Friday, January 2, 2015

நீங்கள் கவிதை எழுதுகிறவரா? - கவனம்.

கவிதை எழுதுவதால்...
நீங்களும்
உங்களது சிந்தையும்
நுட்பம் கூடி
உங்களது மொழியின் பரிமாணமும்
உங்களது வாழ்வியல் பரிமாணமும்
புதிய அழகியல் கொள்ளும் என்பது
எத்தனைக்கு திண்ணமோ
அத்தனைக்கு திண்ணம்...
கவிதை ஓர் லாகிரி என்பதும்!

கவிதையின் மீது ஈடுபாடு கொண்டுவிடும் பட்சம்
அத்தனைச் சீக்கிரம்
அதனிடமிருந்து மீள்வதென்பது நடவாது!

கவிதை சிந்தனை
உங்களை ஆளத் துவங்கிவிட்டால்
வாழ்வின் பெரும்பகுதியை
அதுவே எடுத்துக் கொள்ளும்.

பொதுவில்...
கவிதை ஈடுப்பாட்டை
பணம் கொண்டவர்களின் விளையாட்டு என்பார்கள்.
வாழ்விற்கு பொருள் தேடுபவர்கள்
இதனில் ஈடுபாடு கொள்வார்களேயானால்...
வாழ்வே பொய்த்து போகும் சங்கடமுண்டு.

அந்தக் காலத்து புலவர் பெரும் மக்கள்
அரசர்களையும் ஜமீன்களையும்
புரவலர்களாக நம்பி வாழ்ந்த வாழ்வையும்
பொருளாதாரத்தில்
பாரதி கொண்ட சங்கடங்களையும்
நீங்கள் அறியவந்தாலே போதும்.

# கவிதை எழுதுபவர்கள்
இது குறித்தும்
கவனம் கொள்ள வேண்டும்.
 

No comments: