Tuesday, March 22, 2011

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது,

அரசியல் உறுதிப்பாடினால் சிங்கப்பூர் வழிகாட்டுகிறது   பல  இன ஐக்கியத்திற்குப் பாராட்டு.
  சிங்கப்பூர் இப்போதைய தலைமைத்துவத்தின் கீழ் நெடுங்காலம் அரசியல் உறுதிப்பாட்டுடன் விளங்கி வரும்  சிங்கப்பூரில் விரைவான பொருளாதார் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதற்கு வலுவான தலைமைத்துவமும் மக்களின் கடின உழைப்புமே காரணம்.இந்த இரண்டு சிறப்புகளையும் பெற்றிராததால் தான்  வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் பல தலை தூக்க முடியாத நிலைமையில் இன்று  இருந்து  வருகிறது.
   வளச்சி  வரும் ஆசிய நாடுகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த முன்னோடியாக திகழ்கிறது. வளச்சி பெற்றுள்ள நாடுகள் கூட சிங்கப்பூரிடமிருந்து  சிலவற்றை எடுத்துக்கொள்ள  இயலும். பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினை தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கை தரம் பல்மடங்கு உயர்ந்துள்ளது.
   மலேசியா ,தாய்லாந்து , லாவோஸ் , தென்வியட்னாம்,ஜப்பான், ஹான்காங் ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து வந்த பின்பு அறிந்த உண்மை இது .
சிங்கப்பூரின்  அரசியல் பொருளாதார  சமூகவியல் சிறப்புகள் வாய்த்தது.
இங்கு நிலவும் பல  இன மக்களின் ஒருமைப்பாடு தண்மை  வெகுவாக கவரக்  கூ டியது.  ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களைக் கொண்டு சில நாடுகளில் இன ஐக்கியம்  ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.
    சிங்கப்பூரில் பல இன மக்கள்  வாழ்ந்துவரினும் அரசியல் சமுதாய நீதி  ஆக்கியவற்றை தலைமைத்துவம் வழுவாது பேணி வருவதால் இங்கு இனவாத பிரச்னைக்கு என்றுமே இடமிருக்காது,  சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அரசியல் சாசனத்தின் மூலம் உத்தரவாதமளிக்கக் கூடிய முற்போக்குக் குடியரசாக   சிங்கப்பூர் விளங்குகிறது.
  
     நாட்டு நடப்புகளை சிங்கப்பூர் மக்கள் நன்கு உணர்ந்தவர்களாக உள்ளனர் .
உழைத்து முன்னேற   விரும்பும் செயல் வேகம் மக்களிடம் மேலோங்கி நிற்கிறது .இதனால் வெற்று  அரசியல் முழக்கங்களுக்கு  இடமேற்படாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். சிங்கப்பூர் போன்ற செயல் முனைப்பு உள்ள  சமுதாயத்தில் அரசியல் சந்தர்பவாதங்களுக்கும், சுரண்டலுக்கும் என்றைக்குமே இடமிருக்க முடியாது .

    ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூர்தான் பொருளாதார வளர்ச்சியில் முன்னிலை வகிக்கின்றது .இந்த வளர்ச்சி வேகம் சிங்கப்பூரில் தொடர்ந்து இருந்து வரும் .வெளிநாட்டு மூலதனங்களைக் கவரும் வகையில் சிங்கப்பூரின் பொருளாதாரக்  கொள்கைகள் இருப்பது இதற்கு நல்ல அடிப்படை.

   பயண தொழில் வளர்ச்சியிலும் சிங்கப்பூருக்கு சிறப்பான இடம் எப்பொழுதும் இருக்குமாறு செயல்படுகிறது .சிங்கப்பூருக்கு வரும் பணக்கார பயணிகள் தங்கள் தாயகத்தில் இருப்பது போன்று உணரக்கூடிய  அளவுக்கு பயணத்துறைப் பணிகள் இங்கு சிறப்பாக இருக்கின்றன.

முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.)

(nidurali" "நீடூர்அலி")