Showing posts with label வழிகாட்டி. Show all posts
Showing posts with label வழிகாட்டி. Show all posts

Tuesday, January 14, 2014

பெண்கள் ஏன் நம் பின்னால் நடக்கிறார்கள் !


ஆண்கள் இயற்கையாக  பெண்களை விட வேகமாக நடக்கும் சக்தி பெற்றவர்கள். அதில் சில பெண்கள் விதி விலக்கும் உண்டு.
பெண்கள் மரியாதை காரணமாக ஆண்கள் பின்னால் நடந்து செல்வதும் பண்பாடாக கருதுகிறார்கள். அது தாழ்வு மனப்பான்மையால் வந்ததாக கருதுவது தவறு.

 ஆண்கள் பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும், காப்பாளராகவும் இருக்க வேண்டியதும் இருக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. அதனால் ஆண்களுக்கு அந்த பொறுப்பும் உள்ளது. 

மனிதன் பெண்ணுக்கு  பாதுகாப்பாக  வழியமைத்து செல்வதற்கு சூழ்நிலையின் அவசியமான கட்டாய கால நிலை.

ஆண்களின் பார்வை அதிகமாக பெண்கள் மீது இருக்கும் இக்கால நிலையில் பெண்களின் நிலை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

Sunday, August 26, 2012

இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி

இறைவா! நான் உன்னுள் அடக்கம் ,நீயே என் வழிகாட்டி.
என் வலியை குறைத்து, என்னை வலுவடையச்  செய்.

என் ஆத்மாவின் இருண்ட இரவு முழுவதும் உன்  உதவி நாடி நிற்கின்றது
என் தாயகம் எனக்கு  நீ அளித்த பரிசு
 என் மனம் சிக்கலில் உள்ளது
உன் அருள் நாடி, அமைதி நாடி உன்னை தொழுகின்றேன்
காதலில்  பல மகிழ்வு  தந்தது நீயே!
உன்னை நேசிப்பதைவிட உயர்ந்த காதலி உண்டோ ?
அவள் வருவாள் திரும்பி என்னை விட்டு அவள் உன்னிடமே வந்து விடுவாள் !
அவளால் கிடைத்த சிற்றின்பம் சிதறும்!
உன்னை நேசிப்பதிலேயே  பேரின்பம் நிலைத்து நிற்கும்

என் ஆத்மாவின் திறவுகோல் நீ தான்
சொர்கத்தின் திறவுகோல் உன்னிடம் இருக்க
நீ அதைக் கொண்டு  அந்த  சொர்க்கத்தில்  என்னை நுழையச் செய்
பூமிக்கு நீ அனுப்பியதே உன்னை அறியவே !
உன்னிடம்   திரும்பி வரும் நாள் நான்  அறியாமல்  என்னை ஏன் நீ அனுப்பினாய்!

என் வலி நீ அறிவாய் அதைப் போக்க நீ வழியைக் காட்டு!
நீ கொடுத்த குர்ஆனும், நபிவழியும் வாழ்கையின் வழியன அறிந்தும்
நான் வாழ்க்கையில் உன்னை பிரார்த்தனை செய்தும்
தடுமாறி தத்தளிக்க வைக்கும் உடன் வாழும் மக்களால் சீரழிக்கப் படுவதிலிருந்து உன்னிடம் உதவி நாடி நிற்கின்றேன்!
இறைவா! என் வலியை குறைத்து, என்னை வலுவடையச்  செய்.

Friday, May 25, 2012

அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல்!

   அனைவருக்கும் தான் தலைவராக வேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. ஆனால் அதற்கு யார் தகுதியானவர் என்பது பற்றி   மக்களுக்கு சிந்தனை இருந்தாலும் சரியான தலைமையை தேர்ந்தெடுப்பதில் நாட்டம் வருவதில்லை. தற்காலத்  தலைவர்  பொறுப்பில் இருக்கும் பலர்  சுயநலப் போக்கினை தன கையில் எடுத்துக் கொள்வதால் தலைவரை தேர்ந்தெடுப்பதில் மக்களுக்கு ஆர்வமில்லை, ஆனால் தலை இல்லாத உடம்பில்லை, வழி நடத்துவதற்கு ஒரு தலைமை அவசியம் தேவைப்படுகின்றது. தலைமை ஏற்று வழி நடத்துபவர் ஒருவர் இல்லையென்றால் குழப்பமே வந்து சேரும் . உங்களில் இருவர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை உங்களுக்கு தலைமையாகிக் கொள்ள வேண்டும்.
மூவர் ஒரு பிரயாணம் செய்தாலும் அதில் ஒருவரை தலைவராக நியமித்துக் கொள்ளுங்கள்” (புகாரி, முஸ்லிம்)

தலைமைப் பொறுப்பினை தேடி அலையக் கூடாது அது நமது ஆற்றலைக் கண்டு மற்றவர்கள் நமக்குத் தரப்பட்டதாக இருத்தல் சிறந்தது. பொறுப்பு கிடைத்த பின்பு ஆதிக்க மனப்பான்மை இல்லாமல் சேவை உணர்வே உயர்ந்தோங்கி இருக்க வேண்டும். தமக்கு கொடுக்கப்படும் தலைமைப் பொறுப்பினை 'வேண்டாம்.' என தட்டிக் கழிக்கக் கூடாது. அது இறைவனால் கொடுக்கப் பட்ட மக்களுக்கு சேவை செய்யும்  அருள். இத்தகைய அறிய வாய்ப்பினை  இறைவன் அனைவருக்கும் கொடுப்பதில்லை. தலைமைப் பொறுப்பினை ஏற்ற பின்பு அதன் சேவையை செய்ய முடியாத நிலை ஏற்படும்போது அதனை விட்டு விலகி விடுதல் உயர்ந்த செயல்.
தலைமைப்  பொறுப்பிலிருந்து செயல்படுவதற்கு சிறந்த வழிகாட்டி திருக்குர்ஆன்,அடுத்து நபிமொழிகள் இறுதியாக இவைகளில் காணப்படாதவற்றில் சந்தேகம் வருமானால் மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து அறிவுப் பூர்வமாக  முடிவுக்கு வர வேண்டும்.