Thursday, September 25, 2014

விளம்பரங்கள் மக்களிடம் சென்றடைய


1. விளம்பரங்கள் மக்களிடம் சென்றடையக்கூடியதாக கருத்தில் வையுங்கள்.

2. துண்டு பேப்பரில் செய்யப்படும் விளம்பரங்கள் பெரும்பாலும் எங்கே செல்லும் என்று எனக்கு தெரிந்ததால் சொல்லுகிறேன், அவற்றை நேரிடையாக வீட்டை அடையும்மாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. லோக்கல் சேனலில், ஸ்காரல் செய்வதைவிட, ஏனெனில் ஏகப்பட்ட விளம்பதாரர்களுக்கு மத்தியில் நம்முடைய விளம்பரம் பத்தோடு பதினின்றாக போகக்கூடும்...ஆகையால் முடிந்த மட்டில் வீடியோ விளம்பரமாக தயாரித்து (1 நிமிடத்திற்குள்) தொடங்குங்கள்.

4. பேனர் இவற்றை மக்களுக்கு அதிகம் தெரியும்படியான இடத்தில் கட்டிவைக்க முயற்சிசெய்யுங்கள்.

5. எஃப் எம் மூலம் விளம்பரம் செய்யலாம்.

6. இத்தனை வாங்கினால் இத்தனை இலவசம், அல்லது இவ்வளவு மார்கெட்டிங் செய்தால் இவ்வளவு கமிஷன் என ஐடியா செய்யுங்கள்.

7. எல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகள் நமக்கு மூலதனமே என்றாலும் ஆரம்பத்தில் அதிகப்படியான விளம்பர மூலத்தை செய்து அதில் உங்கள் இலாபத்தையோ அல்லது கையிறுப்பையோ இறக்காமல் இருக்க... ஒவ்வொரு விளம்பரத்திலும் என்ன feedback என்று அறிந்துக்கொண்டு மேற்படி அதனை கையாளுங்கள்.

8. உங்களுக்கு வரும் அழைப்பில் எப்படி அறிந்துக்கொண்டீர்கள் எனும் கேள்வியை மறக்காமல் கேட்டு, விளம்பரம் எதன் மூலம் செய்தோம் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

9. ஒவ்வொரு ஊர் டிஸ்ட்ரிபுயூட்டரிடமும் விளம்பரத்திற்கு பாதிக்கு பாதியோ அல்லது, அதிகப்படியான விறபனையில் உள்ள டிஸ்டிரியுயூட்டருக்கு முழு விளம்பர பொறுப்பையோ ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கு முன் அவர்களின் மூலம் நீங்கள் பெறக்கூடிய இலாபத்தை கணக்கில் வைத்து அதற்கு தகுந்தாற்போல விளம்பரத்திற்கு பேனர், நோட்டீஸ் என்று உதவி செய்யுங்கள்.

10. டாட்டா ஏஸ் (குட்டீ யானை) வாடகைக்கு எடுத்து, பேனர் போட்டு, மைக்கைப்பிடித்து பேச அல்லது ரெக்கார்ட் வாய்ஸில் டேப்ரிக்கார்ட் அரெஞ் செய்து நேரிடையாக மக்களிடம் (ரெஸிடன்ஸி) வியாபாரம் செய்யுங்கள் சற்று விலைகுறைப்பில்..

இவற்றுள் உங்களுக்கு தெரிந்த விசயமும் இருக்கலாம், தெரியாத விசயமும் இருக்கலாம், தெரிந்த விசயத்தை மெருகேற்றுங்கள், தெரியாத விசயத்தை அமுல்படுத்துங்கள். அர்ரஹ்மான் உங்கள் தொழிலில் அபிவிருத்தி செய்வானாக!


Yasar Arafat

No comments: