Noor Saffiya
💞இறைசிந்தனை
உழைப்பே
உத்தமரே!
காலை பொழுது
வருவது
நித்தமே!
காப்பதற்கே
உலகில்
உழைப்போமே!
கண்மணி
ஹபீபின்
வருவாயாலே!
காலமெலாம்
ஹலாலாய்
வாழ்வோமே!
மாலை பொழுதோ
வருவது
சித்தமே!
மனையினில்
வந்து
மகிழ்வோமே!
மஹ்மூதர்
அழகின்
வழியிலே!
மண்ணும்
நம்மை
விரும்புமே!
குடும்ப
வாழ்வியல்
தன்மையே!
கொண்டு
செல்வதே
கடமையே!
குதுகொலிக்க
இதய
அம்சமாய்!
கோமானருளால்
நாம்
வாழ்வோமே!
செடியென
நட்டும்
சிற்றின்பமே!
கொடியென
படர்வது
பேரின்பமே!
சோலையாய்
ஆவது
சுகந்தமே!
சந்தோஷ
காய்,கனி,
பூவும்
பெறுவோமே!
ஏந்தலர்
வாழ்வுபோல
முயற்சியும்!
ஏகோனின்
ஏற்றம்காண
பயிற்சியும்!
இதய திக்ர் ஓசையில்
மலர்ச்சியும்!
இயம்பிடுந்
சலவாத்தின்
குளிர்ச்சியும்
உம்மத்
புகழ்ந்தே
வாழ்த்தும்!
உவகை பூத்திடுமே
பூரிப்பும்!
உதய விடியல் நேரம்
உதிப்பும்!
உன்னத வந்தனமாய்
பிறப்பும்!
மீலாதின்
வருகைக்கு
மெருகூட்டுதே!
மன்னர்
மஹ்மூதரின்
மகிமையே!
முத்து
நபியே வருகவே
முஹம்மதே!
மொத்தமாய்
எம்மில்
மிளிரவே!
பெறுவோம்
நாமும்
பேரின்பமே!
பெற்றதும்
நன்மாராயம்
அடைவோமே!
ரபியுல்
அவ்வலின்
நாளிலே!
ராஹத் அனைத்திலும்
பெறுவோமே!
ரப்புல்
ஆலமீனின்
கிருபையால்!
ரஹ்மதுல்
ஆஷிகீன்
கருணையால்!
நல்லடியார்களின்
துஆபரக்கத்தால்!
நாடிய நல்ல _ஹாஜத்_
நிறைவேறுமே!
அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!
ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!
ஸல்லல்லாஹு
அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்💞
🖋 நூர் ஷஃபியா காதிரியா
No comments:
Post a Comment