Sunday, June 30, 2013

பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..


பாலையான வாழ்க்கையைப்

பசுஞ்சோலையாய் ஆக்கவே

பாலைவன நாட்டுக்கே

பறந்து வந்த பறவைகள் நாங்கள்...

இச்சையை மறந்தோம்;

இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;

பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;

பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;

இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;


"பொருளிலார்க்கு இவ்வுலகில்லை"

பொருள்பதிந்த திருக்குறளுக்கு பதவுரை ஆனோம்;

"இல்லானை இல்லாலும் வேண்டாள்;

ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்;அவன்

சொல் செல்லாமல் போய்விடும்" என்றாள்

ஔவ்வையார் அன்றே......

மூதாட்டியின் மூதுரைக்கும்

முழுமையான விரிவுரை நாங்களே...

பாதாளம் வரை பாயும் பணமே

பாருலகை இயக்குமென்று புரிந்தது மனமே



“கவியன்பன்”,கலாம்

அபுல் கலாம் பின் ஷைக் அப்துல் காதிர்
“கவியன்பன்”,கலாம் வலைப்பூத் தோட்டம் http://www.kalaamkathir.blogspot.com

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள்... கலாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...