Tuesday, June 26, 2018

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல


بسم الله الرحمن الرحيم   

மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல

எதிர்காலத்தைப் பற்றிய கனவுகள், ஆசைகள் எல்லாப் பருவத்தினருக்கும் உண்டு.சில நேரம் சிலருக்கு அவைகள் நிறைவேறியதும் உண்டு.சில நேரம் நிறைவேறாமல் போனதும் உண்டு.குறிப்பாக மாணவப் பருவத்தில் ஏற்படும் கனவுகளுக்கு எல்லைகள் என்பதே கிடையாது.அந்தக் கனவுகளில் ஒன்று தேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும். எதிர் காலத்தில் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

தற்போது, பொதுத்தேர்வுகள் தொடங்கி இருக்கும் நிலையில் மாணவ, மாணவிகளுக்கு தகுந்த ஆலோசனைவழங்க வேண்டியது அவசியம்.
இன்றையபெற்றோர்களும்,ஆசிரியர்களும் தேர்வுகளில் பெறப்படும் அதிக மதிப்பெண்கள் தான் எதிர்கால வாழ்க்கையைத் தீர்மானிப்பதாக ஓர் தவறான பார்வையை மாணவச் சமூகத்தின் மீது திணித்து விடுகிறார்கள்.இதனால் மாணவச் சமூகம் தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ரிசல்ட் வரும் நாள் வரை ஒரு வித பதட்டத்தோடும், அச்சத்தோடும், மனச் சோர்வோடும் காணப்படுகின்றனர்.இந்திய மருத்துவ சங்கம் மேற்கொண்ட ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும், 70 சதவீத மாணவர்களுக்கு தேர்வு ஜுரம் வருவதாகத் தெரிவித்துள்ளது.எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத போது மிகுந்த ஏமாற்றமும், விரக்தியும் ஏற்பட்டு பெற்றோர்களை தாங்க முடியாத சோகத்தில் ஆழ்த்தும் முடிவை (தற்கொலை செய்து கொள்வது) மாணவச் சமூகம் கையில் எடுப்பது சமீப காலமாக பெருகி வருவதைப் பார்க்க முடிகிறது.இந்நிலையில்தேர்வு கால பயம் தேவையற்றது என்பதையும் வாழ்க்கையில்அடுத்த கட்டத்துக்கு இடம் பெயர்வதற்கான துணைச் சாதனம் மட்டும் தான் இந்த மதிப்பெண்கள் என்பதையும் மாணவச் சமூகத்திற்கு உணர்த்த வேண்டும்.

மனிதன் பிறப்பு முதல்  இறப்பு வரையிலான இடைப்பட்ட காலம் தேர்வு களம் தான்

الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (2)

அவன் மரணத்தையும் வாழ்வையும் ஏற்படுத்தினான்; உங்களில் யார் மிகச் சிறந்த செயலுக்குரியவர் என உங்களைச் சோதிக்கும் பொருட்டு!” ( 67: 2 )இதன்படி நாம் அனைவரும் தேர்வு எழுதிக் கொண்டு தான் இருக்கின்றோம்மனிதன் தன் வாழ்வில் ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு கடந்து செல்வதற்கான ஒரு தேடல் தான் தேர்வாகும். ஆனால் இன்றைய கல்வி முறை, பெற்றோர்களின் சிந்தனை, ஆசிரியர்களின் நோக்கம், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள்சமூகத்தின் பார்வை ஆகியவைமாணவச் சமூகத்தின் மீது அளவு கடந்த எதிர்பார்ப்புகளை திணித்து வைத்திருக்கின்றது.

பெற்றோர்களின் சிந்தனையில்  உயர்ந்த இலட்சியம் இருக்கலாம். ஆனால் நிர்பந்திக்கக் கூடாது

இன்றைய அநேக பெற்றோர்கள் தங்களின் கனவுகளை நனவாக்கும் இயந்திரக் கருவிகளாக தங்களின் பிள்ளைகளைப் பார்க்கின்றார்கள்.வளரும் போதே, படிக்கும் போதே நீ டாக்டராக வேண்டும், இன்ஜீனியராக வேண்டும், நீ கலெக்டராக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.விருப்பமில்லாத துறையில் பிள்ளைகளை கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு பல்கழைக்கழக துணை வேந்தர் கூறியது. உங்கள் பையனுக்குள்ளே ஒரு டாக்டரோ, ஒரு எஞ்சினியரோ, ஒரு ஆசிரியரோ, ஒரு மெக்கானிக்கோ, ஒரு வக்கீலோ, ஒரு வியாபாரியோ ஒளிந்திருக்கிறார்கள். அவர்களை அவர்களாக உருவாக்குவதற்கு பதிலாக நீங்கள் வேறுவிதமாக திசை திருப்புகிறீர்கள்.தோற்றுப்போகிறீர்கள். மெக்கானிக்காக வர வேண்டியவனை நீங்கள் டாக்டராக உருவாக்க உங்கள் சக்தியை வீணடிக்கிறீர்கள். அவன் இரண்டு பேராகவும் (டாக்டர், மெக்கானிக்) வர முடியாமல் ஆகி விடுகிறான். ஆகவே அவனை ஆராயுங்கள். அவன் விருப்பத்தில் கவனம் வையுங்கள். அவனுக்குள் இருக்கும் திறமையை வெளியே கொண்டு வாருங்கள். உமர் ரழி அவர்கள் இஸ்லாத்திற்கு வருவதற்கு முன் இஸ்லாமியர்களை வதைப்பதில் இன்பம் கண்டவர். அவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின் அந்த முரட்டுத்தனத்தை விடச்சொல்லி நபி ஸல் வலியுறுத்தவில்லை. மாறாக அந்த முரட்டுத்தனத்தை இஸ்லாமிய நெறிகளை பாதுகாப்பதிலும், இஸ்லாமிய எதிரிகளை வீழ்த்துவதிலும் திருப்பினார்கள்

இவ்வுலகிற்கு  எல்லா வகையான ஆற்றல் கொண்ட மனிதர்களின் தேவை இருக்க ஒரு குறிப்பிட்ட வகை கொண்ட ஆற்றல் கொண்டவர்களாக தமது பிள்ளைகள் உருவாக வேண்டுமென பெற்றோர்நினைக்கிறார்கள்.

ولما ولدت النّعمان بن بشير حملَتْهُ إلى رسول الله صَلَّى الله عليه وسلم، فدعا بتمرة فمضغها، ثم ألقاها في فيه فحنّكه بها،فقالت: يا رسول الله، ادْع الله أن يكثر ماله وولده، فقالأما ترضين أن يعيش كما عاش خاله حميدًا، وقُتل شهيدًا، ودخل الجنّة(الخصائص الكبرى)

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களின் சகோதரி அம்ரா (ரலி) அவர்கள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கின்றார்கள். அம்ராவின் கணவர் பஷீர் (ரலி) அவர்கள் நுஃமான் என அந்தக் குழந்தைக்கு பெயரிட்டு அண்ணலாரிடம் ஆசி பெற்று வருமாறு தம் மனைவி அம்ராவை நபி {ஸல்} அவர்களிடம் அனுப்பி வைக்கின்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் கையில் நுஃமானைக் கொடுத்த அம்ரா (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! என் பிள்ளை நுஃமானுக்கு பொருளாதார வளத்திற்கும், அதிக பிள்ளைச் செல்வத்திற்கும் துஆச் செய்யுங்கள்” என்று கூறினார்கள்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ஒரு பேரீத்தம் பழத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதை வாயில் போட்டு மென்று நுஃமானுக்கு கொடுத்து “அர்வா! என்ன உன்னுடைய ஆசை இப்படி இருக்கிறது? உன் சகோதரன், நுஃமானின் மாமா அப்துல்லாஹ் இப்னு ரவாஹாவைப் போல உன் மகன் புகழோடு வாழ வேண்டும்” என்ற ஆசை உமக்கு இல்லையா? பெரும் போராளியாக இருந்து மார்க்கத்திற்காக உயிர் நீத்து, சுவனத்து வாழ்வைப் பெற்ற அந்த உன்னத நிலையை உம் மகன் அடைய வேண்டும் என்ற ஆசை உமக்கில்லையா?” என்றார்கள்எல்லோரையும் போல காசு, பணத்திற்கு ஆசைப்படாமல் உயர்ந்த ஆசைகளைக் கொண்டு தங்களின் மழலைகளை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அர்வா (ரலி) அவர்களின் ஆழ்மனதினில் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் விதைத்தார்கள்.அர்வா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் எண்ணப்படி நுஃமான் (ரலி) அவர்களை வார்த்தெடுத்தார்கள்.

ஆதலால், அல்லாஹ் அர்வா (ரலி) அவர்கள் தன் மகனுக்காக நபி {ஸல்} அவர்களிடம் எந்த பொருளாதார வளத்தையும், பிள்ளைச் செல்வங்களையும் வேண்டினாரோ அதையும் வழங்கினான்.பின் நாளில் நுஃமான் இப்னு பஷீர் (ரலி) அவர்கள் மாபெரும் மார்க்கப் போராளியாக, மனித நேய மாண்பாளராக, வாரி வழங்கும் வள்ளலாக முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கூஃபா மற்றும் ஹிம்ஸ் பகுதிகளின் மாட்சிமை மிக்க கவர்னராக விளங்கினார்கள்.  ( நூல்: அல் இஸ்தீஆப், உஸ்துல் ஃகாபா )

, விருப்பத்திற்கும் இசைவு தரவேண்டும்...
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபை நபித்தோழர்களால் நிரம்பி இருந்தது.எப்போதும் அண்ணலாரின் அருகே, வலப்பக்கத்தில் இருக்க வேண்டிய அபூபக்ர் (ரலி) அவர்கள் இப்போது இடப்பக்கத்தில் அமர்ந்திருக்கின்றார்கள்.ஒரு கோப்பையில் பால் கொண்டு வரப்படுகின்றது. அண்ணலார் அதைப் பருகி விட்டு வலது பக்கத்தைப் பார்க்கின்றார்கள் அங்கே ஃபள்ல் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களின் மகன் அமர்ந்திருக்கின்றார்கள்.வயதில் மிகவும் சிறியவரான ஃபள்ல் (ரலி) அவர்களிடம் இப்போது அண்ணல் நபி {ஸல்} அவர்கள் “ஃபள்லே! எப்போதும் என் அருகே என் தோழர் அபூபக்ர் (ரலி) தான் அமர்ந்திருப்பார், அவருக்கு தான் நான் கொடுப்பேன். இப்போது நீ அமர்ந்திருக்கின்றாய்? நான் அபூபக்ர் அவர்களுக்கு கொடுக்கட்டுமா?” என்று கேட்டார்கள்.இல்லை! அல்லாஹ்வின் தூதரே! நான் எனக்கான வாய்ப்பை விட்டுத் தர முடியாது! என்று சொல்லி விட்டார் ஃபள்ல் (ரலி) அவர்கள்.பின்னர் அந்தக் கோப்பை அனைவரிடமும் சுற்றி வந்து இறுதியாக அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து சேர்ந்தது. கடைசியாக அபூபக்ர் (ரலி) அவர்கள் பாலைப் பருகினார்கள்.

இங்கே, சிறுவன் என்பதற்காக நபி {ஸல்} அவர்கள் தாங்கள் விரும்பியவாறு நடக்க வில்லை. ஃபள்ல் இடம் கேட்கிறார்கள். அவருக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு என்பதை நபி {ஸல்} அவர்கள் உணர்த்துகின்றார்கள்.

ஆனால், இன்றைய பெற்றோர்கள் தங்களின் மகனிடமோ, மகளிடமோ நீ என்னவாக ஆக விரும்புகின்றாய் என்று கேட்பதும் இல்லை. அவர்களின் விருப்பத்திற்கு இசைவு தருவதும் இல்லை.

ஆசிரியர்களின் நோக்கம் சீராக வேண்டும்….

ஆசிரியர்கள் அதிக மதிப்பெண்கள்  எடுக்கிற மாணவர்களை மட்டுமேஊக்கப்படுத்தி அவர்களிடம் மட்டுமே அதிக அக்கறையை காட்டுகின்றார்கள். கல்வி நிறுவனங்களும் அவர்களை மட்டுமே முன்னிறுத்தி,முக்கியத்துவம் அளிக்கிறது.கல்வித்தரம் குறைந்த மாணவர்களை மேம்படுத்தும் முயற்சிகளில் ஆசிரியர்களும்,நிறுவனங்களும் ஈடுபாடு காட்டுவதில்லை.இதுவும் மாணவச் சமூகம் மனச் சுமைகளோடும்,அச்சத்தோடும் இருப்பதற்கு ஓர் காரணமாகும்.

عن بن عباس قال: إن عمارة بنت حمزة بن عبد المطلب وأمها سلمى بنت عميس كانت بمكة، فلما قدم رسول الله كلم علي النبي، فقال: علام  تترك ابنة عمنا يتيمة بين ظهري المشركين ، فلم ينهه النبي عن إخراجها فخرج بها ، فتكلم زيد بن حارثة وكان وصي حمزة وكان النبي آخى بينهما حين آخى بين المهاجرين، فقال: أنا أحق بها، ابنة أخي. فلما سمع بذلك جعفر بن أبي طالب قال: الخالة والدة، وأنا أحق بها لمكان خالتها عندي أسماء بنت عميس. فقال علي: ألا أراكم تختصمون في ابنة عمي وأنا أخرجتها من بين أظهر المشركين وليس لكم إليها نسب دوني وأنا أحق بها منكم. فقال رسول الله: " أنا أحكم بينكم، أما أنت يا زيد فمولى الله ورسوله، وأما أنت يا علي فأخي وصاحبي، وأما أنت يا جعفر فشبيه خلقي وخلقي، وأنت يا جعفر أولى بها تحتك خالتها ولا تنكح المرأة على خالتها ولا على

عمتها"، فقضى بها لجعفر.

ஹம்ஜா (ரலி) அவர்கள் உஹதில் ஷஹீதாக்கப்பட்டு விட்டார்கள். அவர்களின் மனைவி ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி)அவர்களும், ஹம்ஜா (ரலி) அவர்களின் ஒரே மகளான அமாரா (ரலி) அவர்களும் மக்காவில் வாழ்ந்து வந்தார்கள்.அலீ (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களிடம் “ஹம்ஜா(ரலி) அவர்களின் ஒரேயொரு மகள் இப்போது அநாதையாகி மக்கத்து இணைவைப்பாளர்கள் மண்ணில் நிற்கிறாள். நான் சென்று அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அனுமதி தரவே அலீ (ரலி) அவர்கள் மக்கா சென்று அமாராவை மதீனாவிற்கு அழைத்து வந்தார்கள்.அமாராவை யார் பொறுப்பேற்பது? என்று மூன்று நபித்தோழர்கள் ஒவ்வொருவரும் தாம் தான் எடுப்பேன் என சண்டையிட்டுக் கொண்டார்கள்.இறுதியாக, நபி {ஸல்} அவர்களிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு வந்தனர் அந்த மூவரும்.அலீ (ரலி) அவர்கள், ஜைத் இப்னு ஹாரிஸா (ரலி) அவர்கள், ஜஅஃபர் இப்னு அபூதாலிப் அவர்கள் இம்மூவரும் தான் சண்டையிட்டுக்கொண்டவர்கள்.நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! அமாரா என் தந்தையின் சகோதரரின் மகள் ஆகவே அதிகத் தகுதியுடையவன் நான்” என்று அலீ (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜைத் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.”அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா அவர்களும் நானும் ஒரே தாயிடத்தில் பால் குடித்திருக்கின்றோம். மேலும், எனக்கும் அவருக்கும் இடையே நீங்கள் தான் சகோதரத்துவ உறவை ஏற்படுத்தி இருக்கின்றீர்கள். ஆகவே, இரு தகுதிகள் இருப்பதால் நானே அதிகத்தகுதியுடையவன்” என்று ஜைத் (ரலி) பதில் கூறினார்கள்.நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் எந்த முறையில் நீர் அமாராவை வளர்ப்பதற்கு அனுமதி கோருகின்றீர்? என்று கேட்டார்கள்.“அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் ஆவார், மேலும், ஹம்ஜா (ரலி) மணம் முடித்திருக்கின்ற ஸல்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களின் சகோதரி அஸ்மா பிந்த் உமைஸ் (ரலி) அவர்களை நான் மணம் முடித்திருக்கின்றேன். அமாராவுக்கு என் மனைவி சின்னம்மா ஆவாள். ஆகவே நானே அதிகத் தகுதியுடையவன்” என்று ஜஅஃபர் (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.

மூவரின் உரிமை கோரலையும் செவிமடுத்து விட்டு பெருமானர் {ஸல்} அவர்கள் அலீ (ரலி) அவர்களை அழைத்து ”அலீயே! நீர் என் சகோதரரும், என் சுவனத்து தோழரும் ஆவீர்! ஜைத் (ரலி) அவர்களை அழைத்து “ஜைதே! நீர் அல்லாஹ், ரசூலின் அடிமையாவீர்!, ஜஅஃபர் (ரலி) அவர்களை அழைத்து “ஜஅஃபரே! நீர் என்னைப் போன்றே குணத்திலும், தோற்றத்திலும் ஒத்து இருக்கின்றீர்!” என்று கூறி விட்டு, அமாராவின் சின்னம்மாவை நீர் மணம் முடித்திருப்பதால் நீரே அமாராவை வளர்ப்பதற்கு தகுதியாவீர்! நீர் அமாராவை உம் பொறுப்பில் எடுத்து வளர்த்துக் கொள்வீராக!” என்று தீர்ப்பளித்தார்கள். ( நூல்: தபகாத் இப்னு ஸஅத் )

இந்த சம்பவத்தில் பல உண்மைகளும் படிப்பினைகளும் பொதிந்திருக்கின்றன. அமாரா (ரலி) அவர்கள் நபி {ஸல்} அவர்களுக்கும் பெரிய தந்தையின் மகள் தான். நபி {ஸல்} அவர்கள் நினைத்திருந்தால் மூவரையும் திருப்பி அனுப்பி விட்டு தாங்களே வளர்க்கும் உரிமையை எடுத்திருக்கலாம். ஏனென்றால் குடும்ப உறவு நபிகளாருக்கு இருக்கின்றது.அல்லது ஜஅஃபர் (ரலி), அலீ (ரலி) அவர்களில் இருவரில் ஒருவருக்கு அந்த உரிமையை வழங்கியிருக்கலாம். குடும்ப உறுப்பினர் என்கிற முறையில்.அல்லது மூவரில் எவரிடமாவது வளர்க்கும் உரிமையை கொடுத்திருக்கலாம் அல்லாஹ்வின் தூதர் என்கிற அடிப்படையில்.இந்த மூன்றில் நபி {ஸல்} அவர்கள் எதைத் தேர்ந்தெடுத்தாலும் யாரும் மறுப்பேதும் சொல்லப்போவதில்லை.மாறாக, மூவரையும் அழைத்து நேர்காணல் நடத்தி ஒவ்வொருவருக்கும் இடையே இருக்கும் உறவு முறைகளை அறிந்து வைத்துக் கொண்டே அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பின்னர் தீர்ப்பளிக்கின்றார்கள்.அதுவும் உரிமை கோரி நின்ற மற்ற இருவருக்கும் தகுந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் வழங்குகின்றார்கள்.இங்கே, நபி {ஸல்} ஒரு நபியாக, ஒரு குடும்ப உறவாக செயல்படாமல் தங்கள் பாசறையிலே பயின்று வரும் மூன்று மாணாக்கர்களின் மிக உயர்ந்த பண்பாட்டை அங்கீகரித்து, ஒரு ஆசிரியராக தட்டிக் கொடுத்து, உற்சாகமூட்டி மனம் உடைந்து விடாதபடி நடக்கின்றார்கள்.ஒரு வகுப்பறையிலே பல தரப்பட்ட தரம் கொண்ட மாணவர்கள் இருப்பார்கள், அவரவர்களின் தரத்திற்கேற்ப அவர்களை உற்சாகமூட்டி, தட்டிக் கொடுத்து வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் வழங்கி முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையை இந்த சம்பவம் உணர்த்துவதாகஅமைந்துள்ளது

மாணவர்கள் பொறுப்புணர்ந்து நடக்க வேண்டும்….
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் நான்கு காரியங்களுக்காகவே செலவு செய்யப் படுகின்றது.1. நோய்களுக்கான சிகிச்சைக்காக, 2.திருமண விருந்துக்காக,3. இயக்கங்களின் மாநாடுகளுக்காக4, கல்விக்காக.பெரும்பாலான பெற்றோர்கள் வீடு, வாசல், தோட்டம் துறவுகளை, நகைகளை விற்று, கடன் வாங்கி, லோன் வாங்கி, வட்டிக்கு பணம் வாங்கி படிக்க வைக்கின்றனர்.ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் பள்ளிக் கூடத்திற்கு சரியாக செல்லாமல் வீண் விளையாட்டுக்களிலும், சினிமா கேளிக்கைகளிலும், ஊர் சுற்றுவதிலும் கழித்து விட்டு பரீட்சை நேரத்தில் சரியாக தேர்வெழுதாமல் தோற்றுப் போய் விடுகின்றார்கள்.இதுபற்றி அல்லாஹ்விடம் மாணவச் சமூகம் தங்களின் பள்ளிக் காலம் குறித்து கேள்வி கேட்கப் படுவார்கள்.

விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும், மனவலிமையோடும் படிக்க வேண்டும்.

عَنْأَبِيهُرَيْرَةَقَالَقَالَرَسُولُاللَّهِصَلَّىاللَّهُعَلَيْهِوَسَلَّمَالْمُؤْمِنُالْقَوِيُّخَيْرٌوَأَحَبُّإِلَىاللَّهِمِنْالْمُؤْمِنِالضَّعِيفِوَفِيكُلٍّخَيْرٌ  رواهمسلم“பலவீனமான இறைநம்பிக்கையாளனை விட, மனவலிமை உள்ள முஃமின் சிறந்தவனும், அல்லாஹ்விடம் உவப்பைப் பெற்றவனும் ஆவான்”  ( நூல்: முஸ்லிம்)

இயன்ற அளவு முயற்சி செய்து ஆர்வத்தோடும், ஆசையோடும் படிக்க வேண்டும்.

احْرِصْعَلَىمَايَنْفَعُكَوَاسْتَعِنْبِاللَّهِوَلَاتَعْجَزْوَإِنْأَصَابَكَشَيْءٌفَلَاتَقُلْلَوْأَنِّيفَعَلْتُكَانَكَذَاوَكَذَاوَلَكِنْقُلْقَدَرُاللَّهِوَمَاشَاءَفَعَلَفَإِنَّلَوْتَفْتَحُعَمَلَالشَّيْطَانِ  رواهمسلم

“உனக்கு பயன் தருகிற அனைத்தின் மீதும் நீ ஆசைப்படு! பின்னர் அதற்காக கஷ்டப்படு! அல்லாஹ்விடம் உதவி கேள்! சோர்ந்து போய்விடாதே! நீ ஆசைப்பட்டது உனக்கு கிடைக்காமல் போய் விட்டால் நான் இப்படி, இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாமல் அல்லாஹ் நாடியது தான் நடந்தது என்று சொல்!” என்று நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.    ( நூல்: முஸ்லிம் )

என்னால் முடியும், என்னிடம் நல்ல மதிப்பெண் எடுக்கும் திறமை இருக்கிறது, நான் சாதிப்பேன், என பாஸிட்டிவ் ஆகபேசுவதை, நினைப்பதைத் தான் அல்லாஹ்வும், அவனது ரஸூலும் விரும்புகின்றனர்யூஸுஃப் {அலை} அவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசரோடு உரையாடும் வாய்ப்பை பெற்ற போது…“நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் நன்கு பாதுகாப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்றார்.மேலும், இதன் பின்னர் நாம் யூஸுஃபுக்கு அந்த பூமியில் அதிகாரத்தை வழங்கினோம். அங்கே, தாம் விரும்பும் எந்த இடத்திலும் அவர் தங்கி வாழும் உரிமை பெற்றிருந்தார்”. ( அல்குர்ஆன்: 12: 55, 56 )

ஸுலைமான் {அலை} அவர்கள் ஸபா நாட்டு அரசியின் சிம்மாசனத்தை உடனடியாக யாரால் கொண்டு வர முடியும் என்று கேட்ட போது….“அவர்களுள் கல்வியறிவைப் பெற்றிருந்த ஒருவர் “நீங்கள் கண் மூடித் திறப்பதற்குள் அதை உங்களிடம் நான் கொண்டு வந்து விடுகின்றேன்” என்றார் (அல்குர்ஆன்: 27: 40

ويوم جاء وفد نجران من اليمن مسلمين، وسألوه أن يبعث معهم من يعلمهم القرآن والسنة والاسلام، قال لهم رسول الله:" لأبعثن معكم رجلا أمينا، حق أمين، حق أمين.. حق أمين"..!!وسمع الصحابة هذا الثناء من رسول الله صلى الله عليه وسلم،  فتمنى كل منهم لو يكون هو الذي يقع اختيار الرسول عليه، فتصير هذه الشهادة الصادقة من حظه ونصيبه..يقول عمر بن الخطاب رضي الله عنه:" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها، فرحت الى الظهر مهجّرا، فلما صلى بنا رسول الله صلى الله عليه وسلم الظهر، سلم، ثم نظر عن يمينه، وعن يساره، فجعلت أتطاول له ليراني..فلم يزل يلتمس ببصره حتى رأى أبا عبيدة بن الجرّاح، فدعاه، فقال: أخرج معهم، فاقض بينهم بالحق فيما اختلفوا فيه.. فذهب بها أبا عبيدة؟..!!ان هذه الواقعة لا تعني طبعا أن أبا عبيدة كان وحده دون بقية الأصحاب موضع ثقة الرسول وتقديره..

ஒரு முறை யமனின் நஜ்ரான் பகுதியைச் சார்ந்த சிலமுஸ்லிம்கள் தங்களுக்கு மார்க்கவிஷயங்களை கற்றுத்தரவும்,தங்கள் பகுதியில் அழைப்புப்பணி செய்யவும்,தங்களுக்குஇமாமத் செய்யவும் ஒரு நபரை தங்களோடு அனுப்பி வைக்குமாறுமாநபி {ஸல்} அவர்களிடம் வேண்டி நின்றனர்.அப்போது நபி {ஸல்} அவர்கள் ”உங்களோடு நம்பிக்கையானஒருவரை அனுப்பி வைக்கிறேன்” என்றார்கள். இந்நேரத்தில்லுஹர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. நபிகளார் கூறிய நம்பிக்கையாளர் நாமாக இருக்க மாட்டோமா? என்றுஒவ்வொரு ஸஹாபியும் ஆசைப்பட்டனர்.இகாமத் சொல்லப்பட்டது, நபி {ஸல்} அவர்கள் தொழவைத்தார்கள்,உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்.தொழுதுமுடித்ததும் நபி {ஸல்} அவர்கள் வலது புறம் பார்த்தார்கள்,பின்புஇடது புறம் பார்த்தார்கள்.என் மீது நபியவர்களின் பார்வை பட வேண்டும், என்னை அழைக்க வேண்டும் என்று குதிங்காலால் ஊனி எட்டி எட்டிப்பார்த்தேன்.இறுதியாக நபி {ஸல்} அவர்களின் பார்வை அபூ உபைதா அல்ஜர்ராஹ் {ரலி} அவர்களைச் சென்றடைந்தது. பின்னர் நபி {ஸல்}அவர்கள் அபூ உபைதாவை அழைத்தார்கள்.பின்னர் நஜ்ரான் முஸ்லிம்களை அழைத்து இதோ இவரைஅழைத்துச் செல்லுங்கள்.“ஒவ்வோர் உம்மத்திற்கும் ஓர்நம்பிக்கையாளர் உண்டு.எனது உம்மத்தின் நம்பிக்கையாளர்அபூ உபைதா அல் ஜர்ராஹ் {ரலி}” என்றார்கள்

உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்:”ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும் அந்த நேரம்வரை நான் எந்த புகழுக்கும்,பதவிக்கும் ஆசைபட்டது கிடையாது. ”நபிகளாரின் புனித வாயால் அந்த புகழாரத்தைஅடையவேண்டுமென்று அன்று நான் ஆசைப்பட்டேன்” ஆனால், அபூ உபைதா அவர்கள் அதை தட்டிச் சென்று விட்டார்கள்.  ( நூல்:ரிஜாலுன் ஹவ்லர்ரஸூல் {ஸல்}, பக்கம்:241)

فقال رسول الله صلى الله عليه وسلم لأعطين الراية غدا رجلا يحبه الله ورسوله يفتح الله على يديه ليس بفرار قال يقول سلمة فدعا رسول الله صلى الله عليه وسلم عليا رضوان الله عليه وهو أرمد فتفل في عينه ثم قال خذ هذه الراية فامض بها حتى يفتح الله عليكيقول عمر بن الخطاب رضي الله عنه:


 ஃகைபர் கோட்டையை நபி{ஸல்} அவர்களின் தலைமையில் முஸ்லிம்கள்  முற்றுகையிட்டிருந்தபோதுகோட்டைக்கு உள்ளிருந்து குடைச்சல் கொடுத்தனர் அப்போது நபி {ஸல்}அவர்கள் “ நாளை நான் அல்லாஹ்வும்,அவன் தூதரும் நேசிக்கின்ற,அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நேசிக்கின்ற ஒருவரிடம்கொடியை கொடுப்பேன். அல்லாஹ் அவர் கரங்களின் மூலம்வெற்றியை வழங்குவான்”  என்று கூறினார்கள்.உமர் {ரலி} அவர்கள் கூறுகின்றார்கள்: 

" ما أحببت الامارة قط، حبّي اياها يومئذ، رجاء أن أكون صاحبها،

” ஓர் உண்மையை நான் சொல்லியே ஆக வேண்டும்அதுவரை நான் எந்த புகழுரைக்கும்,அந்தஸ்துக்கும் ஆசைப் பட்டதில்லை. அன்று நான் அல்லாஹ்வும்,தூதரும் நேசிக்கின்றஒருவனாக ஆக வேண்டும், நபிகளாரின் அமுத வாயால்சொல்லப்பட்ட சோபனத்திற்கு சொந்தக்காரனாக வேண்டும் என விரும்பினேன் ட்டேன்”.அதை அலீ {ரலி} அவர்கள் தட்டிச் சென்றுவிட்டார்கள்நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல்{ஸல் பக:294 முடிவுரை - மாணவர்களின் மனதில் தன்னமிபிக்கை வேண்டும இவற்றோடு அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத தவக்குல் வைக்க வேண்டும்.”நீர் ஒரு காரியத்தில் திடமான முடிவை எடுத்து விட்டால் அல்லாஹ்வையே முழுமையாக சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாக சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்”.           
( அல்குர்ஆன்: 3: 159 )வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கையல்ல, சுகமும் சோகமும், வெற்றியும் தோல்வியும், ஏற்றமும் இறக்கமும் நிறைந்தது தான் வாழ்க்கை.அந்த வாழ்க்கையை ரசிக்கவும், படிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய உள்ளத்தை அல்லாஹ் நம்முடைய மாணவ சமுதாயத்திற்கு தந்து அருள்வானாக!

நன்றி: مصابيح المحراب
http://ulama.in/JummaUrai/441

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails