Sunday, July 24, 2016

இயல் எனப் பலவகை

ஹார்டாருந்தா சப்பாத்தி
நைஸாருந்தா ஃபுல்கா
சுருண்டிடுந்தா பரோட்டா..
நீளமா சுட்டிருந்தா நானு..
வட்டமா சுட்டிர்ந்தா ரொட்டி..
.
எல்லாமே துன்னலாம்
பட்- சைட் டிஷ் வேணும்..
.
..
பிரியாணின்னா
டென்ஷன் ஃப்ரீ..!
சிங்கிள் ஷாட்..
.
‪#‎விளக்கவியல்
--------------------

கருதாதீர் !
"
குழந்தைகள்
உங்கள்
கனவு பொதிகளை
சுமக்கும் கழுதைகளன்று....

"
‪#‎ஃப்ரீயா_வுடுங்க்னா‬
-------------------------
தனி வீடென்பது ஆறரை அடி ‪
#‎கப்ர்வியல்

-----------------------------------------------------

பரோட்டா போடணும்னா மைதா மாவு போதும்..
கொத்துப் பரோட்டா போடனுன்னா..
.
முட்டை வேணும்..
தக்காளீ வேணும்..
வெங்காயம் வெட்டி வேணும்..
எண்ணெய் வேணும்..
பரோட்டா வேணும்..அதும் பழசா வேணும்..
.
டபுள் கரண்டி வேணும்..
மொளகா மறந்துட்டன்..ப்ப்ப்பாஆஆ..
.
.
‪#‎பரோட்டாவியல்‬
====================
இதயம் ஸ்தம்பித்தது
ஒரு கனம்..
.
ஆ..ஹச்ச்ச்...
.
.
‪#‎தும்மல்வியல்‬
----------------------
பணத்திமிரு சிலருக்கு .
படிச்ச திமிரு சிலருக்கு .
சிலவகை செருக்கினை
சிலரால்விடமுடிவதில்லை ..!
.
.
கால சுழற்சி அவர்களை
மாற்றிக்கொண்டு தான் இருக்கு..!
கடந்து போன பின் வருந்தி பயன்..
பேசு முன் உணர்தலே பலன்...
மாடு தவறு..
பசு சரி...
.
.
வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்..
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்..!
.
.
‪#‎செருக்குவியல்‬
-------------------------------
கூர்கொம்பு மாடு
நகம் கொண்ட
மனிதனுக்கு
அடங்கிப்போவது
பாசப் புல் கொண்டல்ல..
கூர் கம்பு கண்டு..
.
.
மனிதனின் ஆறாம் அறிவு
இரக்கமற்ற சாட்டை..
.
.
‪#‎பகுத்தறிவியல்‬
-----------------------------
"ஒவ்வொரு கஷ்டத்துடனும் ஒரு இலேசும் இருக்கின்றது" (அல்குர்ஆன் 94:6)..
.
"அல்லாஹ்வை நினைவு கூறுவதின் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன" (அல்குர்ஆன் 13:28)
.
"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம், ஆனால் பொறுமையுடையேர்க்கு (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக!" (அல்குர்ஆன் 2:155)
.
.
‪#‎பொறுமைவியல்‬
============================================================


பல்வகை இயல்களை தந்தவர் 

Naina Mohammed Shah

No comments: