Thursday, September 4, 2014

கொக்கு பிடிக்கப் போய் ...!

நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது நான் ஏறாத மரம் அது பாவம் செய்த மரமாகத்தான் இருக்கும்.
ஒரு முறை தென்னை மரத்தில் ஏறி கொக்கு பிடித்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது எங்க அம்மா திடீரென்று வந்து விட்டார்கள்

அப்புறம் என்ன வழக்கம்போல் கொஞ்சல் தான் ..
பிறகு வீட்டுக்கு வந்து என்னிடம் சத்தியம் பண்ண சொன்னார்கள் இனி நீ 'தென்னை மரத்திலே ஏற மாட்டேன் என்று சத்தியம் பண்ணு' என்று சொன்னார்கள் நமக்கு அப்பொழுது சத்தியத்தை பத்தி என்ன தெரியும் அதனால் நானும் சரி 'சத்தியம்' என்று சொல்லி விட்டேன்.
இந்த யோசனையை யாரோ எங்க அம்மா விடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்
இப்படி 'சத்தியம்' சும்மா அவனிடம் வாங்கு  இனி பயத்தில் அவன் மரத்தில் ஏற மாட்டான் என்று ..

எங்க அம்மாவும் அதைபோல் என்னிடம் சத்தியம் பண்ண சொல்லிவிட்டார்கள் நானும் பண்ணிவிட்டேன்

அப்புறம் ஒரு வாரம் கழித்து எங்க வீட்டுக்கு பின்னால் ஒரு புளியமரம் ஒன்று இருந்தது அதில் கொக்கு நிறைய அடைந்தது. அப்ப கொக்கு சீசன் மரமும் பெரிய மரம் தான் ..சரி இன்றைக்குத்  தான் எங்க அம்மா வெளி ஊருக்கு போய்விட்டதே அதனால் அம்மா வீடு வருவதற்குள் மரத்தில் ஏறி கொக்கு பிடித்து விட வேண்டியதுதான் என்று நினைத்து மரம் ஏறி விட்டேன் அந்த சமையம் பார்த்து எங்க அம்மா ஊருக்கு போகாமல் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டார்கள்.  அம்மா வீட்டுக்கு வரும் வழியில் ஒரு நல்ல மனுஷன் எங்க அம்மாவிடம் நான் மரம் ஏறியதை போட்டு கொடுத்து விட்டார் .

எங்க அம்மா விட்ட சவுண்டை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சி ஆகி  அப்படியே மரத்தின் மேல் நின்று விட்டேன். மரத்தின் கீழிருந்து எங்க அம்மாவின் கோபமான  குரல் ..'ஏண்டா நேத்து தானேடா மரத்தில் ஏற மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணி குடுத்தே பிறகு என்ன என்றால் இன்று  மரத்தில் ஏறி நிக்கிறே' என்று சொன்னார்கள்
அதுக்கு நான் மேல் இருந்து எங்க அம்மாவிடம் சொன்னேன்
 'நீ தென்னை மரத்தில் தான் ஏறக்கூடாது என்று சொன்னே அதுக்கு தான் சத்தியமும் செய்தேன்  இப்ப ஏன் மாற்றி  பேசுறே' என்று சொன்னேன்.
'ஹ்ம்ம் அப்படியா மவனே கீழே இறங்கு உனக்கு பிறந்த நாள் கொண்டாடிவிட்டுத் தான் மறு வேலையே பார்ப்பேன் என்று சொன்னார்கள் ..' அதே போல் அடியும் விழுந்தது.
ஏன் இப்படி எங்க அம்மா கண்டித்தார்கள் என்றால் நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை(ஆண் மகன் நான் மட்டும் தான்) ..
ஒரு சில பழைய நினைவுகளை நினைக்கும் போது எனக்கு சிரிப்பு வருது.


Jabbar Arasar Kulam

No comments: