Wednesday, January 6, 2016

வெளிநாட்டு வாழ்க்கை ...

வெளிநாட்டு வாழ்க்கை ./..-ஜே .பானு ஹாரூன்
=======================

வெளிநாடு போய் வந்த பின்தான் தெரிகிறது ...
அழாத ஆண்பிள்ளைகளின் அவலநிலை !....
பாலைவனத்தையும் பழக்கிக்கொண்டு ,
பனிக்குளிரையும் பொறுத்துக்கொண்டு ...
காலை வெய்யிலுக்கும் ,காய்ந்த ரொட்டிக்கும் ...
பரபரப்பாய் ஓடும் ஓட்டமான ஓட்டம் ...
இயந்திரத்தனமான வாழ்க்கை மாற்றம் !..
இன்னும் இன்னும் காசு பற்றின தேட்டம் ..
நிற்கவோ நடக்கவோ நேரமில்லை ...
இங்கேயான மெத்தனம் அங்கில்லை ...
காய்த்த கைகளும் ,வெறுமையான மனசும் ...
கிடைத்த இடமும் உறக்கமும் ,உணவும் ...

கிடைத்த விடுமுறையில் மனிதர்களின் தேடலும் ..
கண்டதும் கண்களில் குளிர்ச்சியும் ,மின்னலும் ...
ஆரத்தழுவலும் ..ஆலிங்கனம் கொள்ளலும் ...
தன்னலம் மறத்தலும் ,பொதுநலம் மிகைத்தலும் ..
உறவுகள் போல ஒன்று கூடலும் ..
நட்புகள் போல உறவாடி மகிழ்தலும் ..
ஊர் பற்றி அறிதலும் ,உறவு பற்றி நெகிழ்தலும் ..
விருந்தோம்பலும் ,பிரியாவிடையளித்தலும் ..
உள்நாட்டில் தொலைத்த உறவுகளையெல்லாம் ..
வெளிநாட்டில் கண்டு உளம் பூரித்தேன் ...உண்மையாக !
கணவர்களின் கண்மணிகளே !.பெற்ற செல்வங்களே !.
கடமையறிந்து காரியமாற்றுங்கள் ..கண்களே !..
அவர்கள் அங்கே தேய்பிறையாவது ..
உங்களை வளர்பிறையாக்குவதற்கே ...

-ஜே .பானு ஹாரூன் J Banu Haroon

No comments: