Sunday, January 17, 2016

எனது எழுத்துக்கு கிடைத்தஅங்கீகாரத்தின் சிலதை தருகின்றேன்/ Kalaimahel Hidaya Risvi

Kalaimahel Hidaya Risvi
என் கவிதைக்கு பகிரங்கமாக முக நூலில் அத்தாட்சி கேட்ட ஏறாவூர் சகோதரனுக்கு எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தின் சிலதை தருகின்றேன்
.......................................................................................................
நான் இதற்காக ஒவ்வொரு இடமாக சென்று புகழ் தேடிஅழையவில்லை என் உள்ளத்து உணர்வுகளை ஒன்று திரட்டி பெண்ணாக இருந்து பொறுமையுடன் நான் சாதித்த சாதனைகள் பல
பணத்தை ,புகழை எல்லோரும் மண்ணில் இருந்து தேடலாம்.
ஆனால் கற்பனையில் உருவாகும் யதார்த்தங்களை எல்லோராலும் தேட முடியாதே...!
மகத்தான மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவளே இந்த இரத்த புஷ்டியுள்ள ஆக்கங்களாகும்.
வானைப் பார்த்து “உருவாகும்” கற்பனைகளை விடமண்ணில் இருந்து“உருவாகும்”யதார்த்தங்களும் சிறப்பானவையாகும்
“கவிஞன் பிறக்கின்றான்! அவன் செய்யப்படுபவன் அல்ல! என்பது போல!
கவிதைகளும் “செய்யப்படுபவை”அல்ல! ஆனால் கவிஞன் பிறந்து வளர்கின்றான்!
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன.எனவே
நதிகளுக்கு யாரும் கடலின் விலாசத்தை சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை

என் பெயரில் அலையாய் தொட்டுச் சென்ற சிந்தனைக் கரையின் தடங்களை தடவிப் பார்க்கின்றேன்பதில் சொல்வதற்காய்
இலங்கை அரசியின் பாடப் புத்தகத்தில் அண்டு ஒன்பது தமிழ் மொழியும் இலக்கியமும் எனும் நூல் மூலம் நான் அங்கீகாரம் பெற்றஒரு கவிஞர்
ஆனாலும் நான் இது வரை என்னை கவிஞர் என்றோ கவிதாயினி என்றோ சொல்லிக் கொண்டதே இல்லை புகழுக்கு எல்லாம் பெரியவன் என்னை படைத்த அல்லாஹ் ஒருவனே
1984ல்சாய்ந்தமருது அல் ஹிதாயத் இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடத்தப்பட்ட அம்பாறைமாவட்டம் ,கிழக்கு மாகாணம் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்று மஹரமக இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு சென்றபோது
அங்கு செல்லையூர் செல்வராஜன் அவர்களால் கலைமகள் எனும் புனைப் பெயரை பெற்றுக் கொண்டேன்
1988 ல் இளைஞர் சேவைகள் மன்றமும்,இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சும் இணைந்து நடாத்திய
கவிதைப்போட்டியில்அகில இலங்கை ,ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக ஜனாதிபதி விருது.பெற்று கௌரவிக்கப்பட்டேன்.
1992ஆம் ஆண்டு பல கவிதைகள் குவைத்கத்தா -06 ரிக்காவைச் சேர்ந்த முஅல்லீம் அல் ஹாஜ் 'பஸீர் அஹமட் அல் அன்சாரி அல் காதிரி' அவர்களால் அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டதுடன் (ஹைருன் நிஷா-சிறந்த பெண் )என்ற பட்டத்தோடு விலை மதிப்பு மிக்க தங்கவிருது பெற்று கௌரவிக்கப்பட்டேன்
1999 ஆம் ஆண்டு “ரத்ன தீப”சிறப்பு விருது பெற்ற முதலாவது பெண் கவிஞர்
.( ரத்னதீபம் ) பட்டமும் விருதும்.பெற்று கௌரவிக்கப்பட்டேன் .
2002 இல் முஸ்லிம் கலாச்சார அமைச்சின் அனுசரணையோடு நடாத்தப்பட்ட உலக இஸ்லாமிய இலக்கிய மா நாட்டில் இளம்படைப்பாளிக்கான விருது .பெற்றுகௌரவிக்கப்பட்டேன் .
2005 ஆம் ஆண்டு மாவனெல்ல உயன்வத்தையில் நடைபெற்ற "ப்ரிய நிலா 'இலக்கிய விழாவின் போது கலை அரசி பட்டமும் விருது பெற்று கௌரவிக்கப்பட்டேன்
2009 இல் பல்கலை வேந்தர் , ஞானக்கவி , சட்டத்தரணி , பிரதியமைச்சர்,
அல்-ஹாஜ் கெளரவ எஸ்.நிஜாமுதீன் (பா.உ)அவர்களால் நிந்தவூர் ஆர்.கே.மீடியா பணிப்பாளர் ராஜகவி ராஹில்
(இலங்கை வானொலி அறிவிப்பாளர்அவர்களின் சார்பில் ) கவித்தாரகை "பட்டமும் விருதும் பெற்று கௌரவிக்கப்பட்டேன்.
2011 இல் லக்ஸ்டோ அமைப்பினால் கலைமுத்து ( மருத மா மணி முத்து )பட்டங்கழும் விருதும்பெற்று கௌரவிக்கப்பட்டேன்
2011 இல் அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் ஜனனதின நினைவு விழாவின் போது கண்டி மலையாக கலை கலாசார சங்கத்தினால் கவிதைச் சிற்பி பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்
2012-இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாம ஸ்ரீ, தேசகீர்த்தி ,கலாசூரி ,சமூக ஜோதிஆகிய நான்கு பட்டங்களும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்
.2012இல் eacsdo அமைப்பு கலை உலகில் ஆற்றி வந்த கவிதைஇலக்கிய சேவைக்காக (திறமைக்கு மரியாதை -பாவரசு பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்
2012இல் ஏ .எம் ராஜா , ஜிக்கி அவர்களின் ஜனனதின நினைவு விழாவின் போது மலையாக கலை கலாசார சங்கத்தினால் இலங்கையின்சிறந்த பெண் கவிஞருக்கான பட்டமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டேன்
2012-இல் இலங்கை தேசிய கவிஞர்கள் சம்மேளனத்தின் 23 வது விருது வழங்கல் மற்றும் கௌரவிப்பு விழாவில் அம்பாறை மாவட்டத்தில்தெரிவு செய்யப்பட்ட போது காவிய ஸ்ரீ,(காவியத் தங்கம்) எனும் பட்டம்கிடைக்கப் பெற்றேன்
2014இல் -நதியைப்பாடும் நந்தவனங்கள் கவிதைநூல் வெளியீட்டு விழாவில் பொற்கிழி மற்றும் நினைவுச் சின்னம் (விருது) பெற்றுகௌரவிக்கப்பட்டேன்
2015இல் இந்திய வல்லமை இணையத் தளம் (ஊடக அமைப்பினால்) வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுப் பெற்றேன் http://www.vallamai.com/?p=5411
2015 இல்இந்திய கவிதை சங்கமம் சர்வதேச மட்டத்தில் நடாத்திய மகளீர் தினச் சிறப்பு கவிதைப் போட்டியில் "தாய்மை"எனும் தலைப்பில் முதலிடம் பெற்றமைக்காக பாராட்டும் "கவிநிலவு "என்னும் பட்டமும் பெற்றுகௌரவிக்கப்பட்டேன்
.2015 புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் கடல் தேடும் நதி அறிமுக விழாவில்சமூக மேம்பாட்டாளர் விருதினை
பெற்றுகௌரவிக்கப்பட்டேன்
2015 -ஹஜ்ஜுப் பெருநாள் சங்கமப் பெருவிழாவில் மேம் பாட்டு விருது அம்பாறை மாவட்ட எழுத்தாளர் மேம் பாட்டுபேரவையால் பெற்று கௌரவிக்கப்பட்டேன்
2015யில் மலேசிய ஊற்று வலையுலக எழுத்தாளர் மன்றத்தினால்தமிழ் மாமணி விருதினை
பெற்றுகௌரவிக்கப்பட்டேன்
இன்னும் பல உள்ளது இவை என் எழுத்துக்கு கிடைத்தஅங்கீகாரமாகும்
ஆனாலும் இவைகளை விட நான் எனது இலக்கியப் பணிப் பயணத்தில்மிக மிக உயர்வான விருதுகளை பெற்று உள்ளேன் அவை எனக்கு கிட்டிய நேச உள்ளமிக்க நல்ல உள்ளங்களின் உறவுகளாகும்

Kalaimahel Hidaya Risvi
--------------------------------------------------------------------------------------

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails