Wednesday, June 20, 2018

தும்மல் ஒரு பாதுகாப்பு

தும்மல் வருவது

அமெரிக்கர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. யாராச்சும் தும்மினால் " Bless you" என்று வாழ்த்துவார்கள்.

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

ஒருவர் தும்மினால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற நம்பிக்கை மூடநம்பிக்கையாகும்.

"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" ஆதாரம் : புகாரி 4826.

தும்மினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று சொல்கிறோம். ஏன் என்றால் தும்மும் போது எந்நேரமும் சதா இயங்கிக் கொண்டிருக்கும் இதயம் கண நேரம் நின்று விடுகிறது. பிறகு உடனே அதற்கு உயிர் கொடுத்து இயங்க வைத்த அல்லாஹ்விற்கு நன்றி கூறும் விதமாக இவ்வாறு கூறுகிறோம்.

உங்களில் ஒருவர் தும்மி, ''அல்ஹம்துலில்லாஹ்'' (எல்லாப் புகழும் இறைவனுக்கே) கூறினால், அதைக் கேட்டவர் ''யர்ஹமுகல்லாஹ்'' (அல்லாஹ் உனக்கு அருள் புரிவான்) என்று கூறுவது கடமையாக உள்ளது.

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தும்மினால் தன் கையை அல்லது தன் துணியை தன் வாயில் வைத்துக் கொள்வார்கள். இதன் மூலம் தன் (தும்மல்) சப்தத்தை (மறைத்து) குறைத்துக் கொள்வார்கள். (நூல்: அபூதாவூது, திர்மிதீ)

, தும்மினால் “ஆயுசு நூறு’ என்று பெரியவர்கள் சொல்வது உண்டு
தும்மல் என்பது ஒரு எச்சரிக்கை. “உங்க உடலுக்குள் தேவையற்ற அந்நிய பொருள் தூசு, தும்பு, கிபருமிகள் நுழையப் போகின்றன. இதனால் உடலுக்குக் கெடுதல்’ என்பதை உங்களுக்கு எச்சரிப்பதுதான் தும்மல். இன்னொரு வகையில் சளி, ஜலதோஷம், சைனஸ், வைரஸ் தொற்று ஆகியவை வரப்போகின்றன என்பதற்கான அறிகுறி
பனியோடு தூசி கலக்க
நாசி அடைக்க
தும்மல் வர
தும்மலை நிறுத்த
மருந்து சாப்பிட
தும்மல் நிற்க
ஜுரம் வர
மருத்துவர் ஆலோசனை பெற
கூட்டம் அலை மோதும் நிலை

சாதிப்பது மனது
வலிமையான மனது நம்மை பாதுகாக்கும்
சாதாரண தும்மல் வந்தால் பயம்
தும்மலை துயரமாக்கி மனதை கலங்க வைப்பது தேவையற்றது
தொடர் தும்மல் வந்தால்
தொல்லைகள் அதிகமானால்
மருத்துவரை அணுகலாம்
ஒவ்வாமையும் தும்மலுக்கு ஒரு காரணமாகலாம்

தும்மலை நிறுத்துவது நல்லதல்ல
தும்மல் ஒரு பாதுகாப்பு
தும்மல் இறைவன் கொடுத்த அருள்
தும்மல் வந்தால் நன்றாக தும்ம வேண்டும்
நாசியில் முடி இருப்பது தூசியை தடுக்க
அதனையும் மீறி உட்புகும் தூசியால் வரும் தொந்தரவுகளை
தடுத்து தும்மலாக வருகின்றது
தும்மளால் பல கிருமிகள் வெளிப்படுவாதால் அந்த கிருமிகள் அடுத்தவருக்கு பரவாமல் இருக்க ஒரு துணியை வைத்துக் கொள்வது சிறப்பு .

உங்களில் ஒருவர் தும்பினால் அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப்புகழும்அல்லாஹ்வுக்கு) என்று கூறட்டும். அவருடைய சகோதரர் அல்லது அவரது நண்பர் அவருக்கு ‘யர்ஹமுக்கல்லாஹ்’ (இறைவன்உங்களுக்கு கருணை புரிவானாக) என்று அவருக்காக மறுமொழி கூறட்டும். எர்ஹமுக்கல்லாஹ் என்று அவர் கூறினால்(தும்பியவர்) அவருக்கு யஹ்தீகுமுல்லாஹு வயுஸ்லிஹு பாலகும் (இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக. உங்கள் நிலையை சீர்செய்வானாக.) என்றுகூறட்டும்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6224
 *தும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க, காது சவ்வு கிழியும்!*

‘அச்ச்ச்ச்ச்ச்ச்…’ என சத்தம் போட்டு பொது இடத்தில் தும்முவதை கூட இப்போது அநாகரீகம் என்று கருதுகிறோம். கூட்ட நேரிசல் மிக்க பேருந்திலோ, கம்ப்யூட்டர் கீ போர்டுகளில் டைப் அடிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருக்கும் அமைதியான அலுவலகத்திலோ யாரவது சத்தம் போட்டுத் தும்மி விட்டால் போதும், அவர் ஏதோ கொலை குற்றம் செய்ததைப் போல் அனைவரது பார்வையும் அவர் மீது பாயும்.

ஆனால் சபை நாகரீகம் கருதி பலர் தும்மலை அடக்க முயற்சிக்கிறோம், அதன் ஆபத்து புரியாமல். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தும்மலை அடக்க மூக்கையும், வாயையும் பொத்துவதன் மூலம் காது சவ்வு கிழிந்து விடும் அபாயம் இருப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் இது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் எனவும் தெரிய வந்துள்ளது. தும்மலை நாம் அடக்கும்போது நமது நுரையீரல்களுக்குள் அடைபட்டுப் போகும் காற்று வெளியேற வேறு வழியைத் தேடும். அப்போது காது துவாரம் வழியாக வெளியே செல்ல அதீத அழுத்தத்துடன் காற்று முந்தும், அப்படி அழுத்தம் நிறைந்த இந்தக் காற்று ஒன்று Ear drum எனப்படும் நமது காது சவ்வைக் கிழிக்கவோ அல்லது அப்படியே மேலேறி மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களைத் தாக்கவோ அதிக வாய்ப்பு உள்ளது.

34-வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இப்படி தும்மலை அடக்க முயற்சித்து தனது மூக்கையும் வாயையும் ஒரே நேரத்தில் மூடி உள்ளார். உடனே அவரது தொண்டையில் ஏதோ வீக்கம் ஏற்பட்டுள்ளது

அதைத் தொடர்ந்து இருமலும், வாந்தி வருவதைப் போன்ற உணர்வும் இவருக்கு ஏற்பட்டுள்ளது, உடனே மருத்துவரின் உதவியை இவர் நாடியுள்ளார். பரிசோதித்த மருத்துவர்கள் இவருடைய தொண்டையின் பிற்பகுதியில் முறிவு ஒன்று ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் தன்னுடைய குரலை இழந்து, உணவுப் பொருட்களை கூட இவரால் விழுங்க முடியாத நிலைக்குச் சென்றுள்ளார்.

பின்னர் டோமோகிராஃபி ஸ்கேன் மூலம் இவர் தும்மலை அடக்கிய போது காற்று குமிழ்கள் இவரது தொண்டை மட்டும் இல்லாமல் விலா எலும்பு வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனே இவரை மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பின் கீழ் வைத்து தொடர்ந்து 7 நாட்களுக்கு குழாய் மூலமாக உணவை ஊட்டி அந்த வீக்கம் குறைந்த பிறகு இனி தும்மல் வந்தால் அதை அடக்காதீர்கள் என அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது போன்ற எந்த ஆபத்திலும் நீங்கள் சிக்காமல் இருக்க இனியாவது தும்மல் என்பது ஒரு இயற்கையான விஷயம்தான், தும்முவதால் யாருடைய கௌரவத்திற்கும் குறைவு ஏற்படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.அது மட்டுமல்ல நாம் ஒரு தடவை தும்மும்போது பல்லாயிரக் கணக்கில் நோய்க் கிருமிகள் வெளியேறுகிறது.

தும்முவதர்க்கு ஹிந்தியில் என்ன சொல்ல வேண்டும் என்று ஒருவரிடம் கேட்டேன்
ஹிந்தி என்றாலே தும்மல் வருகின்றது என்று ஒரு தும்மல் போட்டு என்னையும் தும்ம வைத்து விட்டார்
இவர் தும்மினால் என்ன நடக்குது பாருங்க..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails