Sunday, January 3, 2016

விருப்பமில்லாதவர்களை விட்டுவிடுங்கள் ...



Yasar Arafat
விருப்பமில்லாதவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் நகர்ந்துக் கொள்ளட்டும்; பிடித்து இழுத்து வைப்பதினால்தான் கைகளெல்லாம் காயங்கள் உண்டாகின்றன; இன்னும் விசுவாசங்களுக்கும் பாசத்திற்கும் விளக்கம் அறியாதவரின் மூளைகளில் உங்களால் எதையும் உட்புகுத்த முடியாது; அவர்களுடைய பாதங்கள் பின்னிக்கொண்டிருப்பதெல்லாம் தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ எனும் உள் அச்சமே அன்றி வேறில்லை; விளக்கம் கொடுத்து அவர்களை வழி அனுப்பிவையுங்கள்;

பிள்ளைகளின் பிடிவாதங்கள் உங்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; வயது ஏறியப்பின்னும் அவர்களுடைய அதே பிடிவாதங்கள் உங்களுக்கு சந்தேகமாகவும் எரிச்சலையும் தருகிறது; அவர்கள் வளர்ந்தப்பின்னே பக்குவம் வரவேண்டுமென்று விருப்பம்கொள்ளுங்கள் நீங்கள் அவர்களின் அந்த பிடிவாதங்களை சகித்துக்கொள்ளமுடியாமல் நீங்கள் குழந்தையாக மாறிவிடுகிறீர்கள்; அவர்களை வளர அறிவுறுத்திவிட்டு நீங்கள் குழந்தையாகவே மாறிவிடுகிறீர்கள்;


கணவன் மனைவியின் உறவுகளில் உங்களுக்கு ஏற்றம் இறக்கம் இருக்கலாம்; ஆனாலும் ஒருவரை ஒருவர் சகித்து மகிழ்ச்சியாக தன் வாழ்க்கையை தன் வசப்படுத்திக்கொள்வதெல்லாம் கட்டாயம் என்ற ஒற்றை வரியில் கட்டம் கட்டிவிட இயலாது; அது ஒர் அற்புதம்; அது ஒரு வரம்; உங்களுக்காக அவர்களும் அவர்களுக்காக நீங்களும் மாறி மாறி வாழ்வது ஒர் தவம்;

மரங்களின் இலைகள் அசைக்கும் காற்றுகளின் உள்ளம் இலயித்து அலைபவர்களெல்லாம் மரங்களை அசைத்துப் பார்க்கும் புயல் காற்றையும் சூறாவளியையும் கண்டு அச்சப்படுகிறார்கள்; காற்றினை விருப்பம் கொள்வரெல்லாம் தனக்கான பாதிப்புகளை நிர்ணயம் செய்தே ரசிக்கின்றனர்; முடிகளை களைப்பதால் சிலருக்கு மென்காற்றையும் பிடிப்பதில்லை;
எதையும் அளவிட முடியாத உங்கள் எதார்த்தமான சுபாவங்களை ரசிக்கும் அன்பர்களையே அருகில் வைத்துக்கொள்ளுங்கள்; மாற்றிக்கொள்ளதான் வேண்டும் அடம்பிடிப்பவர்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள்தான்; பிரச்சனைகளின் துளிர் இருவருமே அப்படி மாற்றிக்கொள்ள விருப்பப்படாதவர்களும் இன்னும் ஆபத்தானவர்கள்; அறிந்துக்கொள்ளுங்கள் உங்களுக்கான ஜோடி அவர்களில்லை; சிரமங்களை தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள்; தொப்பிகளை கழட்டி ஓரமாய் வைத்துவிடுங்கள்!
-Tafara Rasay



Yasar Arafat

No comments: