Tuesday, February 16, 2010

பீறிட்டு வந்த சினம், எமனான விபரீதம்

கண நேரத்தில் பீறிட்டு அடங்கும் சினம் எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு முன்னுதாரணமாக பிரித்தானியாவைச் சேர்ந்த போல் ஹார்பி விளங்குகிறார்.
கிழக்கு லண்டனைச் சேர்ந்த மின்சார பொறியியலாளரான போல் ஹார்வியும் (46 வயது), ஓய்வுபெற்ற அமெரிக்க இராஜதந்திரியான அவரது மனைவி குளோரியா லகுனாவும் (48 வயது) சம்பவதினம் கொக்கேயின் மற்றும் மதுபானம் என்பனவற்றை உபயோகித்த பின் உரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது, அவர்களது வளர்ப்பு மகளின் கல்விக் கட்டணங்கள் குறித்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அச்சமயம் போல் ஹார்வி சினமடைந்து கையிலிருந்த தொலைக்காட்சி தூர இருந்து இயக்கும் கருவியை (றிமோட் கொன்ட்ரோல்) மனைவியை நோக்கி வீசியுள்ளார்.

16 கிராம் நிறையுடைய அந்தச் சிறிய கருவி தலையில் தாக்கி மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டதால் குளோரியா மரணமடைந்தார்.

இந்நிலையில், போல் ஹார்வி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மனைவியைப் படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

போல் ஹார்வி, தனது கணநேர கோபத்தால் தனது அன்புக்குரிய மனைவி மரணமடைந்தது தொடர்பில் மிகவும் அதிர்ச்சியடைந்து போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Pushparagam said...

ஆறுவது சினம்
அவ்வையர் கூறியது.

அன்புடன்
ராகவன்.வ