Friday, January 22, 2016

புகழ் தரும் போதை

புகழ் தரும் போதை
பணத்தால் பொருளை வாங்கலாம்
புகழை வாங்க இயலுமா!
பணத்தை எந்த வழியிலும் அடையலாம்
புகழை அப்படி அடைய முடியுமா!
படித்தால் பதவி பெறலாம்
செய்யும் தொழிலால் சிறப்பு எய்தலாம்.
அப்படி என்றால் புகழ் பெறும் தொழில் என்று ஏதும் இருக்கிறதா. எதை செய்தால் புகழ் பெற முடியும்.
புகழ் தேடி அடைவதல்ல, தானே வருவது.
நல்ல புகழ் நிலைக்கும்; காலமெல்லாம் மக்களை பேச வைக்கும். விபத்தால் வரும் புகழ், ஒரு விபத்தில் முடிந்து விடும்.
சரித்திரத்தின் பக்கங்கள் இதை நமக்கு இன்றும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு ஸூபி துறவி - ஞானத்தின் இருப்பிடம்.....

அவர் பேசினால் மரங்கள் கூட அசைவற்று தலைசாய்த்து விடும் என்றால், மனிதன் நிலையை சொல்ல வேண்டியதில்லை. அவர் வருகிறார், பேசுகிறார் என்றாலே மக்கள் கூட்டம் அலை மோதும். அவர் செல்லுமிடமெல் லாம் அவரை பின் தொடரும்.
கல்லூரிகள் - பல்கலைகழகங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் மாணவர்களை கவர்ந்தன. பலர் அவர் சீடராயினர். லட்சக்கணக்கில் சீடர்கள் திரண்ட னர்.அவர் காலடியில் கிடந்து அருட்சுவை பருகி மகிழ, காத்து கிடந்தனர்.
ஒரு நாள் - ஸூபி துறவி காணாமல் போய் விட்டார் .எங்கு தேடியும் அவரை காண முடியவில்லை. அவரைத் தேடித்தேடி சீடர்கள் ஒய்ந்து விட்டனர் மிகவும் சோர்ந்து விட்டனர்
துறவிக்கு புகழ் வெறுத்தது. தன்னை தேடி வரும் மக்கள் கூட்டம் மீது வெறுப்பு ஏற்பட்டது. தன் பேச்சின் மீது, அறிவின் மீது, ஞான உபதேசத்தின் மீது, ஏன் - தன் மீதும், தன் தோற் றத்தின் மீதும் மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது.
ஓடினார்...ஓடினார்... ஓடிக் கொண்டே இருந்தார் நாட்டை விட்டு, தன்னை அறிந்த மக்களை விட்டு, யாரும் அறியாத புது தேசம் தேடி ஓடினார் அந்த ஸூபித் துறவி.
பல வருடங்கள் கடந்தன
ஒரு சிற்றூரை வந்தடைந்தார் அவர். அவர் எதிர் பார்த்ததைப் போலவே அவரை எவரும் கண்டு கொள்ளவில்லை.அவரை தெரிந்தவர் எவரும் அந்த ஊரில் இல்லை என்பது அவருக்கு மன நிறைவை தந்தது. ஒரு அநாதை பயணிகள் இல்லத்தில் நிம்மதியாக தூங்கி எழுந்தார் அவர்.
அடுத்த நாள், வெள்ளிக்கிழமை என்பதால் இறை இல்லம் செல்ல விரும்பிய அவர், அதி காலையிலேயே துயில் எழுந்து இறை இல்லம் நோக்கி அதிவேகமாகவே நடை பய ணம் மேற்கொண்டார். நல்ல வேளையாக மஸ்ஜிதின் இமாம் உரை நிகழ்த்தும் நேரம் இவர் உள்ளே புகுந்தார்.
அங்கு அந்த இமாம், இந்த ஸூபித் துறவியின் அருமை பெருமை, அவர் உதிர்த்த தத்துவ கருத்துக்களை, அதன் பொருள் சுவையை, மெய்யறிவை அவர் திடீர் என்று சீடர்கள் மத்தியில் காணாமல் போய் விட்தை பற்றி விலாவாரியாக விவரித்துக் கொண்டிருந்து, மக்களும் அவர் பேச்சில் உறைந்து கண் கலங்கலாயினர்.
இந்த நேரம் உள்ளே காலடி எடுத்து வைத்த ஸூபியை பார்த்த இமாம், தன் பேச்சை நிறு த்தினார். வந்த புதியவரை உற்று நோக்கனார்...
அவரை நோக்கி ஓடி வந்தார்.. மக்கள் அனைவரும் இமாம் பின்னால் ஓடினர்.
பின் வரிசையில் இதை ஒன்றும் அறியாமல் கண் மூடி அமர்ந்திருந்த ஸூபியின் கைகளை பற்றி தன் கண்களில் வைத்து கணகலங்கினார். கட்டிபிடித்து மார்போடு சேர்த்தணைத்த படியே முன்பகுதிக்கு அழைத்து சென்று அவரை மக்கள் முன் நிறுத்தி அறிமுகப்படுத்தினார் அந்த இமாம்.
அன்று .....
அந்த சிற்றூர் ஸூபியின் மெஞ்ஞான உரை கேட்டு மெய்மறந்தது. அவர் யார் எனபதை அறிந்து கொண்ட (people) மகிழ்ந்தனர். அவரை அங்கு காண்பது தாங்கள் செய்த பெறும்பேறு என்று உவகை கொண்டனர்.அவர் அந்த ஊரில் தங்கி இருக்கும் செய்தி ஊரெல்லாம் நகரெல்லாம், நாடெல்லாம் வெகு வேகமாக பரவி விட்டது. அவரைக் காண, அவர் ஆற்றும் அருளுரையைக் கேட்க, நாலாபுறமிருந்தும் அவரை நாடி மக்கள் வெள்ளம் அலைமோதியது.
எந்த புகழை கண்டு தூரவிலகி ஓடினாரோ அந்த புகழ் அவர் காலடியில் தலைவைத்து படுத்து கிடந்தது. அவரை விட்டு பிரிய மனமின்றி அவரை சுற்றி சுற்றி வந்தது.
ஸூபித்துறவி, இமாம் கஸ்ஸாலி அமைதியாக இறைவனை தியானித்து கொண்டிருந்தார்.
'இறைவா..
புகழ் என்னும் நோயை விட்டும் என்னை காப்பாற்று.....அது ஏற்படுத்தும் போதையில் இருந்தும் என்னை காப்பாற்று.......'
புகழை நாடி தேடி ஓடும் சில வெத்து வேட்டு மனிதர்களை நினைத்தால் இப்போது சிரிக்காமல் இருக்க முடியவில்லை.


Vavar F Habibullah

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails