Saturday, September 24, 2022
Wednesday, September 21, 2022
நீடூர், கந்தணம்புத்தூர், அருவாப்பாடி, திருவிழந்தூர் என்கிற திரு இந்தளூர்னு எல்லாமே...
சில தினங்களுக்குமுன் சில அலுவல்களுக்காக
நண்பர் ஒருவரைச்சந்திக்க வைத்தீஸ்வரன்கோவில்
சென்றபோது அவரது இல்லத்தின் கூடத்து
அலமாரியில் இந்த நூல் கண்ணில்
தென்பட்டது. பேசிக்கொண்டிருந்தபோதே என் கவனம் அந்நூலின்
பக்கம் திரும்பியதை உணர்ந்தவர் திருஇந்தளூர் உங்க ஊருக்கு பக்கத்து
ஊராச்சே இல்லையா என்று கேட்டுட்டு
அந்த நூலை எடுத்துவாசிக்க கொடுத்தார்.
சில பக்கங்கள் வாசிக்க துவங்கும்போதே எல்லாம்
எம் இருப்பிடம் சுற்றிய வரலாற்று குறிப்புகளாகவே
இருந்ததை கண்டு வியந்தேன்.
இந்த பகுதியின் நிலங்களில் பெரும்பங்கு 300 வருடங்களுக்கு முன்வரை கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் ராஜேந்திர சோழர்களுக்கு (ராஜ ராஜ சோழ
பரம்பரையினர்)சொந்தமாக இருந்ததாம் !
நீடூர்,
கந்தணம்புத்தூர், அருவாப்பாடி, திருவிழந்தூர் என்கிற திரு இந்தளூர்னு
எல்லாமே அவர்களின் ஆளுமை உரிமைகளுக்கு உட்பட்ட
எல்லைகளாம்
இந்த விபரமெல்லாம். 2010ஆம் ஆண்டு
ஆனந்தாண்டவபுரம் உடைந்த சிவன்கோவிலுக்கு கீழே
கிடைத்த இந்தியாவிலேயே இதுவரை கிடைத்ததில் மிகப்பெரிய
செப்பேடு (57 தொகுப்புகளாக)சொல்லுதாம்...
மேலும் படிக்கையில்...நாம வாழ்ந்து சுவாசிக்கும்.ஏரியா முழுக்கவே வாறதுங்கோ சிட்டிசன் சினிமால காணாமற்போன அத்திப்பட்டு கதை போல.. இதிலும் பல அதிர்வான சம்பவங்கள் சொல்லப்படுகிறது..
Monday, September 19, 2022
Saturday, September 17, 2022
வேரூன்றி விட்ட நிறவெறிகளின் நிலைமாறி போனாலும்,
வேரூன்றி
விட்ட நிறவெறிகளின் நிலைமாறி போனாலும்,
அனைவரும்
சமம் என்ற
அண்டப்புழுகின்
துளிர்
அழிய வில்லை.
கறுப்பு
தான் இந்த உலகம்-அதில்
வெளிச்சம்
பாய்ச்சினால் பல
வண்ணமாக
தெரிகிறது..!
இருளின்
கருப்பில் தான்
எத்தனை
அமைதி..
ஏன் இந்த இளக்காரம்
கருப்புக்கு
மட்டும்..?
இனவெறியில்
துவக்கியதே
இந்த கருப்பின் கதை கருவு..
விருப்பத்தை
வெளிப்படுத்த
வெள்ளையையும்,
கஷ்டத்தை,
கண்டனத்தை..
சோகத்தை
வெளிப்படுத்த ,
கருபென்ற
கருத்தை விதைத்த
கதை தொடர்கிறது..
இறப்புக்கு
இரங்கல் உடுப்பே
கருப்பாடை,..
Thursday, September 15, 2022
Maths ரொம்ப கஷ்டமான subject ன்னு நினைக்கிறீங்களா...? /Ashika Imthiyaz
Maths ரொம்ப
கஷ்டமான subject ன்னு நினைக்கிறீங்களா...?
நாம school ல படிக்குறப்போ, college ல படிக்குறப்போ,
பெரும்பாலும் Mathematics ஒரு கஷ்டமான subject ஆக
தான் இருந்திருக்கும். எனக்கும் அப்படி தான். ஆனால்,
காலப்போக்கில் Maths மாதிரி ரொம்ப ஈஸி
யான subject எதுவுமே இல்லை ன்னு
புரிஞ்சிகிட்டேன்.
Engineering ல theoretical subjects ஐ விட analytical subjects தான் ஈஸி
யாக இருந்தது. நாம ஏன் Maths படிக்கணும்
கிரது காலேஜ் ல படிக்கும்
போது புரியல. ஆனால், வேலை
செய்யும் போது , எல்லாமே Calculation தான்
என புரிந்தது. நாம நினைக்கிற மாதிரி
Maths அவ்வளவு கஷ்டமான விஷயமும் இல்லை.
அதோட தேவை என்ன என்று
புரிந்து விட்டால் அது கஷ்டமாகவும் இருப்பதில்லை.
School and College ல Maths ஒரு subject ஆக தான் இருக்கும். ஆனால், கல்லூரி யை விட்டு வெளிவந்த பிறகு, Maths becomes a Life skill. எப்படி?
Tuesday, September 13, 2022
Sunday, September 11, 2022
Saturday, September 10, 2022
அமெரிக்க தமிழர் அஸீஸ் இஸ்மாயில் அன்சாரிக்கு Aziz Ansari கோல்டன் குளோப் விருது -5 தகவல்கள்
இஸ்மாயில்
அன்சாரிக்கு கோல்டன் குளோப் விருது
-5 தகவல்கள்
8 ஜனவரி
2018
அஸீஸ் இஸ்மாயில் அன்சாரி
பட மூலாதாரம்,KEVIN WINTER
75வது கோல்டன் குளோப் விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக
கொண்ட அமெரிக்கருக்கு விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவில்
சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்காக
ஒவ்வொரு வருடமும் கோல்டன் குளோப் எனும்
விருது வழங்கப்படுகிறது.
கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தினமும்
அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி)
அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி
மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச்
செல்வதையும் சற்று நேரத்திற்குப்
பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.
அபூபக்கர்
(ரலி) எனென்ன நல்ல காரியங்கள்
செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர்
(ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம்
மட்டும் தெரியவில்லை.
நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.
Friday, September 9, 2022
மிக அருமையான கருத்து !!!!
மிக அருமையான கருத்து !!!!
÷÷÷÷÷
பாகற்காய்
ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் ஒரு முறை சிலர் சென்று
நாங்கள் புண்ணிய யாத்திரை எல்லாம்
சென்று புனித நதியில் நீராடி
வரலாம் என்று இருக்கிறோம்.! நீங்களும்
எங்களோடு வந்தால் நன்றாக இருக்குமே
என அவரை அழைத்தார்கள்...!
ஞானியோ,
இப்போது வருவதற்கான சாத்தியம்
இல்லை என்று கூறி விட்டு,
அவர்களிடம் ஒரு பாகற்காயை தந்து,
''எனக்காக ஒரு உதவி செய்யமுடியுமா?''
என்று அவர்களை பார்த்துக் கேட்டார்.
அவர்கள்
''என்ன செய்ய வேண்டும் கட்டளை
இடுங்கள் மகராஜ்' என்றனர்.
''ரொம்ப
பெரிய வேலை எல்லாம் இல்லை.
நீங்கள்
புனித நதியில் முழுகும் போதெல்லாம்
இந்த பாகற்காயையும் முழுக்கி என்னிடம் திரும்ப கொண்டு வந்து
இதை சேர்த்து விடுங்கள்'' என்றார்.
அன்பர்கள்
ஞானி சொன்ன மாதிரியே செய்தனர்..!
திரும்ப
வந்து அவரிடம் அந்த பாகற்காயை
பத்திரமாக ஒப்படைத்தனர்.
அவர் அந்த பாகற்காயை சிறு
துண்டுகளாக நறுக்கி எல்லாருக்கும் ஒரு
துண்டை கொடுத்தார்..! புனித நதியில் முழுகி
வந்த பாகற்காய்..! இப்போ சாப்பிட்டுப் பாருங்க
தித்திக்கும் என்றார்...!
ஆர்வமுடன்
வாங்கிய அன்பர்கள் வாயில் போட்டு மென்ற
வேகத்தில் முகம் மாறியது !
தித்திக்கும்னிங்க
கசக்குதே...!
என்றார்கள்
ஞானியிடம் ஏமாற்றத்துடன்..!
பார்த்தீர்களா?
பாகற்காய் எத்தனை தான் நதியில்
முழுகினாலும் அதன்
சுபாவத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அதைப் போலவே நாம் நமது
அடிப்படைக் குணங்களை மாற்றிக் கொள்ளாமல்,
எந்த புண்ணிய தீர்த்தத்தில் முழுகினாலும்
, எந்த கோயிலுக்கோ , சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, குளத்துக்கோ, புண்ணிய ஸ்தலங்களுக்கோ போனாலும்
என்ன பயன் வந்து விடப்
போகிறது?"
மாற்றங்கள்
மனங்களிலும் குணங்களிலும்
வருவதே இனிதாகும் !💐💐💐
முகநூல் பதிவு....
Mohamed Kaffoor
Thursday, September 8, 2022
Wednesday, September 7, 2022
கவி கா.மு. ஷெரீபின் இசைப் பாடல்கள்
கவி கா.மு. ஷெரீப் இசைப்பாடல்களையும் யாத்தளித்துள்ளார். அவை இஸ்லாமிய இசைப் பாடல்களாகவும் திரைவானில், இனிமையாக ஒலிக்கும் தீங்கானங்களாகவும் தமிழக எல்லை மீட்புப் போராட்டங்களில் ஆங்காங்கே உடனுக்குடன் எழுதிப் பாடப்பட்ட உணர்ச்சிமிகு பாடல்களாகவும் திகழ்கின்றன.
நீங்களும்
பாடலாம் இஸ்லாமிய இசைப்பாடல்கள்
கவி கா.மு. ஷெரீப்
‘நீங்களும் பாடலாம் இஸ்லாமிய இசைப்பாடல்கள்’
எனும் நூலினை 1984 ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் வெளியிட்டார். இந்நூலில் 46 இஸ்லாமிய இசைப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆ.கா.அ.
அப்துஸ்ஸமது இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார். இசைப்பாடல்களின் தனித்தன்மை குறித்து அதில் அவர் மனம்கொளத்
தக்க வகையில் குறிப்பிடுகிறார்.
ka mu sherif“கவிதையில்
என்னதான் கருத்து இருந்தாலும் அதை
இசையோடு குழைத்து வழங்கும் போது கேட்பவர் இதயங்களில்
கவிதையின் கருத்துக்கள் ஆழமாகப் பதிந்துவிடுவதோடு இசைமுறைப்படி
பாடமுடியாதவர்களைக்கூட குரலெடுத்து நாவசைத்துப் பாடத்தூண்டும் ஒரு தனி வலிமை
இசைப்பாக்களுக்கு இருப்பதைப் பார்க்கிறோம். இன்னும் சொல்வதாயின், கருத்தில்லாப்
பாடல்கள்கூட இனிய இசையோடு அமைந்து
விடுமாயின் அந்த இசை, தகுதி
இல்லா அந்தப் பாடலைக்கூட வாழ
வைக்கிறது” எனக் கருத்துரைக்கும் ஆ.கா.அ. அப்துல்ஸமது,
“அத்தகைய பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பொருள் செறிந்த இஸ்லாமியக்
கருத்துக்கள் மேவிய இசைப் பாடல்களை
நம் கவிஞர்கள் ஆக்கித் தரக்கூடாதா என்ற
ஏக்கம் என்னுள் எழுவதுண்டு” எனத்
தம் ஏக்கத்தையும் வெளியிடுகிறார்.
Tuesday, September 6, 2022
#உமையாக்கள்_பாகம்_2 #அலீ_பின்_அபுதாலிப்_அத்தியாயம்_3 அபு ஹாஷிமா
#உமையாக்கள்_பாகம்_2
#அலீ_பின்_அபுதாலிப்_அத்தியாயம்_3
அபு ஹாஷிமா
அண்ணல்
நபிகளின்
அடிமனத்துக்
காதலையெல்லாம்
அள்ளி எடுத்து சூடிக் கொண்டவர்
கதீஜா பிராட்டியார் .
அம்மையார்
பெற்றெடுத்த
அழகு மகள் பாத்திமா
நபிகளின்
ஓவியப் பிரதி .
அருமை மகள் மீது நபிகளாருக்குக்
கொள்ளைப் பிரியம் .
தமது ஈரல் குலை என
உணர்ச்சி
பொங்க அழைத்த பெருமானாரின் உயிர்
கவிதை
ஃபாத்திமா
.
தாயை இழந்த மகளுக்கு
தந்தையே தாயுமானார்
.
இதயப் பூவுக்கு மணம் முடித்து மகிழ
ஆசைப்பட்டார் தந்தை .
Monday, September 5, 2022
Saturday, September 3, 2022
Friday, September 2, 2022
Thursday, September 1, 2022
நேருக்கு நேர் சன் நியூஸ்"kalaignar memorial | kalaignar Daughter selvi Interview | Gopalapuram House |"
நேருக்கு நேர் சன் நியூஸ்
"kalaignar memorial | kalaignar Dau
ghter selvi Interview | Gopalapuram House |"