Wednesday, February 8, 2023

#கண்_தெரியாது_நடக்க_இயலாது, #ஒழுங்காக_பேச_வராது_ஆனால் #குர்ஆன்_ஓதுவதில்_உலக_சாதனை #படைத்த_தமிழர்

 #கண்_தெரியாது_நடக்க_இயலாது, #ஒழுங்காக_பேச_வராது_ஆனால் #குர்ஆன்_ஓதுவதில்_உலக_சாதனை #படைத்த_தமிழர் 

#முஹம்மது_ஈஸா...

தமிழில்✍️:M.சிராஜுத்தீன் அஹ்ஸனி. 

திருவிதாங்கோடு.. 

7598769505

இது முஹம்மது ஈஸா. 

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். 

துபாயில் வசிக்கின்றார். 

பிறக்கும் போது பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்தவர். 

கண் தெரியாது, 

கருத்துப் பரிமாற்றம் செய்ய இயலாது. 

சொந்தமாக நடக்க இயலாது. 

ஆனால் அவருக்கு குறைபாடு இல்லாத ஒரு விஷயம் உண்டு. 

அது பரிசுத்த குர்ஆன் ஆகும். 

துபாயில் நடைபெறுகிற குர்ஆன் போட்டியில் பலதிலும் கலந்துள்ளார்.

ஏராளமான போட்டிகளில் பங்குபெற்ற முஹம்மது ஈஸா நிறைய பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளார்..

இறுதியில் உலக ரிக்கார்டும் முஹம்மது ஈஸாவைத் தேடி வந்து இருக்கிறது.

தமிழ்நாடு தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் ஹாதி மற்றும் ஹலீமுந்நிஸா தம்பதியரின் மகன் முஹம்மது ஈஸா.. 

நான்காம் வயதில்தான் மகனுக்கு குர்ஆன் மனப்பாடம் செய்வதற்கு நல்ல திறமை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் கண்டறிகிறார்கள்.

ரமளானில் சுற்றுவட்டார பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஓதுவதை கேட்கும் முஹம்மது ஈஸா அதைப்போல வீட்டிலிருந்து ஓதுவதை பெற்றோர்கள் கவனிக்கின்றனர். 

உடனே அவருக்கு யூ டியூப் மூலம் குர்ஆன் கிராஅத்தை கேட்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர்... 

சகோதரிகளான சுமைய்யாவும், 

ஆயிஷாவும் தம்பி முஹம்மது ஈஸாவுக்கு பக்கபலமாக இருக்கின்றனர். 

கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கோ, மதரசாவுக்கோ அவரால் செல்ல இயலாது. 

இடைவிடாமல் நீண்ட நேரம் குர்ஆன் ஓதும் முஹம்மது ஈஸா பல காரிஉகளின் கிராஅத்தையும் அழகிய விதம் ஓதுகிறார்

அல் மனார் குர்ஆன் சென்டர் உட்பட

பல்வேறு ஸ்தாபனங்கள் ஏற்பாடு செய்த நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். 

இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது ஐந்தாம் வயதில் உம்ரா நிறைவேற்றும்  வேளையில் மக்கா ஹரமில் வைத்தாகும்.

இவர் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு பாதுகாப்பு உட்பட பிரத்யேக வசதி ஏற்பாடுகள் செய்ய ஹரம் அதிகாரிகள் தயாராகினர்.. 

மகனது ஆரோக்கிய நிலையைக் குறித்து முதலில் பெரும் வருத்தம் இருந்தாலும் இறைவன் எங்களுக்கு வழங்கிய மிகப்பெரிய பொக்கிஷம் முஹம்மது ஈஸா என அவரது பெற்றோர்கள் இப்போது கூறுகின்றனர்..

வல்லோன் அல்லாஹ் முஹம்மது ஈஸாவுக்கு நீண்ட ஆயுளையும், 

உடல் ஆரோக்கியத்தையும், 

சரளமாக குர்ஆன் ஓதும் பாக்கியத்தையும் வழங்கியருள்வானாக.. ஆமீன் யா றப்பல் ஆமீன்..

No comments: