Monday, September 15, 2014

ISIS - குறித்து... அண்ணன் முகம்து அலியும் - நானும்

நூற்றாண்டு காலமாக அமெரிக்காவின் தலையீடு
அடுத்த நாடுகள் மீது இருந்து வருகின்றது .

ஒட்டோமான் சாம்ராஜம் வீழ்ச்சிக்கும் மற்றும்
காலம்தொட்டு வட ஆப்பிரிக்கா ,எகிப்து போன்ற
நாடுகள் மீது நேராகவோ மறைமுகமாகவோ
அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் தொடர்ச்சிதான்.
தங்கள் நாட்டின் தலைவிதியை
தானே தீர்மானிக்க முடியாத
கைப்பாவையாக அரபு நாடுகள் உள்ளன

ISIS முஸ்லிம்களுக்கு விரோதமான
தத்துவார்த்த கொள்கை கொண்டதால்
முஸ்லிம்கள் அதனை விரும்புவதில்லை
அத்துடன் அதனை எதிர்க்கவும் செய்கின்றனர் .

ISIS முதலில் ஊக்குவித்தது அமெரிக்காதான்
என்பது ஒரு கருத்து உண்டு
பின்பு அதனை எதிர்க்கும் காரணத்தை வைத்து
திரும்பவும் ஈரான் ,ஈராக் ,சிரியா போன்ற நாடுகளில்
தனது ஆதிக்கத்தை உறுதிப் படுத்த முயல்கின்றது

அமெரிக்காவின் நலன் நாடி ISIS அழிப்போம் என்ற
வாதத்தை முன் வைத்து
மற்ற நாடுகளையும் சேர்க்க முயல்கின்றது .
ஆனால்
நாம் பொதுவாகவே ISIS கொள்கை
மனித நேயத்திற்கு ஆபத்தானது
ISIS தடுக்கப் பட வேண்டுமென
உறுதியான கொள்கையில் ஒன்று சேர்ந்துள்ளோம்.

அமெரிக்காவுக்கும் நமக்கும்
இதில் முக்கிய வேறுபாடுகள் இருப்பதை
நாம் அறியலாம்

*


Taj Deen:
அண்ணே..
என் பக்க கருத்தையும் வைக்கிறேன்.
ரஷ்யா, தன் ஆளுமைக்கு உட்பட்ட,
இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்ந்த
சுமார் பத்து மாகாணங்களிலும்
தன் கோரப் பிடியினை இறுக்குகிறது.
பின்னர், ஆப்கானிஸ்தானை பிடித்து
தன் ஆதிக்கத்தை நிறுவுகிறது.
அவர்களை எதிர்க்க
ஆப்கானிஸ்தானிய போராளிகளிடம் ஆயுதம் இல்லை.
இன்னொரு பக்கம் அரபு நாடுகளுக்கு
வயிற்றில் புளி கரைத்த கதை.
ரஷ்யா தொடர்ந்து முயலுமானால்,
அரபு நாடுகளும் விழும்.

அவர்களின் பொருளாதாரத்தை
ரஷ்யா சுரண்டி போவது மட்டுமல்லாது,
மதத்தை தங்கள் நாட்டில் மூச்சுவிட முடியாமல்
வைத்திருப்பது மாதிரியான சூழலை
அரபு நாடுகளின் மீதும் பாச்சலாம்.
இதில் மூன்றாவது கோணமாக,
கம்யூனிஸ்ட் உலக நாடுகளில் பரவுவதை
என்றைக்குமே கேப்டலிஸ்ட் நாடான
அமெரிக்கா விரும்பியது இல்லை.

ஆக,
சௌதியின் பின்லாடனை முன் நிறுத்தி,
அமெரிக்கா ஆயுதங்கள் தர,
அவைகள் சௌதி மூலம்
ஆப்கானிஸ்தானுக்கு வினியோகிக்கப்பட்டது.

ஆக, ரஷ்யாவை எதிர்க்க
சௌதி பிளஸ் அமெரிக்காவினால்
ISIS தோன்றியது.
அவர்கள் ரஷ்யாவை எதிர்த்தார்கள்..
வெல்லவும் செய்தார்கள்.

அதன் பிறகு ISIS செய்ததெல்லாம் அரசியல்.
அவர்கள்
இரட்டை கோபுரத்தை
தரைமட்டம் ஆக்கியதெல்லாம் கொடுமை.
வரம் தந்தவம் தலையில் கை வைக்கின்ற கதை அது.
அதன் பிறகான அரசியல் நீட்சியை வைத்து,
ISIS தோன்ற அமெரிக்கா உதவியது என்கிற
காரணத்தை பேசுவது
அத்தனைகெனக்கு சரியாக தோன்றவில்லை.

*Taj Deen

                                                                     Taj Deen

No comments: