பாடல்: முஹம்மது மஃரூஃப்
பாடகர்: தேரிழந்தூர் தாஜ்தீன் ஃபைஜி
எம் பெருமானைப் பார்க்க
என் இதயம் அழுதிடும் பார்க்க
மன்னர் மதி முகம் பார்க்க
மகமூதர் முகமது பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
என் இதயம் அழுதிடும் பார்க்க
மன்னர் மதி முகம் பார்க்க
மகமூதர் முகமது பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
இறைவா எனக்கோர் வரம் தர வேண்டும்
இம்மை உலகில் நடை பெற வேண்டும்
இறைவா எனக்கோர் வரம் தர வேண்டும்
இம்மை உலகில் நடை பெற வேண்டும்
இதயம் எனது குளிர்ந்திட வேண்டும்
இறைஞ்சுகின்றேன் நபி பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
கண்கள் காணும் காட்சிகள் யாவும்
கண்மணி அழகுமுன் காணல் நீராகும்
கண்கள் காணும் காட்சிகள் யாவும்
கண்மணி அழகுமுன் காணல் நீராகும்
கனவில் இறைவா அனுப்பிவை நீயும்
காசீம் நபி முகம் பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
கவிதை நாளும் வடித்திட வேண்டும்
கருத்தில் நபியே மிகைத்திட வேண்டும்
காதல் அதிலே வெளிப்பட வேண்டும்
கருணை நபியினைப் பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
நாளை மறுமையில் நானும் வருவேன்
நல்லோருடனே சுவனமும் நுழைவேன்
நபியின் அருகில் நானும் அமர்வேன்
நாயனே உன் முகம் பார்க்க
பார்க்க பார்க்க
என்னிறைவா உனைப் பார்க்க
எம் நபியும் உரைத்தார் பார்க்க
மதி போல் தெளிவாய் பார்க்க
மன்னவனே வருவாய் பார்க்க
பார்க்க பார்க்க
என்னிறைவா உனைப் பார்க்க
No comments:
Post a Comment