Noor Saffiya
💞 இறைசிந்தனை
💞"சஞ்சரி கிராமத்தில்"
பாடல் வரிகள்: நூர் ஷஃபியா
காதிரியா
பாடியவர் : ஃபரீதா
(சிங்கர்)💞
➖🌹
சஞ்சரி
கிராமத்தில்
சஞ்...சரித்தீர்களே!
சர்தார்
பிறப்புபோல்
சிரம்தாழ்த்தி
பிறந்தீர்களே
__________ ________
மாஹ் நூர் கியாஸுதீனின்
நூராகவே!
மா....நபிவரமாய் உலகினில் குருவானீர்களே!
தஸவ்வஃப்
விளக்கம் அளித்தீரே!
தரிசான
நெஞ்சத்தில் விதைத்.. தீரே!
விலாயத்தினால்
அஜ்மீரே மிளிர்கின்றதே!
தினம்....
வியக்க
வைக்கும் காரண ஒளி(லி)யாகின்றீரே!
________ ________
மஜ்மஉல்
பஹ்ரெனும்
ஓர் இடத்தினிலே!
மூஸாஹிழ்ருநபி
சந்திப்பு
அமைந்ததுபோல்!
ஷெய்க்
உஸ்மானுல்ஹாரூனி
சந்திப்பையே_
இறையும்!
ஷெய்காய்
ஜொலித்திட பணித்தான் அங்கே!
ஜிஹாதுன்
நஃப்ஸின் வெற்றியுமே!
ஜீவனில்
மஃரிஃபதுல் இலாஹானதே!
தேவாரம்
நெருப்பே என்றவர்க்கு!
ஆதாரம்
தான்செய்து காட்ட!
உண்மை ஹக் அறிந்ததும்
தீன்முழக்கம்
ஆனதே!
கிரேக்க...!
ஞானகலை
ஃபல்ஸஃபாவின் மாமேதையாம்!
லியாவுதீன்
மூலம்
பல்ஹ் நகரம்
ஈமான் விதைத்தீரே!
________ __________
ஷெய்க்
உஸ்மானுல் ஹாரூனீ வாக்கினையே!
ஷெய்க்
காஜா ஏற்றார்கள் தன் சிரசினிலே!
மூன்று
பண்பினை ஏற்பவர்
நிலையானது!
முவ்...வுலகில் விலாயத் என
பணித்தீர்களே!
*1.* பஹ்ர்
போல் வழங்கி
பஹ்ராய்
நீ வா...ழ்!
*2.* பூமி
தன்மைபோல் நீ
பணிந்து
வா..ழ்!
*3.* ப்ரகாச
சூர்ய ஒளிபோல்!
பாகுபாடின்றி பண்புடனே
நீ வா..ழ்!
படைத்த
படைப்பின்
புனிதம்
அறிவாய் இப் பண்புகளினாலே!
________ __________
நூர் உம்மத்.! பாவின் பாடலினை மகிழ்வுடனே!
நுகர்ந்து
பாடும் தாசன் துஆ களையும்
ஏற்பீர்களே!
ஜீவன் உள்ளே ஞானகலையும்
ஜீவ நதியாய் குருதியில் பாய!
ஜதி ஒலியில் ஜெயமாக்கி ஐக்கியமாகவே!
எம்மை,
ஜென்னாவரை
காக்கும்
நல்வரமாக்குவாய்!
🖋நூர்ஷஃபியா காதிரியா
No comments:
Post a Comment