Wednesday, June 5, 2013

காயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் .




கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் 1969 ல் கோட்டாருக்கு வந்தபோது அவர் தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார்கள். முஸ்லிம்களின் மாபெரும் தலைவர் அவர். காயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் . அதனால் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். ( அப்படி புதிய வீடு எதுவும் அவர்கள் கேட்கவில்லை என்பது வேறு விஷயம் ) " அல்லாஹு அக்பர் " கோசம் முழங்க மக்கள் திரண்டு வந்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டார்கள். அன்றிரவு ,காலில் தேய்ப்பதற்குகோடாலி தைலம் கேட்டார்கள். மலேசியாவிலிருந்து வந்த பெரிய பாட்டில் தைலம் கொடுக்கப்பட்டது.அதை உபயோகித்து விட்டு அங்கேயிருந்த தேக்குமரத்தால் செய்யப்பட்ட புத்தம் புது அலமாரியில் வைத்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களையும் தன்னோடு எப்போதும் கொண்டு வரும் குரானையும் அந்த அலமாரியிலேயே வைத்தார்கள். இரவு உணவுக்குப் பின் குரான் ஓதிவிட்டு அதன்பிறகு தூங்கி எழுந்து, சுப்ஹு தொழுகை முடித்து , வீட்டு அலமாரியிலிருந்த குரானை எடுத்து ஓதிக் கொண்டிருந்தார்கள்.

அதன்பிறகு ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டார்கள். வருடங்கள் சென்று விட்டன. ஒருநாள் அந்த புதிய வீட்டின் புதிய அலமாரியிலிருந்து ஏதோ சலசலக்கும் சத்தம் கேட்டு அலமாரியை திறந்தார்கள். காயிதே மில்லத் உபயோகித்த கோடாலி தைலம் பாட்டில் அப்படியே கீழே விழுந்து நொறுங்கியது. அவர்கள் ஓதிவிட்டு தங்கள் குரானை வைத்திருந்த மேல்தட்டு லேசாக ஆட்டம் கண்டிருந்தது. இத்தனைக்கும் அன்று காலை வரை எந்தப் பழுதும் அந்த அலமாரியில் இல்லை. கோடாலி தைலம் கீழே விழுந்து உடைந்தது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. சிறிது நேரத்திற்கு பிறகு வந்த செய்தி அந்த வீட்டிலுள்ளவர்களை வியப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தி விட்டது. ஆம்... காயிதே மில்லத் அவர்கள் காலமாகி விட்டார்கள் என்ற செய்திதான் அது. இப்போது அந்த அலமாரியும் உடைந்துபோன கோடாலி தைலம் பாட்டிலும் புதிய செய்தியை அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தன. அந்த அலமாரி எந்தப்பழுதும் இல்லாமல் இப்போதும் இருக்கிறது. காயிதே மில்லத்தை பற்றிய பேச்சு வரும்போதெல்லாம் மெய்சிலிர்க்க வைக்கும் இந்த சம்பவங்களை அந்த குடும்பத்தார் நினைவு கூறாமல் இருப்பதில்லை.. இன்று காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாள் !  காயிதே மில்லத் அவர்கள் தங்கி இருந்த வீடு என் மாமனார் வீடு ( மனைவி வீடு ) அபூஹாஷிமாவாவர்

அபூஹாஷிமாவாவர்

Abu Haashima Vaver






 'காயிதேமில்லத் மரணித்தபோது புதுக்கல்லூரி வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அங்கே இறுதி மரியாதை செலுத்த வந்த தந்தைப் பெரியார், 'தம்பி போயிட்டீங்களா..' என குலுங்கினார். 'நான் போயி இந்தத் தம்பி வாழ்ந்திருக்கக்கூடாதா' என விசும்பினார். 'இனி இந்தச் சமுதாயத்தை யார் காப்பாற்றுவார்' என குமுறினார். 'இனி முஸ்லிம் சமுதாயத்திற்கு இவர் போல ஒரு தலைவர் கிடைக்கமாட்டார்' என கருத்துரைத்தார்.' Aloor Shanavas

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நெகிழ வைத்தது சம்பவம்... அதைவிட தந்தைப் பெரியாரின் பேச்சு...