மதகுரு
(கொஞ்சம்
எங்க ஊரு
கோட்டாறு
விவகாரம்)
இஸ்லாத்தில்,
மதகுருமார்கள்
இல்லை.
எவ்வளவு பெரிய ஞானி
சூஃபி,
மேதை,மந்திரம், தந்திரம்
தெரிந்தவன்
என்றாலும் ஒரு
முஸ்லிம்
தன்னை கடவுள் என்றோ
பகவான்
என்றோ பிரகடனம் செய்ய
முடியாது.
அது கடும் குற்றம்.அது
போல் மத குருக்களுக்கும் இடம்
இல்லை.
அது போலவே, ஒரு சக
முஸ்லிம்
மற்றொரு
முஸ்லிமை பார்த்து
நீ இப்போது முஸ்லிம் இல்லை
என்று சொல்ல இயலாது. தவறை
சுட்டிக்
காட்டலாமே தவிர, பெரிய
தீர்ப்புக்கள்
வழங்க முடியாது.
அதற்கு
இஸ்லாமிய சட்டத்தில்
இடம் இல்லை.
இமாம்,
என்றால் தொழுகைக்கு
தலைமை தாங்குபவரை குறிக்கும்.
ஆலிம்,
என்றால் மார்க்க அறிஞர்
என்று அர்த்தம். உஸ்தாத் என்றால்
ஆசிரியர்
என்று பொருள். ஹாபிஸ்
என்றால்
குர்ஆனை மனனம்
செய்தவரை
குறிக்கும் சொல்.
மவுலானா
அல்லது மவுலவி
என்றால்
மாஸ்டர் என்று பொருள்.
அல்லாமா
என்றால் பேரறிஞர்
என்று சொல்லலாம். கதீஃப்
என்பது
ஜூம்மா பிரசங்கம்
நிகழ்த்துபவரை
குறிக்கும் சொல்.
காஃதி என்றால் ஜட்ஜ் ஆகும்.
உலமா என்றால் ஜூரிஸ்டை
குறிக்கும்
சொல்லாகும்.
முஜ்தாஹித்,
என்றால் இஸ்லாமிய
சட்ட வல்லுநர் என்று பொருள்
முத்தாவா,
என்பது மார்க்க
விசயங்களை
கண்காணிப்பவர்
என்று பொருள்.முஹ்தாஸிப்,
என்றால் இன்ஸ்பெக்டர்.
சரியத்,
என்ற இஸ்லாமிய சட்டம்
திருத்த
இயலாதது. பிஃக்ஹ்,என்ற
மனித தீர்ப்பை திருத்தலாம்.
இதற்கு
‘இஜ்திஹாத்’ என்ற
சட்ட அறிவு வேண்டும். இந்த
நிபுணரே
‘முஜ்தாஹித்’ ஆவார்.
தேர்ந்த
ஞானமும் பிக்ஹ்
என்ற
ஆழ்ந்த
சட்ட அறிவும் உள்ளவரை
பகீஹ் என்று அழைப்பர்.காரணம்
ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு
எப்படி
தீர்ப்பு தருவது என்ற
ஞானம் இவருக்கு அதிகம்.
மார்க்க
சட்ட ஞானம்...
எது வாஜிப் அதாவது கடமை
எது ஹராம் அல்லது பாவம்
எது மன்துப் -அநுமதிக்கப் பட்டது
எது மக்ரூஹ் - அநுமதியற்றது
எது முபாஹ் அல்லது பிரச்னை
இல்லாதது,
மஸ்லஹா என்ற
சமூகம்
சார்ந்த பிரச்னையா
அல்லது
குறிப்பிட்ட விவாத
விசயத்தின்
‘அடிப்படை
நோக்கம்’
அறிந்து
அதற்கு சரியாக
தீர்வு
காணும் இஸ்திஹ்சான்
என்ற ஆழ்ந்த சட்ட ஞானம்
இது போன்ற தீர்ப்பு தர
அடிப்படை
தேவையாகும்.
மேலும்
இஜ்திஹாத் என்ற
சுதந்திர
சிந்தனையும் தீர்வு
காணும்
நுண்ணறிவும் தேவை.
இந்த குணங்கள் தீர்ப்பு
சொல்பவரிடம்
இல்லை
என்றால்
இந்த திறமைகள்
கொண்ட
இஜ்மா என்ற ஒரு
கூட்டு
அறிஞர் குழுமத்தை
அநுகி மார்க்க ஆலோசனை
பெற்று
தீர்ப்பு வழங்க வேண்டும்.
இந்த சிறப்பு தகுதி எதுவும்
இல்லாமல்
ஒரு சிறிய சமூக
சம்பவத்தை
பெரிது படுத்தி
ஒரு சமுதாயத் தலைவரை
மத நீக்கம் செய்வதும் பின்னர்
மதத்தில்
இணப்பதும் இஸ்லாமிய
சட்டம்
சொல்லும் நீதியா என்பதை
இஸ்லாமிய
சட்டம் அறிந்தவர்கள்
சொன்னால்
சிறப்பாக இருக்கும்.
முகாலித்
என்றால்
அடிப்படை
முகாந்திரம்
இல்லாமல்
தான் தோன்றித்தனமாக
தீர்ப்பு
வழங்குவது.
one who is not an expert
in matters of islamic laws
are forbidden to do so
in matters of belief
(usulu-d-din)
மதநல்லிணக்கம்
குமரி மண்ணில் பிறந்த
சொல்லாகவே
படுகிறது.
எனவே இதில் பிறர் மதம்
மட்டும்
அல்ல, மனிதர்
மனமும்
நோகாமல்
காப்பது மிகவும் அவசியம்.
No comments:
Post a Comment