Sunday, February 12, 2023

*நாசிக்கண்டார் இது எல்லாம் இன மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் ஒரு உணவாகும்

 மலேசியாவை கலக்கும் *நாசிக்கண்டார்*உணவின் பிறப்பிடம் பினாங்காக இருந்தாலும். இதன் செய்முறை தமிழகத்தை சார்ந்தது. இதை சுமார்-150 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின், இராநாதபுரம் மாவட்டம், சித்தாரக்கோட்டையில் இருந்து வந்தவர்களே பினாங்கில் அறிமுகப்படுத்தினர். மலாய் மொழயில் நாசி- என்றால்- சோறு, கண்டார் என்றால் அவர்கள் தோளில் சுமந்து வரும் கூடை. இந்த உணவு வேற ஒன்னுமில்லைங்க.., சோற்றில்- இறைச்சி, கோழி, மீன், கனவாய் போன்ற குழம்புகளை ஒன்றாக ஊற்றி மேற்காணும் அசைவ உணவுகளை தமக்கு பிடித்தமானதையும் எடுத்துக்கொண்டு.., கோபிஸ், வெண்டிக்காய் என்று ஏதாவதொரு காய்கறியையும் சேர்த்து சாப்பிடுவது தான் நாசிக்கண்டார். இந்த உணவகங்கள் மலேசியா முழுவதிலுமே அதிகமாக இருக்குங்க, முக்கியமா பினாங்கிலும், அதை சுற்றி உள்ள நகரங்களிலும் இந்த உணவகங்கள் மிக அதிகம். கோலாலம்பூரில் சோகோ மால் இருக்கும் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் ரோட்டில் இரண்டு நாசிக்கண்டார் உணவகங்கள் இருக்கின்றன. இங்கே மதிய உணவு நேரத்தில் மக்கள் வரிசை கட்டி நிற்பதை பார்க்கலாம். இதே பெயரில் சென்னையிலும் இந்த உணவகங்கள் உண்டுங்க. இது எல்லாம் இன மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் ஒரு உணவாகும்


No comments: