Saturday, January 2, 2016

எகிப்து நாட்டிற்கு சென்று அடைந்ததும்..

Mohamed Salahudeen

எகிப்து நாட்டிற்கு சென்று அடைந்ததும் முதலில் காண எண்ணியது கிசா பிரமிடுகள் தான்.
அதற்கேற்ப வாகனமும் வழிகாட்டியும் தங்கியிருந்த விடுதியிலேயே ஏற்பாடு செய்துக்கொண்டேன்.
பொழுது புலர்ந்ததும் கிசா நோக்கி பயணப்பட்டோம்.
கிசா பகுதிக்கு செல்லும் சாலைகள் சொல்லும் தரத்தில் இல்லை.
கிசா பகுதி நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
பிரமிடுகள் அமைந்திருக்கும் பகுதி பாலைவனம். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு மலைப் போல் காட்சியளிக்கிறது.
இன்றைய நவீன காலக் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் இது வெறும் கற்குவியலாகத்தான் தோன்றும்.
பிரமிடுகளைக் கண்டு பிரமிக்கவேண்டுமெனில் மனதளவில் காலச்சக்கரத்தை சுமார் 4500 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்.
பிரமிடுகள் அன்றைய செல்வ வளம் கொழித்த மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் புதைக்கப்பட்ட கல்லறைகள். கல்லறைகளே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்போது அவர்களின் மாளிகை எப்படி இருந்திருக்கும் எனவும் மனம் யோசிக்கிறது.

அன்றையக் காலக்கட்டத்தின் போக்குவரத்து வாகனங்கள் ஒட்டகங்கள்,குதிரைகள்,கோவேறு கழுதைகள் மட்டுந்தான்.
எளிமையான கட்டுமானத் தொழில்நுட்ப கருவிகளேப் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.
பிரமிடுகளை உருவாக்கப் பயன்படுத்தப்பட்ட கற்களின் ஆகக்குறைந்த எடை 1.5 டன். அதிகப்பட்ச எடை 16 டன். பயன்படுத்தக் கற்கள் சுண்ணாம்பு பாறைகள் மற்றும் கிரானைட் கற்கள்.(Limestone, Granite).
பிரமிடுகளை உருவாக்க கிட்டத்தட்ட 1,00,000 பல்வேறு தொழில் திறமைக் கொண்டத் தொழிலாளர்களால் 20 வருட உழைப்பில் உருவாகியிருக்கிறது.
பிரமிட்டின் அதிகப்பட்ச உயரம் 481 அடிகள். கி.மு 2500 லிருந்து கி.பி 1300 வரை பிரமிடுகளே உலகில் மனிதர்களால் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எனும் சிறப்பைப் பெற்றிருந்தது. ஒருமுறை இந்தப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதன் மேற்பூச்சு சரிந்து இதன் உயரம் கிட்டத்தட்ட 30 அடிகள் குறைந்துவிட்டதாம். பிரமிடுகளிலிருந்து சிதைந்து விழுந்தக் கற்களை வேறு சில கட்டிடம் கட்டவும் பயன்படுத்தி இருக்கின்றனராம்.
இவைகளையெல்லாம் மனதில் கொண்டு நோக்கும்போது பிரமிடுகள் உலக அதிசயம் என்பதை எண்ணி மனம் பிரமிக்கவே செய்கிறது.
இன்றைக்கு இதன் அருகில் இருக்கும் ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமான கெய்ரோ அன்றைக்கு இல்லை.
பிரமிடுகளைக் காண நுழைவுக் கட்டணம் பெற்றே செல்லவேண்டும்.
நுழைவு வாயிலில் இருந்து பிரமிடுகள் அமைந்திருக்கும் பகுதிக்கு செல்ல நல்ல சாலைகள் இருக்கின்றன. நுழைவு வாயிலில் ஒட்டகங்களும் குதிரைகளும் அதிகமான எண்ணிக்கையில் பயணிகளைச் சுமந்து செல்ல காத்து நிற்கின்றன. ஒட்டகத்திலோ அல்லது குதிரையிலோ பயணிக்க எண்ணுபவர்கள் பேரம்பேசி பயணிப்பது நல்லது இல்லையேல் ஏமாற்றப் படுவோம். ஒட்டகத்தில் பயணித்தது சுகமான அனுபவம்.
பிரமிடுகளின் அருகில் நிறைய உள்ளூர்க்காரர்கள் பயணிகளுக்கு புகைப்படம் எடுக்கிறேன், பிரமிடுகளைப் பற்றி உங்களுக்கு விளக்குகிறேன் என உதவுவதுபோல் பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.
பிரமிடுகளின் உட்புறத்தைக் காண தனிக்கட்டணம்.
சுற்றுலாப் பயணிகளுக்காக மாலை நேரத்தில் ஒளிக்காட்சி (Light show) நடைப்பெறுகிறது.
உலகின் பல நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பிரமிடுகளைக் காண வந்துக்கொண்டே இருக்கின்றனர். எகிப்து நாட்டின் சுற்றுலாத் துறைக்கு இந்த பிரமிடுகள் பெரும் வருமானத்தைக் கொடுத்து வருகின்றன. பல்லாயிரக் கணக்கான மக்கள் இதன் மூலம் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வருமானம் ஈட்டுகின்றனர்.
இவற்றையெல்லாம் கண்டு திரும்பி வரும்போது செல்வ செழிப்பில் வாழ்ந்த மன்னர்கள் இன்று இல்லை அவர்களின் கல்லறைகளே காலத்தின் சாட்சியாக நிற்கிறது. என் மனதில் மரணமும் மறுமையும் நினைவில் வந்து நிற்கிறது.

-----------------------------------------------------------------------------

No comments: