Tuesday, November 30, 2021
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். நீடூர் அரபிக்கல்லூரிக்கான சேவை
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.
நீடூர் அரபிக்கல்லூரிக்கான சேவை
(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)
தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்.ஆவார்கள். இக்கல்லூரியின் பொற்காலமான 1945 முதல் 1955 வரை நிகரற்ற தலைவராய் விளங்கி இஸ்லாமிய கல்வித் துறையிலும், மார்க்கத் துறையிலும் அப்பெருந்தொகை ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நாம் வாழ்ந்த ஒவ்வொரு நிமிடமும் அப்பெருமகனார் இக்கல்விக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்காகவும் சிறப்பிற்காகவும் பாடுபட்டார்கள் என்று சொல்வது மிகையாகாது. எண்ணத்தாலும் எழில்மிகு சேவையாலும், பண்பாலும் பார்போற்றும் செய்கையாலும் மிஸ்பாஹுல்,ஹுதா என்னும் கல்விச் சுடரை மேலும் பிரகாசிக்கச் செய்து நாடெங்கும் ஞானஒளி பரப்பிய அப்பெருந்தலைவரின் வாழ்க்கை படித்து…
நீடூர் அரபிக்கல்லூரிக்கான சேவை.
மதரஸா மிஸ்பாஹுல் ஹுதாவின் தலைவராக அமைதியுடனும் அழகுடனும் பணி சித்து வந்த அல்ஹாஜ் அ.யாகூப் சாஹிப் அவர்கள் 1945 -ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் இறைவனடி சேர்ந்தார்கள். அவர்கள் மதரஸாவின் நிர்வாக்கியல்ஹாஜ் மௌலானா மௌலவி அப்துல் கரீம் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மூத்த சகோதரரும் ஹாஜியார் அவர்களின் அன்பு மச்சானும் ஆவார்கள். அல்ஹாஜ் யாகூப் சாஹிப்அவர்கள், தாம் நலக்குறைவுற்ற நிலையிலே ஹாஜியார் அவர்களைக் கூப்பிட்டு,மதரஸாவின் பொறுப்பை ஒப்படைத்தார்கள். தமக்குப் பிறகு மதரஸாவைப் பேணிப் பாதுகாப்பதற்கு, ஹாஜியார் அவர்கள் முற்றிலும் பொருத்தமானவர்,தகுதிப் பெற்றவர் என்று உணர்ந்தார்கள். மேலும் அக்கல்விக் கூடத்தை ஆல்போல் வளரச் செய்து பயன் சொரியச் செய்வார்கள் என்று உளமார நம்பினார்கள். அவர்களின் கணிப்பு எவ்வளவு உண்மையானது! நிதர்சனமானது! இதனிக் கேள்வியுற்ற அணைத்து மக்களும் மதரஸாவின் அங்கத்தினர்களும், அறிஞரும், ஆன்றோரும் வரவேற்றனர். ஏகமனதாக ஒரே குரலில் ஹாஜியார் அவர்களை மிஸ்பாஹுல் ஹுதாவின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.
உமது நன்மைகளாக உம்மை தொடரும் .
அப்துல் ஹக்கீம்
உமது புகழ் காலமெல்லாம் தொடரும்
உமது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் செய்த சேவைகள் ,மக்கள் தரும்
வாழ்த்துகள்
உமது நன்மைகளாக உம்மை
உமது இறப்புக்கும்
பின்னும் தொடரும் .
அடுத்த இனத்தவரை தன் உடன்பிறவாத சகோதரராக/சகோதரியாக ஏற்றுக்கொள்ளும் மனம் உம்மோடு இருந்தது
வரலாறு படைத்த மனிதரில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்
நற்செயல்களுக்கு போராடும் குணம் உங்களோடு இருந்தது
உம்மை பலர் ஜென்டில்மேன் என்று இன்னும் சொல்லிக் கொண்டிருப்பதனை நான் அறிகின்றேன்.
Monday, November 29, 2021
Friday, November 26, 2021
மதகுரு
மதகுரு
(கொஞ்சம்
எங்க ஊரு
கோட்டாறு
விவகாரம்)
இஸ்லாத்தில்,
மதகுருமார்கள்
இல்லை.
எவ்வளவு பெரிய ஞானி
சூஃபி,
மேதை,மந்திரம், தந்திரம்
தெரிந்தவன்
என்றாலும் ஒரு
முஸ்லிம்
தன்னை கடவுள் என்றோ
பகவான்
என்றோ பிரகடனம் செய்ய
முடியாது.
அது கடும் குற்றம்.அது
போல் மத குருக்களுக்கும் இடம்
இல்லை.
Tuesday, November 23, 2021
கதீஜா ரஹ்மான்
கதீஜா ரஹ்மான் அவர்கள் ஒரு சிறந்த இசைக்கலைஞர், மார்க்க பற்றுடையவர்
இவர் A.R.ரஹ்மான் அவர்களின் மகளார்
அவர் அமைதிக்கான தீவிர ஆதரவாளர் மற்றும் மனிதகுலத்திற்கு மனிதநேயத்தின் செய்தியைப் பரப்புவதற்கான ஒரு ஊடகமாக தனது இசையைப் பயன்படுத்துகிறார்.
அவரது முதல் சிங்கிள், "ஃபாரிஷ்டன்" ஒற்றுமைக்கான ஒரு சிறந்த அழைப்பு.
கலைகளில் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் பக்கச்சார்பற்ற இடத்தை உருவாக்குவது அவரது பல நோக்கங்களில் ஒன்றாகும்.
இன்ஸ்பிரேஷன் குளோபல் வுமன்ஸ் விருதுகள் மூலம் ஊக்கமளிக்கும் பெண் சாதனையாளர் என கருதப்படுவது உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார். அவர் பிபிசி ஏசியன் நெட்வொர்க், டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி, காஸ்மோபாலிட்டன், தி குயின்ட் மற்றும் பல மதிப்புமிக்க வெளியீடுகளில் இடம்பெற்றுள்ளார்.அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்
Farishtha கதீஜா ரஹ்மான்
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கார்த்திகைச்செல்வன்
புதியதலைமுறை ஊடகத்தின் நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன்
கார்த்திகைச்செல்வன் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இந்த வழியில் கார்த்திகைச்செல்வன் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
Sunday, November 21, 2021
Saturday, November 20, 2021
மாவீரன் திப்பு சுல்தான் - கவிதா சோலையப்பன்
மாவீரன்
திப்பு சுல்தான்
- கவிதா சோலையப்பன்
20 நவம்பர்
2021 - இன்று மைசூரின் புலி என்று அழைக்கப்படும்
திப்பு சுல்தானின் பிறந்தநாள்.
திப்பு
சுல்தான் 1750 ஆம் ஆண்டு இதே
நாளில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தேவனஹள்ளி
என்ற இடத்தில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசா அவர்களுக்கும் மகனாகப்
பிறந்தார். ஹைதர் அலியும் இந்திய
வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தைப்
பெற்றவர். இந்த
ஹைதர் அலி தான் வேலு
நாச்சியாருக்கு படை கொடுத்து ஆங்கிலேயரை
வெல்ல உதவியவர். ஹைதர்
அலி சாதாரண குதிரை வீரனாக
இருந்து, படிப்படியாக உயர்ந்து பிறகு ஒரு மைசூர்
அரசை ஆளும் மன்னனாக உயர்ந்தவர். இரண்டாம்
மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப்
போரிட்டு வெற்றிக்கண்டவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து
வெற்றி வாகை சூடியவர்கள் ஒரு
சிலரே. அவர்களுள் தந்தை ஹைதர் அலியும்
மகன் திப்பு சுல்தானும் அடங்குவர்.
1782 ஆம் ஆண்டு தந்தை ஹைதரலியின்
மரணத்திற்குப் பிறகு, தனது 32 வது
வயதில் மன்னராக அரியணை ஏறினார்
திப்பு. 1782 முதல்1799
வரை மைசூர் பகுதியை ஆட்சி
செய்தார். ஆட்சித் தலைநகரமாக சீரங்கப்பட்டினம்
இருந்தது. மைசூரின் மன்னனாக பொறுப்பேற்ற திப்பு
சுல்தான், புலி சின்னம் பொறிக்கப்பட்ட
கொடியை தன்னுடைய சின்னமாக பயன்படுத்தினார். ஹைதர் அலியைப் போலவே திப்புவும்
ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்தார்
திப்பு
என்ற உருது சொல்லுக்கு புலி
என்று பொருள். அவர் தனது
பெயருக்கு ஏற்ப ஒரு மாவீரனாக
வாழ்ந்து காட்டினார். "ஆடுகளைப் போல அடிமைகளாக பல
ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல
இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
என முழங்கி மக்களிடையே விடுதலை
எழுச்சியை உருவாக்கினார். இன்று பலரும் பூகோள
அரசியல் பற்றி பேசிவருகிறார்கள். ஆனால்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பிலிருந்து
இந்தியா விடுதலை பெற வேண்டி
பிரான்சு மாவீரன் நெப்போலியனுடன் இணைந்து
செயல்பட முயற்சிகள் மேற்கொண்டார் திப்பு.
வாலோப்ஸ்
தீவில் உள்ள நாசா வரவேற்பறையில்
உள்ள ஓவியம் ஆங்கிலேயே இராணுவத்திற்கு
எதிராக திப்பு சுல்தான் ராக்கெட்டுகளை
சித்தரிக்கிறது
கிழக்கிந்திய
கம்பெனியார் அஞ்சும் அளவிற்கு திப்புசுல்தான்
மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். வெடிமருந்து கொண்டு தயாரிக்கப்படும் ராக்கெட்
தொழில் நுட்பத்தை உருவாக்கியவர்கள் சீனர்கள் என்பது அனைவரும் அறிந்தது.
ஆனாலும், இரும்பு கொண்டு செய்யப்படும்
சக்தி வாய்ந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப்
பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பின்னாளில் இவரைப் பின்பற்றியே
ஆங்கிலேயர் ராக்கெட்
செய்தனர். இலண்டன் அருகில் ஊல்ரிச்
எனும் ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில்
திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுபோல, நாசாவின் வாலோபஸ்
விமானதள அலுவலக அறையில் ஆங்கிலேயே
சிப்பாய்களை திப்புவின் ராக்கெட்கள் தாக்கும் ஓவியம் ஒன்றும் காட்சிப்
படுத்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இவர்
பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல
நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டன. இந்த
ஏலத்தில் ஆறு மில்லியன் பவுண்டுகள்
வசூலானதாம்.
திப்பு, இசுலாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், சகோதரத்துவத்தை இறுதிவரை கடைப்பிடித்தார். அவரது ஆட்சியில் ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் அவரவர் வழிபாட்டு தளங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. திப்பு சுல்தான் சமய வேறுபாடுகள் களைந்தவராய், தனது அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில் கிருஷ்ணா ராவ் - பொருளாளர், சாமைய்யா ஐயங்கார் - தபால் மற்றும் காவல்துறை அமைச்சர், பூர்ணையா - வருவாய்த்துறை அமைச்சராக நியமித்திருந்தார்.
Monday, November 15, 2021
வானமும் மழையும்
வானத்தில் நட்சத்திரங்களைக் காணவில்லை
வானத்தில் நிலாவைக் காணவில்லை
வானமே மையாக இருந்து இருளை உமிழ்ந்தது ந்தது
காரிருள் சூழ்ந்த நிலையில்
வானமும் திடீரென பெய்யென பெய்யும் மழையின்
.நிலையானது
அவர் இல்லா இரவானது இருண்ட இரவானது
அவரைப் பாராத விழிகள் நீரைக் கொட்டின
வானமே! நட்சத்திரங்களை நிலாவை வெளிக் காட்டு
நான் அவரோடு விளையாடி மகிழ வேண்டும்
சின்னஞ் சிறு பங்கிளியே சிங்கார பாப்பா - உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தாரேன் அழாதே பாப்பா...
அருமையான
குரல் நேரத்தியான வாசிப்பு தப்ஸ் அவர் விரல்களில் விளையாடுகிறது
Saturday, November 13, 2021
Friday, November 12, 2021
எம் பெருமானைப் பார்க்க
பாடல்: முஹம்மது மஃரூஃப்
பாடகர்: தேரிழந்தூர் தாஜ்தீன் ஃபைஜி
எம் பெருமானைப் பார்க்க
என் இதயம் அழுதிடும் பார்க்க
மன்னர் மதி முகம் பார்க்க
மகமூதர் முகமது பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
என் இதயம் அழுதிடும் பார்க்க
மன்னர் மதி முகம் பார்க்க
மகமூதர் முகமது பார்க்க
பார்க்க பார்க்க
எம் பெருமானைப் பார்க்க
Thursday, November 11, 2021
Rafeeq Sulaiman was live — at Sharjah Internation Book Fair @ Expo Center Sharjah.
அரபி புத்தகங்களுக்கு அடுத்தபடியாக அதிகமா இருப்பது மலையாள நூல்கள்தான் போல…. ஆங்கிலமெல்லாம் அதற்கப்புறம்தான்!!
இறைமறை நனையும் இறைமறை களஞ்சியம்
Noor Saffiya
💞 இறைசிந்தனை
بسم الله الرحمن
الرحيم.
السَّلاَمُ وَعَلَيْكُمْ وَرَحْمَةُ
اللهِ وَبَرَكَاتُهُ🌹
اللهم اذقنا حلاوة
معرفتك
اللهم آمين☘.
இறைமறை
நனையும்
இறைமறை
களஞ்சியம்!
💫 ஹபீப்(ஸல்)அவர்கள் நினைவுகளோடு!
இஸ்லாமிய
கேள்வி
பதில்போட்டி
பகுதி # 💫
குர் ஆன்,ஹதீஸில்
கேள்வி
பதில் !
_கேள்வி
_ 07._
**************
அல் குர்ஆனி_ல் அல்லாஹ்
தனது அடியான் இந்த
நிலையில்
வருவதை தவிர
செல்வமோ,
மக்களோ
அந் நாளில் பயன் தராது?
என்று கூறுகிறான்..??
எந்த நிலையில்..??
அ)நன்மையுடன்
ஆ)இறையச்சத்துடன்
இ) தூய உள்ளத்துடன்
பதில்
:
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼