுஸி"
ஒவ்வொரு நாளும் வீடில்லாத, ஏழ்மையான மக்களுக்கு நம் நாட்டில் சரியான உணவு கிடைக்காமல் பட்டினியாக இருக்கிறார்கள். அதுவும் ஐதராபாத்தில் டபீர்பூரா பாலத்தின் அடியில் இதைப்போல் பலரை காணலாம். இங்கு இப்போது ஒவ்வொரு ஆணும், பெண்ணும், குழந்தைகளும் வரிசையாக தட்டை கையிலேந்தி தங்கள் முறைக்ககாக காத்திருக்கின்றனர்.
இவர்கள் யாரும் பட்டினியாக படுப்பதில்லை காரணம் இந்த பணக்காரன் அஸார் மக்சுஸி..
Friday, July 10, 2015
உன்னால் முடியும்!!
வாலிபரே!! வாலிபரே!!
வசந்த எல்லைத் தொட்டவரே
காலிறுதியாட்டம் வென்ற
காட்டாறு குணத்தவரே!!
வீதியெங்கும் வீண்வம்பு உனை
விலைப்பேசக் காத்திருக்கு
நீதி வழி யாதென்று
நீ அறிந்து நடைபோடு
காலிறுதியாட்டம் வென்ற
காட்டாறு குணத்தவரே!!
வீதியெங்கும் வீண்வம்பு உனை
விலைப்பேசக் காத்திருக்கு
நீதி வழி யாதென்று
நீ அறிந்து நடைபோடு
Saturday, July 4, 2015
புரட்சியின் பூபாளம் !
புரட்சியின் பூபாளமே
எழுச்சியின் உத்வேகமாம்
உழைக்கும் வர்கத்தின்
ஊன்று கோலாம்
உறுதுணையாய் என்றும்
இருந்திடுமாம்
தடைகள் தகர்த்து
விடயம் தந்திடும்
மடமை நீக்கி
மனிதம் வளர்த்திடும்
எழுச்சியின் உத்வேகமாம்
உழைக்கும் வர்கத்தின்
ஊன்று கோலாம்
உறுதுணையாய் என்றும்
இருந்திடுமாம்
தடைகள் தகர்த்து
விடயம் தந்திடும்
மடமை நீக்கி
மனிதம் வளர்த்திடும்
Subscribe to:
Posts (Atom)