Wednesday, July 27, 2016

ஒன்னுமே புரியலே உலகத்திலே...

by Vavar F Habibullah

வரலாறு பேசும் சில உண்மைகள் சற்று விசித்திரமாகத்தான் இருக்கிறது.அரசியல் கட்சி தாவல்கள் போலவே மத தாவல்களும் சரித்திரத்தின் பக்கங்களை சுவாரசியமாக நிரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன.
மதங்களை கடந்தவர்களே மதச்சாயம் பூசி மக்களைக் கவரும் கதாநாயகர்களாக அரசியல் வானில் உலா வருகிறார்கள்.
முகமது அலி ஜின்னா - இவர் தான் பாகிஸ்தான் ஸ்தாபகர்.இவரின் முன்னோர் ஹிந்து மரபினர்.இவரது மனைவி ரத்தன் ஒரு பார்சி.மகள் டைனா ஒரு கிருத்துவ பார்சி.பேரன் நுஸ்லி வாடியா இந்தியாவின் பெரும் தொழிலதிபர்.பிரிட்டானியா மற்றும் பாம்பே டையிங் குரூப் தலைவர்.ஒரே மகள் கூட தன் தந்தையுடன் பாகிஸ்தான் செல்ல மறுத்து விட்டார்.இந்தியாவிலேயே ஒரு இந்தியராக வாழ்ந்து மறைந்தார்.சொந்த மகளையே முஸ்லிமாக மாற்ற இயலாத ஜின்னா எப்படி முஸ்லிம்களின் தலைவராக மாறினார்.பாகி ஸ்தான் என்ற முஸ்லிம் நாட்டை யாருக்காக உருவாக்கினார்...இன்றும் புரியவில்லை.

கவிஞர் அல்லாமா இக்பாலின் முன்னோர் காஷமீர் பிராமணர்கள்.இவர் தான் பாகிஸ்தான் நாடு அமைய செயல் திட்டம் வகுத்தவர். ஜின்னாவை தன் பக்கம் இழுத்தவர்.பாகிஸ்தான் நாட்டின் தேசிய தந்தையாகவே இவர் இன்றும் போற்றப்படுகிறார்.
காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா - இவரின் முன்னோர் காஷமீர் இந்து பண்டிட் வகுப்பினர். இவர் மனைவியின் தந்தை கிருத்துவர். மகன் பரூக்கின் மனைவி மோலி ஒரு கிருத்தவர். பரூக்கின் மகன் உமர் பாரூக்கின் மனைவி பாயல் ஒரு ஹிந்துப் பெண். உமரின் சகோதரி கணவர் சச்சின் தான், ராஜேஷ் பைலட்டின் மகன். இன்றும் காஷ்மீர் முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் உயர்ந்த குடும்பம் இவர்கள் குடும்பம் தான்.
மகா அக்பரின் மனைவி ஒரு ரஜபுத்திர ஹிந்து பெண் என்பது தெரிந்த கதை. இவர் தான் மன்னர் ஜஹாங்கீரின் தாய், ஷாஜஹானின் பாட்டி, ஒளரங்க சீப்பின் கொள்ளு பாட்டி.
அக்பரை பாராட்ட வேண்டும், காரணம் - அவரு க்கு எல்லா மதமும் சம்மதமாக இருந்தது.
நமதூர் அரசியலில் கொடி கட்டி பறக்கும் நக்வியின் மனைவி சீமா, எம்ஜெ.அக்பரின் மனைவி மல்லிகா, இந்திரஜித் குப்தாவின் மனைவி சரயா,சீதாராம் எச்சூரியின் மனைவி சீமா சிஸ்தி.
ஷீலா திக்சத்தின் மருமகன் முஸ்லிம் என்றால் சிக்கந்தர் பகத்தின் மனைவி ராஜ் சர்மா ஹிந்து.மனீஷ் திவாரியின் மனைவி ஒரு முஸ்லிம் என்றால் ஷா நவாசின் மனைவி ரேணு ஒரு ஹிந்து. நமது முன்னாள் துணை ஜனாதிபதி ஹிதாயதுல்லாவும் இதற்கு விதிவிலக்கல்ல.அவரது மனைவி தான் புஷ்பா.நமதூர் சுப்ரமணிய சாமியின் மகள் சுஹாசினி ஹைதரின் கணவர் தான், சல்மான் ஹைதரின் மகன். நமது காந்தி தாத்தாவின் மகன் ஹரிலால் கூட ஒரு முஸ்லிம் பெண்ணைத் தான் மணந்தார்.
மத நல்லிணக்கத்திற்கும் - ஒற்றுமைக்கும் துணை போக வேண்டிய நமது மாடல் தலை வர்கள் ஏன் மத வேற்றுமையை வளர்த்து மத ஒற்றுமைக்கு உலை வைக்க முயல்கிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனுக்கும் புரியாத புதிராகவே இது அமைந்துள்ளது.

Vavar F Habibullah

No comments: