Monday, June 25, 2018

நீலக் கடலின் ஓரத்தில்...

ஃபிரோஸ் கான்
****************************

நீஸ்.. NICE, France.

மத்திய தரைக் கடலின் அலைகள் தழுவும் ஒரு அழகிய கடற்கரை நகரம்.

பிரான்ஸின் தெற்கே ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நீஸ் நகரத்தின் நீண்ட கடற்கரை உலகப் புகழ் பெற்றது.

தலைநகர் பாரீஸூக்கு அடுத்து சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் சுற்றுலா தலம் இது . வருடத்தின் அத்தனை பருவக்காலத்திலும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

கடற்கரை என்றாலே மணல் என்ற கற்பனையில் வருபவர்களுக்கு இந்த கடற்கரை வியப்பளிக்கும். ஏனென்றால் இது ஒரு கூழாங்கல் கடற்கரை. ( Pebble Beach 🏖)


கடற்கரையின் ஓரத்திலேயே அமைந்துள்ள விமான நிலையம் இந்நகரத்தின் அழகுக்கு, மேலும் அழகைக் கூட்டுகிறது. விமானம் தரையிறங்கும் போது கடலில் இறங்குவது போன்ற ஒரு பரவச பயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த கடற்கரையை ஒட்டியுள்ள அழகிய நீண்ட நடைபாதைக்கு promenade de anglais என்று பெயர். அந்த நீலக் கடலின் அழகை கண்களால் ரசித்துக்கொண்டே இதமான கடற்கரை காற்றை சுவாசிக்கும் போது மனதில் மகிழ்ச்சி அலை மோதுகிறது. இந்த கடற்கரைச் சாலையில் நேர்த்தியாக நடப்பட்டிருக்கும் ஈச்ச மரங்களின் அழகு இந்த கடற்கரையின் மேல் காதல் கொள்ள வைக்கிறது.

இந்த கடற்கரையின் வசீகரமான வளைவுப்பகுதிக்கு தேவதையின் வளைவு Baie des anges என்று பெயர். இதன் மொத்த அழகையும் உயரத்திலிருந்து கண்டு களிக்க château de colline என்ற மலைக்கோட்டைக்கு ஏற வேண்டும்.
நீலக் கடலும் நீல வானமும் சங்கமிக்கும் அந்த காட்சியை இந்த மலையிலிருந்து காணும் போது மனம் ஒரு வித ஆனந்த அமைதியில் மூழ்குகிறது.

நீஸின் படகுத்துறை 🛥 மிகவும் பிரபலமானது. கடலில் இருந்து நீஸ் நகரின் கரையோரங்களை ரசிக்கவும், நீல வண்ண கடலில் பயணித்து அருகில் அமைந்திருக்கும் Antibes, Cannes நகருக்கு படகில் சென்று வருவதற்கும் முன்பதிவு செய்து விட்டு வந்தால் சுற்றி ரசிக்கலாம். மேலு‌ம் பாராசூட்டில் பறப்பதற்கும், ஹெலிகாப்டரில் பயணித்து பரவசப்படுவதற்கும் இங்கு வசதிகள் உண்டு.

நீஸ் நகரின் மொத்த அழகும் கடற்கரையில் கொட்டிக்கிடப்பதால் இந்த கடற்கரையை ரசித்து பார்ப்பதற்கு அருமையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏறக்குறைய ஏழு கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையை, நடந்து ரசிக்கலாம், Cycle 🚴அல்லது segway வாடகைக்கு எடுத்து அதில் சுற்றலாம், மேலும்.. கார் 🚙 , பஸ் 🚍 படகு 🚣, ரயில் 🛤 , ஹெலிகாப்டர் 🚁என்று அனைத்திலும் பயணித்து கண்டுக் களிக்க வசதி இருக்கிறது.

#Nice
#promenadeanglais
#chateaudecollins

ஃபிரோஸ் கான் -----------------------------------

No comments: