குழந்தைகளை
எப்படி எளிதில் படிக்க வைப்பது...?
"வாழ்க்கையில் நாம் சந்திக்கிற ஒவ்வொரு
பிரச்சனைக்கும் ஒரு தீர்வு மட்டும்
இருப்பதில்லை. எல்லா வற்றிற்கும் மாற்று
தீர்வுகள் உண்டு. அந்தத் தீர்வை
நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். " இது ஒரு பொறியாளராக,
எனது அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.
குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது
என்பது இன்றைய அம்மாக்கள் சந்திக்கும்
சிக்கல்களில் ஒன்று. அது எவ்வளவு
சிரமம் என்பது சொல்லிக் கொடுக்கிற
வங்களுக்கு தான் தெரியும்.
" படிக்கவே மாட்றாங்க..."
" நான் சொல்லிக் கொடுத்தா
படிக்க மாட்டிக்குரா... வேற யாராவது சொல்லிக்
கொடுத்தாங்கன்னா படிக்கிறா... "
" குழந்தைங்க படிக்கிறார்களோ இல்லையோ நாம படிக்க
வேண்டியது இருக்கு... அவங்க படிச்சு முடிக்கிற
வரைக்கும் கூடவே உட்கார்ந்து இருக்க
வேண்டியதிருக்கு... "
இவையெல்லாம்
எனது மகளின் பள்ளி whatsapp குரூப்
களில் உள்ள அம்மாக்களின் உரையாடல்கள்
மற்றும் டியூசன் சென்டர்கள் பற்றிய
விசாரிப்புகள்... எல்கேஜி யுகேஜி போன்ற
கிண்டர் கார்டன் வகுப்புகளுக்கு கூட
டியூஷன் சென்டர்களுக்கு செல்வதை காண முடிகிறது.
சிறுவயதிலேயே டியூஷன் சென்டர்கள் அனுப்புவது
குழந்தைகளுக்கு தேவையற்ற சுமை என்பது என்
நிலைப்பாடு.
என்னுடைய இரண்டாவது குழந்தை கருத்தரித்ததில் இருந்து
முதல் குழந்தைக்கு நான் இதுவரை கொடுத்த
கவனம் குறைய தொடங்கியிருந்தது. என்னுடைய
கற்பகால உடல் நலம், வேலை,
குழந்தை வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு, சமையல்,
பிரசவம் மற்றும் அதன் பிறகான
பராமரிப்புகள்... இப்படி எல்லாவற்றையும் சமாளிப்பது
என்பது கொஞ்சம் கடினம் அல்ல;
நிறைய... கடந்த இரண்டு வருடங்களாக
என்னுடைய தூக்கம் முதல் சாப்பாடு
வரை அது பாதித்திருக்கிறது...
இதில் என் முதல்
குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க
நேரம் ஒதுக்குவது என்பதெல்லாம் கடினம். ஆனாலும், தேர்வுக்காக
படிக்க வைக்கணுமே. என்ன செய்வது? என
யோசிக்கையில்... Visual
learning Method நினைவில் வந்தது.
நான் என்னுடைய பள்ளி
கல்லூரி களில் தேர்வுகளுக்காக எப்படி
நோட்ஸ் எடுத்து படிக்க கற்றுக்
கொண்டேனோ அதை என் குழந்தைக்கும்
முயற்சி செய்யலாம் என நினைத்தேன். இரண்டு
மணி நேரம் செலவழித்து இதையெல்லாம்
உருவாக்கி, குழந்தை
வழக்கமாக படிக்கும் இடத்தில் ஒட்டி வைத்திருந்தேன்.
இதை தவிர என் மகள்
கூடவே உட்கார்ந்து எனக்கு சொல்லிக் கொடுக்க
நேரமில்லை வழக்கம் போல்.
பொதுவாகவே, குழந்தைகள் visual ஆக பார்ப்பதை எளிதில்
கற்றுக் கொள்வார்கள். அதுதான் இங்கு concept. குழந்தைகளின்
கூடவே உட்கார்ந்து படி.. படி.. என
டார்ச்சர் செய்வதை விட இது
எளிதாக இருக்கிறது. கடந்த முறை நடந்த
தேர்வில் இந்த முயற்சியால் நல்ல
பலன்.
Yes... It works
for my child...
Ashika Imthiyaz
No comments:
Post a Comment