Monday, February 27, 2023

எப்படி எல்லாம் தேர்வுகள் தரும் அழுத்தங்களை கையாளலாம்...? (Part 2) /Ashika Imthiyaz

 




எப்படி எல்லாம் தேர்வுகள் தரும் அழுத்தங்களை கையாளலாம்...?

(Part 2)

     பெரும்பாலான சமயங்களில் மதிப்பெண்கள் தான் நம்முடைய Parenting capability யை பெற்றோர்களாகிய நாம் எண்ணிக் கொள்கிறோம். பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால், பிள்ளையை சரியாக வளர்க்கவில்லையோ என்று எண்ணி நம்முடைய பயம், நம்முடைய மன அழுத்தம், நம்முடைய insecurity எல்லாவற்றையும் குழந்தையின் மேல் நம்மை அறியாமலேயே திணித்து விடுகிறோம்.

குழந்தைகளை எப்படி எளிதில் படிக்க வைப்பது...?/Ashika Imthiyaz


 \Ashika Imthiyaz


குழந்தைகளை
எப்படி எளிதில் படிக்க வைப்பது...?

    "வாழ்க்கையில் நாம் சந்திக்கிற ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒரு தீர்வு மட்டும் இருப்பதில்லை. எல்லா வற்றிற்கும் மாற்று தீர்வுகள் உண்டு. அந்தத் தீர்வை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும். " இது ஒரு பொறியாளராக, எனது அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்.

     குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பது என்பது இன்றைய அம்மாக்கள் சந்திக்கும் சிக்கல்களில் ஒன்று. அது எவ்வளவு சிரமம் என்பது சொல்லிக் கொடுக்கிற வங்களுக்கு தான் தெரியும்.

    " படிக்கவே மாட்றாங்க..."

    " நான் சொல்லிக் கொடுத்தா படிக்க மாட்டிக்குரா... வேற யாராவது சொல்லிக் கொடுத்தாங்கன்னா படிக்கிறா... "

    " குழந்தைங்க படிக்கிறார்களோ இல்லையோ நாம படிக்க வேண்டியது இருக்கு... அவங்க படிச்சு முடிக்கிற வரைக்கும் கூடவே உட்கார்ந்து இருக்க வேண்டியதிருக்கு... "

குழந்தைகள சமாளிக்கிறது

 


Ashika Imthiyaz

குழந்தைகள சமாளிக்கிறதுல ரொம்ப கஷ்டமான பருவம்னா... ஒன்றும் முதல் மூன்று வயதிலான Toddler குழந்தை பருவம் தான். இந்த பருவத்தில் குழந்தைங்களோட வளர்ச்சியும் மிக வேகமாக இருக்கும். 

அவங்க குறும்புத்தனங்களும், பிடிவாதங்களும், சேட்டைகளும் ஒரு பக்கம் ரசிக்க வைத்தாலும்... அதோட இன்னொரு பக்கம் ஒண்ணு இருக்கு. பொறுமையோட எல்லைக்கே கூட்டிட்டு போய் காட்டுவாங்க...

சாப்பிடுவதில் இருந்து... தூங்குறது... விளையாடுறது... இப்படி எல்லாமே போராட்டமா தான் போகும். குழந்தைக்கு மட்டுமல்ல; குழந்தையோட கூட இருக்கிறவங்களுக்கும். காலையில வேலைக்கு போயிட்டு ஈவினிங் வரவங்களுக்கு இதெல்லாம் புரிய வாய்ப்பே இல்லை. அதுவும் தனியா குழந்தையாக கவனித்துக் கொள்வதென்றால் அதெல்லாம் சொல்லில் அடங்காதவை.

Parenting is Hard... எந்த அளவுக்குனா... சரியா தூங்காம, சாப்பிடாம... Food poison ஆகிற அளவுக்கு... தூக்கம் குறைந்து blood pressure அதிகமா ஆகுற அளவுக்கு... இரண்டு மூன்று நாள் தொடர்ந்து தலைவலி வர அளவுக்கு... இன்னும் நிறைய... இருக்குறதுலையே ரொம்ப கஷ்டமான வேலை என்றால்... இரண்டு வயது குழந்தைக்கு அம்மா வா இருக்குறது தான். 

முன்னாடி பெண்கள் லாம் அதிகமா குழந்தை பெத்து கிட்டாங்க. இப்போ அம்மா இருக்காங்க அம்மம்மா இருக்காங்க... கிர reels லாம் வேடிக்கை பார்குறவங்களுக்கு காமெடி யா தெரியுது. வேலைக்கு போகாம குழந்தைகள் கூடவே இருந்து பார்த்தா... புரியும். 

Yes... Feeling very tired, exhausted, desperated, bone-tired, worn out, and it goes on... 

When you are tired of... " Being MOM"

Parenting thoughts


தபசி உரை | நிஷா மன்சூர் - பின் தங்கிய படையணியிலிருந்து ஓர் அபயக்குரல்

'உஹத் போர்' எனப்படும் தற்காப்புப்போர் /அப்துல்கையூம்

 




'உஹத் போர்' எனப்படும் தற்காப்புப்போர் நடந்த இடத்தில்தான் இப்போது நான் நின்றுக் கொண்டிருந்தேன். உம்ரா, ஹஜ் செல்லும் பயணிகள் இந்த இடத்தைக் காணாமல் திரும்புவதில்லை.

பெருமானார் தலைமையேற்று நடத்திய உஹத் போர் இஸ்லாமியச் சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டாவது மிகப் பெரும் யுத்தமாக கருதப்படுகிறது.

கி.பி.625-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் தேதி மதீனாவின் வடக்குப் புற எல்லையில் உஹத் மலையடிவாரத்தில் இப்போர் நடைபெற்றது. எனவே இதற்கு 'உஹத் போர்' என்ற பெயர் வந்தது.

மதீனா மாநகரம்,  மலைகள் அரணாகச் சூழப்பட்டு, இயற்கையே ஒரு பாதுகாப்பு வளையம் அமைத்து தந்திருந்தது. உஹத்போர் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பெருமானார் படையுடன் நடந்த பத்ருப் போரில் மக்கா குறைஷிகள் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்தனர். இந்த தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. பழிக்குப்பழி வாங்க சந்தர்ப்பம் எதிர்நோக்கி காத்திருந்தார்கள்.

பெருமானாரின் பிரதான எதிரியாக விளங்கிய அபூஜஹ்ல் வாளால் அடித்து வீழ்த்தப்பட்டது பத்ருப் போரில்தான். எனவே அதற்கு பழி தீர்க்கும் வகையில் மதீனாவுக்கு குறைஷிகள் படை எடுத்தார்கள். பெருமானாரைக் கொல்ல வேண்டும், மதீனாவைக் கைப்பற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

புனித ஷஃபான் மாதத்தின் சிறப்பு

நபிகள் நாயகம் சில நேரங்களில் சில மாற்றங்களை பதிவு செய்வார்கள்

G.M. Akbar Ali speech | களம்புதிது விருது வழங்கும் நிகழ்வு - 2023 | ஜி.எ...

Monday, February 20, 2023

நிதானமும் சகிப்புத்தன்மையும் வெற்றிக்கு வழி

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் Dr. சரவணன் கண் மருத்துவர்

 


அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில்  Dr. சரவணன் கண் மருத்துவர் 

கண் மருத்துவர்  Dr. சரவணன் ( Dr Saravanan, Srinivasapuram East, Mayiladuthurai.)அவர்கள்  இறைவன் அருளால் தனது சேவையை  அன்புடன் ,மகிழ்வுடன் தருவதில்  நிறைவு கொள்கின்றார்

மயிலாடுதுறை சுற்று வட்டார மக்களுக்கு டாக்டர் மிகவும் நேசமானவர்.

மருத்துவம் இவருக்கு ஒரு சேவையானது,

மனிதனை மனிதனாக மதிக்க கூடிய ஒரு நல்ல மனிதர் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் தனது மருத்துவ பணியை எல்லாமக்களுக்கும் ஒரே மாதிரியாக  தன் மனம் நிறைவு அடைய ஆய்வு செய்து சிறந்த முறையில் எல்லோரிடமும் அன்பாக ,பண்பாக பரிவோடு சிகிழ்ச்சை தருபவர்  

அவரை வாழ்த்துவதில் நாம் மிகவும் மகிழ்வடைகின்றோம்

இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை  பிரார்திக்கின்றோம்

எனது ஆரோக்கியம்,

வளம்,வளர்ச்சி நலனில்

மிகுந்த அக்கறை கொண்டவர்.

எல்லோரும் போற்றும்

அற்புத கண் மருத்துவர்  Dr. சரவணன் அவர்கள்  

அவரது மனைவி  Dr. M .அனுஷா தேவி அவர்களும் ஒரு சிறந்த மருத்துவர் 



இருவரும் ஒரே இடத்தில் சரவணன் கண் மருத்துவ மனையில் பணி செய்கின்றனர்  

Sunday, February 19, 2023

துவா கேட்டல் Dua

On the way to Indians visa and consular service..in Angel, London. UK ..

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன.

இஸ்லாம் என்பது

இஸ்லாத்தில் புனித இரவுகள் மற்றும் புனிதமிக்க பள்ளிவாசல்கள்.

பள்ளிவாசலோடு தொடர்பு இருக்க வேண்டும்

எங்கள் மீதும் அடியார்கள் மீதும் ஸலாம் உண்டாகட்டும் / புனித பள்ளிவாசல்கள்...

லைலத்துல் கத்ர் (கண்ணியமிக்க இரவு)

MSK Saved 10,00,000 Rupees of Poor Family | ஏழையின் 10,00,000 ரூபாயை பாதுகாத்த MSK |

 

Sunday, February 12, 2023

அவர் ஓதும் குரலையும் வரிகளையும் கேட்டால் நீங்கள் மாறி விடுவீர்கள்

*நாசிக்கண்டார் இது எல்லாம் இன மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் ஒரு உணவாகும்

 மலேசியாவை கலக்கும் *நாசிக்கண்டார்*உணவின் பிறப்பிடம் பினாங்காக இருந்தாலும். இதன் செய்முறை தமிழகத்தை சார்ந்தது. இதை சுமார்-150 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்தின், இராநாதபுரம் மாவட்டம், சித்தாரக்கோட்டையில் இருந்து வந்தவர்களே பினாங்கில் அறிமுகப்படுத்தினர். மலாய் மொழயில் நாசி- என்றால்- சோறு, கண்டார் என்றால் அவர்கள் தோளில் சுமந்து வரும் கூடை. இந்த உணவு வேற ஒன்னுமில்லைங்க.., சோற்றில்- இறைச்சி, கோழி, மீன், கனவாய் போன்ற குழம்புகளை ஒன்றாக ஊற்றி மேற்காணும் அசைவ உணவுகளை தமக்கு பிடித்தமானதையும் எடுத்துக்கொண்டு.., கோபிஸ், வெண்டிக்காய் என்று ஏதாவதொரு காய்கறியையும் சேர்த்து சாப்பிடுவது தான் நாசிக்கண்டார். இந்த உணவகங்கள் மலேசியா முழுவதிலுமே அதிகமாக இருக்குங்க, முக்கியமா பினாங்கிலும், அதை சுற்றி உள்ள நகரங்களிலும் இந்த உணவகங்கள் மிக அதிகம். கோலாலம்பூரில் சோகோ மால் இருக்கும் ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் ரோட்டில் இரண்டு நாசிக்கண்டார் உணவகங்கள் இருக்கின்றன. இங்கே மதிய உணவு நேரத்தில் மக்கள் வரிசை கட்டி நிற்பதை பார்க்கலாம். இதே பெயரில் சென்னையிலும் இந்த உணவகங்கள் உண்டுங்க. இது எல்லாம் இன மக்களாலும் விரும்பி சுவைக்கப்படும் ஒரு உணவாகும்


மலேசியாவின் பிரபல 'நாசி கண்டார்'

 

Wednesday, February 8, 2023

இஸ்லாம் பற்றி மிகவும் தவறாக செய்திகள் பரப்பப்படுகின்றன,

#கண்_தெரியாது_நடக்க_இயலாது, #ஒழுங்காக_பேச_வராது_ஆனால் #குர்ஆன்_ஓதுவதில்_உலக_சாதனை #படைத்த_தமிழர்

 #கண்_தெரியாது_நடக்க_இயலாது, #ஒழுங்காக_பேச_வராது_ஆனால் #குர்ஆன்_ஓதுவதில்_உலக_சாதனை #படைத்த_தமிழர் 

#முஹம்மது_ஈஸா...

தமிழில்✍️:M.சிராஜுத்தீன் அஹ்ஸனி. 

திருவிதாங்கோடு.. 

7598769505

இது முஹம்மது ஈஸா. 

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். 

துபாயில் வசிக்கின்றார். 

பிறக்கும் போது பலவிதமான குறைபாடுகளுடன் பிறந்தவர். 

கண் தெரியாது, 

கருத்துப் பரிமாற்றம் செய்ய இயலாது. 

சொந்தமாக நடக்க இயலாது. 

ஆனால் அவருக்கு குறைபாடு இல்லாத ஒரு விஷயம் உண்டு. 

அது பரிசுத்த குர்ஆன் ஆகும். 

துபாயில் நடைபெறுகிற குர்ஆன் போட்டியில் பலதிலும் கலந்துள்ளார்.

ஏராளமான போட்டிகளில் பங்குபெற்ற முஹம்மது ஈஸா நிறைய பரிசுகளை அள்ளிச் சென்றுள்ளார்..

இறுதியில் உலக ரிக்கார்டும் முஹம்மது ஈஸாவைத் தேடி வந்து இருக்கிறது.

தமிழ்நாடு தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் ஹாதி மற்றும் ஹலீமுந்நிஸா தம்பதியரின் மகன் முஹம்மது ஈஸா.. 

நான்காம் வயதில்தான் மகனுக்கு குர்ஆன் மனப்பாடம் செய்வதற்கு நல்ல திறமை இருக்கிறது என்பதை பெற்றோர்கள் கண்டறிகிறார்கள்.

ரமளானில் சுற்றுவட்டார பள்ளிகளில் தராவீஹ் தொழுகையில் குர்ஆன் ஓதுவதை கேட்கும் முஹம்மது ஈஸா அதைப்போல வீட்டிலிருந்து ஓதுவதை பெற்றோர்கள் கவனிக்கின்றனர். 

உடனே அவருக்கு யூ டியூப் மூலம் குர்ஆன் கிராஅத்தை கேட்பதற்கு வசதி செய்து கொடுக்கின்றனர்... 

சகோதரிகளான சுமைய்யாவும், 

ஆயிஷாவும் தம்பி முஹம்மது ஈஸாவுக்கு பக்கபலமாக இருக்கின்றனர். 

கல்வி கற்க பள்ளிக்கூடத்திற்கோ, மதரசாவுக்கோ அவரால் செல்ல இயலாது. 

இடைவிடாமல் நீண்ட நேரம் குர்ஆன் ஓதும் முஹம்மது ஈஸா பல காரிஉகளின் கிராஅத்தையும் அழகிய விதம் ஓதுகிறார்

அல் மனார் குர்ஆன் சென்டர் உட்பட

பல்வேறு ஸ்தாபனங்கள் ஏற்பாடு செய்த நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார். 

இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது ஐந்தாம் வயதில் உம்ரா நிறைவேற்றும்  வேளையில் மக்கா ஹரமில் வைத்தாகும்.

இவர் குர்ஆனை ஓதுவதைக் கேட்டு பாதுகாப்பு உட்பட பிரத்யேக வசதி ஏற்பாடுகள் செய்ய ஹரம் அதிகாரிகள் தயாராகினர்.. 

மகனது ஆரோக்கிய நிலையைக் குறித்து முதலில் பெரும் வருத்தம் இருந்தாலும் இறைவன் எங்களுக்கு வழங்கிய மிகப்பெரிய பொக்கிஷம் முஹம்மது ஈஸா என அவரது பெற்றோர்கள் இப்போது கூறுகின்றனர்..

வல்லோன் அல்லாஹ் முஹம்மது ஈஸாவுக்கு நீண்ட ஆயுளையும், 

உடல் ஆரோக்கியத்தையும், 

சரளமாக குர்ஆன் ஓதும் பாக்கியத்தையும் வழங்கியருள்வானாக.. ஆமீன் யா றப்பல் ஆமீன்..

ஒழுக்கம், வாக்குறிதி (சொன்ன சொல்லில் உறுதியாக நிற்றல்) நாணயத்தின் இரு பக...

நம்பிக்கையில் உறுதி வேண்டும்.

தொழிலதிபர், கொடை வள்ளல் ஒயிட்ஹவுஸ் மர்ஹும் அப்துல் பாரி அவர்களுக்காக பிர...

Hadith Psychology -- 01 / நபிமொழி உளவியல் -- 01

Wednesday, February 1, 2023

நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் அவசியம் நன்மையின் பக்கம் அழைப்பதும் கடமை.

கருத்த நிறம் ஆனால் வெள்ளை மனது

சந்தேகம் குழப்பம் வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள்.

இறையச்சம்

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதை தடுப்பது எது?

இறை நேச பெண்மணி ராபியத்துல் பஸரியா(ரஹ்) 

(Republic)  குடியரசு அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பது.

மயிலாடுதுறை டாக்டர் ராமமூர்த்தி பேத்தி திருமணம்.

3 Principles of Success / 3 வெற்றி விதிகள்