Friday, January 15, 2016

நெஞ்சுக்கு நிம்மதி

சில - பல வருடங்களுக்கு முன்னால்
சென்னையில் நான் வாழ்ந்த காலம்.
அசோக் நகரில், ஹபீப் குழந்தைகள் மருத்துவமனை நடத்தி வந்த நேரம்.
வளர்ந்த, இளம்பருவ குழந்தைகள் பலர் மனநல (EMOTIONAL) பாதிப்புக்களில் சிக்கி, உடல் நலம் பாதிப்புக்குள்ளாகி, அதை சரியாக வெளியில் சொல்ல இயலாமல், அவதிபடும் அவஸ்தையை as a paediatrician...... என்னால் எளிதில் உணர முடிந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் சூழல், மற்றும் பெற்றோர்கள் உறவில் ஏற்படும் பல பிரச்சினைகள் - இந்த குழந்தைகளை, மனரீதியாக பாதிப்புக்கு உட்படுத்தி இருப்பதை, குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில் என்னால் கண்டறிய முடிந்தது. இதனாலேயே, கிளினிக்கல் சைக்காலஜியில் முதுநிலை பட்டம் பெற நான் விரும்பினேன். இது குழந்தைகளின் எமோசனல் பிரச்சினைகளை எளிதில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, எனக்கு மிகவும் எளி தாக இருந்தது. நாள்பட... குழந்தைகளின் பெற்றோர்களும், எமோஷனல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்னை அணுக ஆரம்பித்தனர். அரசு உயர் அதிகாரிகளும், பல கார்பரேட் நிறு வனங்களின் தலைவர்களும், செயல் அதிகாரிகளும் - என்னை தேடி வர ஆரம்பித்தனர். எனது குழந்தைகள் மருத்துவமனை, ஒரு ஆஸ்ரமம் போன்று மாறி விடுமோ என்று, என் வீட்டில் உள்ளவர்கள் அச்சப்பட துவங் கினர்.
இந்த துறையில், அதிகம் ஈர்க்கப்பட்ட நான் மைன்ட் ஹீலிங் (MIND HEALING) என்ற பெயரில், ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில்.....
பெரிய அளவில் பயிலரங்கங்கள் நடத்தி வந்தேன். பிரபல தொழிலதிபர்கள், அதிகாரிகள், மருத்துவர்கள், கல்லூரி முதல்வர்கள், நடிகர்கள் என்று பல புகழ் பெற்றவர்கள் நான் நடத்திய WORK SHOP - ல், கலந்து பயன் பெற்றனர்.

இந்த பயிலரங்கம் நடத்த, வெளி நாடுகளில் இருந்தும் அழைப்பு வர, நான் வெளிநாடு பயணங்கள் மேற் கொள்ள வேண்டியதாயிற்று. அங்கெல்லாம் அதிக அளவில் பெண்களும், எமோசனல் பிரச்சினைகளுக்காக என்னை அணுக ஆரம்பித்தனர்.

குழந்தைகள் மருத்துவ நிபுணர் என்ற பாதையை விட்டு விலகி, புதிய துறையில் கால் பதித்து, ஊர் - ஊராக நாடு - நாடாக சுற்றி அலைவது என் வீட்டாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எங்கே நானும் ஒரு 'ஓசோ' போன்று ஆகி விடுவேனோ .... (just thinking) இவர்கள் பயந்தார்கள். என் நண்பர், மதுரை மருத்துவ கல்லூரி மனநல மருத்துவத்துறை இயக்குனர், பேராசிரியர் DR.ராமசுப்பிரமணியம் எனது பயிலரங்க நிகழ்ச்சிகளை கேள்விப்பட்டு அதற்கு மிகுந் த ஊக்கமும், ஆக்கமும் தந்து பாராட்டினார்.

என்றாலும், என் குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லை. இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கவே, அவர்கள் விரும்பினர். ஆண்டவனை வேண்டினர்.

பிரபலமான சாமியார்கள்... ஏன் திருமணமாகாமல் வாழ்கிறார்கள், என்பதற்கான காரணம் இப்போது தான் புரிகிறது.

நான் விரும்பிய இந்த துறையில், நீடிக்க என் வீட்டனர் ( my family) அநுமதி வழங்கியிருந்தால், நான் கூட ஓசோவைப் போல், ஒரு நுறு ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி குவித்திருக்க முடியும்.

30 வருடங்களுக்கு முன்னால் சென்னையின் - பிரபல ஹாேட்டல் அரங்கங்களில் நிகழும், எனது சிற்றுரையை கேட்பதற்கு, சினிமா தியேட்டர்கள் போல் - ஐம்பது ரூபாய் பணம் செலுத்தி, டிக்கட் எடுத்து உள்ளே செல்ல வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன நம்பவா போகிறீர்கள்.

துபையில், பிரபல தொழில் முனைவர்கள் மத்தியில், நான் நிகழ்த்திய பயிலரங்க நிகழ்ச்சியில் இருந்து ஒரு காட்சி.

Source:
The life of a pediatrician by dr.habibullah
 Vavar F Habibullah

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

வியப்பாகத்தான் உள்ளது! பகிர்வுக்கு நன்றி!