Monday, February 27, 2023

குழந்தைகள சமாளிக்கிறது

 


Ashika Imthiyaz

குழந்தைகள சமாளிக்கிறதுல ரொம்ப கஷ்டமான பருவம்னா... ஒன்றும் முதல் மூன்று வயதிலான Toddler குழந்தை பருவம் தான். இந்த பருவத்தில் குழந்தைங்களோட வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும். 

அவங்க குறும்புத்தனங்களும், பிடிவாதங்களும், சேட்டைகளும் ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும்... அதோட இன்னொரு பக்கம் ஒண்ணு இருக்கு. பொறுமையோட எல்லைக்கே கூட்டிட்டு போய் காட்டுவாங்க...

சாப்பிடுவதில் இருந்து... தூங்குறது... விளையாடுறது... இப்படி எல்லாமே போராட்டமா தான் போகும். குழந்தைக்கு மட்டுமல்ல; குழந்தையோட கூட இருக்கிறவங்களுக்கும். காலையில வேலைக்கு போயிட்டு ஈவினிங் வரவங்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பே இல்லை. அதுவும் தனியா குழந்தையாக கவனித்துக் கொள்வதென்றால் அதெல்லாம் சொல்லில் அடங்காதவை.

Parenting is Hard... எந்த அளவுக்குனா... சரியா தூங்காம, சாப்பிடாம... Food poison ஆகிற அளவுக்கு... தூக்கம் குறைந்து blood pressure அதிகமா ஆகுற அளவுக்கு... இரண்டு மூன்று நாள் தொடர்ந்து தலைவலி வர அளவுக்கு... இன்னும் நிறைய... இருக்குறதுலையே ரொம்ப கஷ்டமான வேலை என்றால்... இரண்டு வயது குழந்தைக்கு அம்மா வா இருக்குறது தான். 

முன்னாடி பெண்கள் லாம் அதிகமா குழந்தை பெத்து கிட்டாங்க. இப்போ அம்மா இருக்காங்க அம்மம்மா இருக்காங்க... கிர reels லாம் வேடிக்கை பார்குறவங்களுக்கு காமெடி யா தெரியுது. வேலைக்கு போகாம குழந்தைகள் கூடவே இருந்து பார்த்தா... புரியும். 

Yes... Feeling very tired, exhausted, desperated, bone-tired, worn out, and it goes on... 

When you are tired of... " Being MOM"

Parenting thoughts


No comments: