Monday, February 27, 2023

எப்படி எல்லாம் தேர்வுகள் தரும் அழுத்தங்களை கையாளலாம்...? (Part 2) /Ashika Imthiyaz

 




எப்படி எல்லாம் தேர்வுகள் தரும் அழுத்தங்களை கையாளலாம்...?

(Part 2)

     பெரும்பாலான சமயங்களில் மதிப்பெண்கள் தான் நம்முடைய Parenting capability யை பெற்றோர்களாகிய நாம் எண்ணிக் கொள்கிறோம். பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால், பிள்ளையை சரியாக வளர்க்கவில்லையோ என்று எண்ணி நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய insecurity எல்லாவற்றையும் குழந்தையின் மேல் நம்மை அறியாமலேயே திணித்து விடுகிறோம்.


     இதுபோன்ற நேரங்களில், நாம் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்? என்ன பேசுகிறோம்? தேர்வுகளுக்கு தேவையற்ற அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோமா? என்பதை எல்லாம் பெற்றோர்களாகிய நாம் தான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

     குழந்தைகள் சரியாக படிக்கிறார்களா... இல்லையா... என்று பார்ப்பதை விட, சரியான தூக்கத்தையும் சத்தான உணவுகளையும் எடுத்துக் கொள்கிறார்களா? என்று கவனிக்க வேண்டும். தேவையான தூக்கமும் சத்தான உணவு பழக்கமும் குழந்தைகள் கவனம் செலுத்தி படிக்க உதவும். அழுத்தங்களையும் குறைக்கும்.

      தொடர்ச்சியாக பல மணி நேரங்கள் படிப்பதை தவிர்த்து சிறு சிறு இடைவேளை எடுத்து படிப்பது, படித்த விஷயங்களை மனதில் நிறுத்த உதவும். இடைவேளைகளில் படிப்பல்லாத வேறு ஏதேனும் விஷயங்களில் கவனம் செலுத்தலாம். எப்பொழுதும் தேர்வை பற்றிய பேசிக் கொண்டிருக்காமல், குறிப்பிட்ட சில மணி நேரங்கள் கவனமாக படித்தாலே போதுமானது.

     மேலும், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதை தவிர்த்து சிறிது நடைபயிற்சி, meditation, journalling, விளையாட்டு போன்றவற்றையும் பிள்ளைகளுக்கு செய்ய பழக்குவதன் மூலம் அழுத்தங்கள் குறைய உதவும்.

     பொது தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள், முந்தைய வருட தேர்வு தாள்களை வைத்து பயிற்சி செய்து கொண்டால் எந்த பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என்பதை புரிந்து கொண்டு படிப்பது தேர்வை பயமின்றி எதிர்கொள்ள உதவும்.

Disclaimer: By the way, am not at all a teacher or parenting coach. I do write here based on my experiences as an Engineer and as a Parent.

#positiveparenting

#examstress

#தேர்வுகள்

#exampreparation



Ashika Imthiyaz

No comments: