அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் சிவா மயிலாடுதுறை(Sivaa
Senior PeopleSoft Consultant at IBM, Manager - Peoplesoft HRMS at Accenture and Senior Quality Analyst at Northrop Grumman Corporation
Studied at AVCC
Graduated in 1990
Lives in Washington D.C.
From Mayiladuthurai, India
https://www.facebook.com/sivaa.kumar.5
From Mayiladuthurai, India
https://www.facebook.com/sivaa.kumar.5
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.சிறந்த ,மனிதநேயம் பெற்ற மிக சிறந்தவர்கள் வரிசையில் சிவா மயிலாடுதுறை(Sivaa Mayiladuthurai)அவர்களும் ஒருவர்! "
நான் நேரில் சந்தித்த முகநூல் நட்புகள் அன்பை மட்டுமே தந்தவர்கள் பாசத்தை காட்டிய மிக சிறந்தவர்கள் வரிசையில் சிவா வும் ஒருவர்! "
நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்
இவரை வாழ்த்தி மகிழ்வதில் நாம் மகிழ்வடைகின்றோம் .
இறைவன் அருளால் தொடரட்டும் இவரது சேவைகள் .
இறைவன் அவருக்கு நீடித்த ஆயூளை கொடுத்து அருள இறைவனை பிரார்திக்கின்றோம்
அன்புடன்
மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை
கடனில்லாத வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை
கடுமையான உழைப்பும் நல்ல எண்ணமும் வாழ்க்கையில் முன்னேற்றம் தரும்.
உண்மை நேர்மை
அன்பு கருணை
கோபம் சாந்தம்
வீரம் தீரம்
வேகம் விவேகம்
அனைத்தும் கலந்த
கலவை இந்தப்
பாசக்கார நண்பர் சிவா!
தன் நண்பர்களின்
நலனில் அதிக அக்கறை
அடிக்கடி அழைத்து
நலன் விசாரிக்கும் பண்பு
நண்பர்கள் வெற்றியைக்
கொண்டாடும் குழந்தை!
துவண்டு விட்டால்
கூடவே இருந்து
ஆறுதல் அளிக்கும் அன்னை!
இவருக்கு பிடித்தவர்கள்
பாக்கியம் செய்தவர்கள்
அவர்கள் தும்மினால் கூட
இமயத்தில் கொடி
நாட்டி விட்டார்கள்
என உறுதியாக கூறி
அட்டகாசம் செய்யும்
அதிரடி நண்பன்!
சிவனின் பெயரை
சுமந்து கொண்டே
யார் சிவன் என தத்துவம்
பேசும் அறிவு ஜீவி
ஒருகாலத்தில் தவறாமல்
பிரதோச வழிபாட்டில்
சிவன் இவர் தோள்களில்
வலம் வந்தவர்.
அதன் பிரதிபலனாக
கல்லூரியில் கண்சிமிட்டிய
காதலி தாராவே
அன்பு மனைவியானார்!
தான் பிறந்த ஊரையே
தன் பெயரில் இணைத்தவர்
தன்னுடன் இணைந்த
தாராவை எப்படி
கொண்டாடி மகிழ்வார்
தோகை விரித்தாடிய
சிவா என்ற ஆண் மயிலின்
ஆட்டத்தில் மயங்கிய
பெண் மயில் தாரா
கல்லூரிப் பருவத்தில்
மயிலாடுதுறை இரயில்
நிலையத்தை ஒவ்வொரு முறைக் கடக்கும் போது
குதித்து விட நினைப்பாராம்!
இன்று அந்த காதல்
பெருமடங்கு பெருகி
நதி போல் ஓடுகின்றது!
வருங்காலத்தில்
உலகிற்கே பெருமை
சேர்க்க இருக்கின்ற
அன்பு மகள் புகழ்!
மகளின் ஒவ்வொரு அடியிலும நொடியிலும்
பெருமை கொண்டு
இந்த அப்பா செய்யும்
அலப்பறைகள் அப்ப்பபா!
புகழ்
அப்பாவின் அலப்பறைகள்
என தனிப்புத்தகமே
போட வேண்டும்!
இந்த பாசக்கார சிவாவைப்
பெற்றெடுத்த பெற்றோர்கள்
அன்பின் மொத்த வடிவம்
அவர்களின் அன்பான
விருந்தோம்பலில்
நான் கரைந்ததும் உண்டு.
மயிலாடுதுறையின் ஒவ்வொரு தெருவிலும்
வசிக்கின்றவர்கள்
அனைவரிடமும் அன்பும்
அக்கறையும் கொண்டவர்
இந்த பாசக்கார சிவா!
தான் பிறந்த ஊரின்
பெருமையை வானளவு
உயர்த்தத் துடிக்கும் சிவா!
தன்னை உதய சூரியனின்
தொண்டன் என்பதில்
பெருமகிழ்ச்சி அடைவார்
களப்பணியாற்றுவது ஒன்றே
தன் கடமை என்ற
உறுதி மொழியை ஏற்றவர்!
பொது நலனில் அக்கறை
தமிழர்களின் வாழ்வாதாரத்தை
மேம்படுத்துதல்
கல்வி சுகாதாரத்தின்
தரத்தை உயர்த்துதல்
என உயரிய கருத்துக்கள்
கொண்ட சிவாவின்
இலட்சிய கனவு
நிறைவேற நான் அந்த
மயிலாடுதுறை மயுர நாதரின்
அருட்பார்வை சிவாவிற்கு
முழுவதுமாக கிடைக்க
வேண்டுகின்றேன்!😀
இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்!
அன்புடன்,
தேவி
சிவா மயிலாடுதுறை(Sivaa Mayiladuthurai) அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
உண்மை நேர்மை
அன்பு கருணை
கோபம் சாந்தம்
வீரம் தீரம்
வேகம் விவேகம்
அனைத்தும் கலந்த
கலவை இந்தப்
பாசக்கார நண்பர் சிவா!
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً
"Allah will reward you [with] goodness."
==============================
ஆஹா
மிக்க நன்றி அய்யா
என் மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பிற்கு நன்றிகள் பல.
உங்கள் ஆசிகள் எனக்கும் என்றும் வேண்டும்.
எனக்கு மிகப் பெரும் கனவுகள் இருக்கிறது.
அடுத்த முறை சந்திக்கும் பொழுது நிறைய சொல்கிறேன். அவை அனைத்தும் நிறைவேற உங்கள் ஆசிகள் வேண்டும் அய்யா.
உங்கள் அன்பிற்கும், நட்பிற்கும் நன்றிகள் பல பல.
வாசிங்டன்
No comments:
Post a Comment