Monday, February 8, 2010

பாரதியார்ப் பாடல்கள்..!


 நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

அஞ்சி யஞ்சி சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சக பெய்க லென்பார் - இந்த
மரத்தில் பார், அந்த குளத்திலென்பார்
துஞ்சுது முகட்டி லென்பார் - மிகத்
துயரப் படுவார்எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு)
மந்திர வாதிஎன்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கலிபிடிப்பர்
எந்திர சூனியங்கள் - என்னும்
எத்தனை யாயிரம்  வர்துயரங்கள்!
தந்த பொருட்களை கொண்டே - ஜனம்
தாங்குவ ருலகத்தில் அரசரெல்லாம்
 

அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சமயார்வார் (நெஞ்சு)
சிப்பாயை கண்டஞ்சுவார் - ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப்பார்
துப்பாக்கி கொண்டொருவன் - வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிவார்
அப்பாலெ வனோசெல்வான் - அவன்
ஆடையை கண்டுபயந் தெழுந்துநிற்ப்பார்
எப்போதும் கைகட்டுவார் - இவர்
யாரிடத்தும் பூனைகல்போ லேங்கிநடப்பார் (நெஞ்சு)
நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த

நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு

கோடியென் றாலது பெரிதாமோ ?

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்

ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்

நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு

நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)

சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே

கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு

கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்

தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்

சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
 
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்

அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் - இவர்

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்

கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்

காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்

நண்ணிய பெருங்கலைகள் - பத்து

நாலாயிரங் கோடி நயந்து நின்ற

புண்ணிய நாட்டினிலே - இவர்

பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)



 நன்றி http://sakthispoem.blogspot.com

1 comment:

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு.