கட்டிவைத்த
கரையில்லா வெள்ளம்
எந்நாளும் நீரோடும்
உயிர் நதி
காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ
வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை
எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ
விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்
தூற்றி வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி
ரசனையெனும்
அமுதக்கடலில் மிதப்பு
அதில் துடிப்புகளின்
துடுப்புகளாய் அலைவு
பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்
விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
---------------------------------------------------
ஒரு கவிஞனின் முகவரி
கண்களில் கவர்ச்சி
கருத்தினில் முதிர்ச்சி
பழக்கத்தில் இளமை
பண்பினில் தாய்மை
அவைதனில் அடக்கம்
அன்பினில் பெருக்கம்
உழைப்பினில் பெண்டுலம்
உள்மனம் தாண்டவம்
சகிப்பினில் நெருப்பு
சமத்துவக் காற்று
எடுப்பதில் வானம்
கொடுப்பதில் பூமி
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.in/
பாசத்துடன் புகாரியின் பேசும் குரல்.
அன்புடன் புகாரி
நான் பிறந்த ஊர்
வானூறி மழை பொழியும் வயலூறி கதிர் வளையும் தேனூறி பூவசையும் தினம்பாடி வண்டாடும் காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும் பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில் நான் பிறந்தேன்
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால் சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.
தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.
என் ஊரைப்பற்றி நான் சொல்லிவிட்டேன் என்னைப்பற்றி என் கவிதைகள் சொல்லட்டும்.
http://anbudanbuhari.blogspot.in/
1 comment:
//விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்...//
அருமை... வாழ்த்துக்கள்...
Post a Comment