எல்லோரும் எல்லோரையும் ஒரு சகோதரனைப்போல உறவாகக் காணவேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டது.
அயலானை நேசி என்பது இஸ்லாத்தின் அடிப்படைப் பண்பு.
இதில் பாய் எங்கிருந்து வந்தது?
ஆங்கிலத்தில் Bro அழைத்துக்கொள்வார்கள். இது Brother என்ற சொல்லின் சுருக்கம்.
விஜய் துப்பாக்கி படத்தால் முஸ்லிம்களைச் சுட்டுவிட்ட காயத்துக்கு மருந்துபோடுவதாய் தலைவா படத்தில் Bro Bro என்று சொல்லித் திரிவாரே அந்த Bro தான் இது.
என்றால் தமிழர்கள் எப்படி முஸ்லிம்களை அழைத்துக்கொள்ள வேண்டும்?
பாய் பாய் என்றா?
இல்லை.
அது தவறாக அழைப்பு.
சரியான அழைப்பு ”சகோ” என்று இருக்க வேண்டும். சகோதரா என்பதன் சுருக்கம்தான் சகோ.
பிறகு ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்?
இது உருது மொழியைத் தமிழில் திணிக்க விரும்பிய அந்தக்கால சில முல்லாக்களால் வந்த விணை.
உருது மொழியில் பாய் என்றால் சகோதரா என்று அர்த்தம்.
பாய் என்று ஒரு தமிழன் அழைப்பது அவன் தன் தாய்மொழிக்குச் செய்யும் துரோகம்.
தமிழ் வட்டத்தில் தமிழ் நாட்டில் சகோ என்று அழைப்பதே சரி.
தமிழரல்லாத இடங்களில் Bro என்று ஆங்கிலத்தில் அழைக்கலாம். அல்லது சகோ என்றே அழைக்கலாம். காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.
அரபு மண்ணில் அஹூ என்று அழைப்பார்கள். அஹூ என்றாலும் சகோ என்றுதான் பொருள்.
இனியாவது இந்த பாய் பாய் என்னும் நோயை விட்டுவிடுங்கள். அதைக் கேட்கும்போது தமிழ் மனத்தின் காதுகள் கூசுகின்றன அல்லவா?
Source : http://anbudanbuhari.blogspot.in/
1 comment:
அருமையான கருத்துக்கள் தெளிவான சிந்தனைகள்...
என் கருத்தையும் http://lks-meeran.blogspot.in/2012/04/blog-post_30.html
பாருங்கள்...
Post a Comment