Saturday, January 30, 2016

வயதும் வாழ்வும்

Vavar F Habibullah
எந்த வயது வரை வாழ்வு இன்பம் அளிக்கும்?
புகழ், பணம், பதவி, ஆரோக்கியம் இதில் ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்க மனிதனுக்கு சான்ஸ் தரப்படுமானால் அறிவுள்ள மனிதன் ஆரோக்கியத்தையே தேர்ந்தெடுப்பான்.
உலகில் பாதி நிலபரப்பை, தன் காலடியில் கிடத்திய மகா அலெக்சாண்டர், 32 வயதில் சாதாரண மலேரியா காய்ச்சல் கண்டு இறந்து போனான். அவன் வழியை பின்பற்றிய மாவீரன் நெப்போலியன், 40 வது வயதில் கான்சர் நோயில் இறந்து போனான். உலகையே அச்சுறுத்திய அடால்ப் ஹிட்லர், தற்கொலை செய்து கொண்டான். உலகப் பேரழகி கிளியோபாட்ரா தற்கொலையில், தன் வாழ்வை முடித்து கொண்டாள். சீசரை அவன் நண்பன் புரூட்டஸ் குத்தி கொன்றான். முசோலினியை, அவன் மக்களே அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு மகிழ்ந்தனர். உலகை பந்தாடிய இந்த கொடுங்கோலர்களின் நிலை இப்படி என்றால்........

Friday, January 29, 2016

“ என் அம்மா – இயக்குநர் தங்கர் பச்சானின் தாயார் குறித்த ஆவணப்படம்


 ஒரு தாயின்   வயிற்றில் பிறந்த பிள்ளைகள் இந்த பரபரப்பான இயந்திரத்தனமான பொருள் தேடும் உலகத்தில் ஆளாளுக்கு எதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் கண்டு பிடிக்கப்படும்அறிவியல் தொழில் நுட்பங்களால் மனிதர்கள் பேசிக்கொள்வதற்குக் கூட நேரமில்லை. இந்த நிலையில் உறவுகளோடு உறவாடவும், உரையாடவும் யாருக்கும் நேரமில்லை. நம்மையெல்லாம் பெற்று, வளர்த்து, உருவாக்கி விட்டு நம் தாயும், தகப்பனும் நாம் நல்ல முறையில் வாழ்ந்தால் போதும் என ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.பட்டினி கிடந்து, அவமானப்பட்டுதான் ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கிறார்கள்.இறுதி காலத்தில் கூட அந்த பிள்ளைகள் அவர்களின் பக்கத்தில் இருப்பதில்லை. வெளி நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்ட எத்தனையோ நூற்றுக்கணக்கான பிள்ளைகள் வந்து இறுதிச் சடங்கை செய்வதற்காக நாள்கணக்கில் பிணவறையில் பிணமாக கிடக்கும் பெற்றோர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு தாய் தகப்பனும் தங்களின் தலைமுறைகளுக்காக இரவு பகல் பாராமல் ஓடி உழைத்து பொருள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த சொத்துக்களை எல்லாம் அனுபவிக்கும் தலைமுறைகளுக்கு அதனை உருவாக்கியவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவதில்லை. எல்லோர் கைய்யிலும் கைபேசி, எப்பொழுதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாட்ஸ் ஆப், பேஸ் புக், டுவிட்டர் என விரல்கள் ஓய்வில்லாமல் பக்கங்களை புரட்டிக்கொண்டே இருக்கிறது. எதைக்கண்டாலும் கைப்பேசியிலுள்ள கேமராவால் படம் பிடிக்க தொடங்கிவிடுகிறார்கள். யாரை பார்த்தாலும் படம் பிடிக்கும் கேமராக்கள் இப்பொழுது “ செல்பி எனும் பெயரில் அவர்களையே படம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

Thursday, January 28, 2016

பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்


பெற்றோர்களை மதிப்போம் - இறை அருளைப் பெருவோம்

     ஹிஷாம் M.I.Sc (India)  

o பெற்றோர்களின் பராமரிப்பு.

o பெற்றோர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன?

o முதியோர் இல்லமும் பெற்றோர்களின் நிலையும்.

o பெற்றோர்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும்: காரணம் என்ன?

o அல்லாஹ்வை வணங்குவதுடன் பெற்றோர்க்கு உபகாரம் செய்வது

o தொழுகையா? தாயா?

o இணை கற்பிக்கும் தாய்க்கும் உபகாரம் செய்தல்.

Wednesday, January 27, 2016

இறையருட் கவிமணி, பேராசிரியர் கா.அப்துல் கபூர்


இறையருட் கவிமணி, பேராசிரியர் கா.அப்துல் கபூர் 

சீரிய செந்தமிழ் எம்மொழியாம் – எங்கும்
சிறந்திடும் இஸ்லாம் எம் வழியாம்
நேரிய இலக்கியம் போற்றுவதே – எங்கள்
நெஞ்சம் இனித்திடும் நற்பணியாம்

நிறையுள்ள செய்யுளும் உரைநடையும் – பொன்
நெஞ்சத்தைக் காந்தமாய்க் கவர்ந்திழுக்கும்
கறையில்லா இஸ்லாம் இலக்கியமோ – ஒளிக்
கதிர்மழைக் குன்றேன உயர்ந்திருக்கும்.

தனிப்பெரும் சிறப்புகள் மிகவோங்கி – நன்கு
தழைத்திடும் நிலத்தினை வாழ்த்திடுவோம்
இனித்திடும் தமிழினில் மலர்ந்திருக்கும் – உயர்
இஸ்லாம் இலக்கியம் வளர்த்திடுவோம்

- இறையருட் கவிமணி

Friday, January 22, 2016

புகழ் தரும் போதை

புகழ் தரும் போதை
பணத்தால் பொருளை வாங்கலாம்
புகழை வாங்க இயலுமா!
பணத்தை எந்த வழியிலும் அடையலாம்
புகழை அப்படி அடைய முடியுமா!
படித்தால் பதவி பெறலாம்
செய்யும் தொழிலால் சிறப்பு எய்தலாம்.
அப்படி என்றால் புகழ் பெறும் தொழில் என்று ஏதும் இருக்கிறதா. எதை செய்தால் புகழ் பெற முடியும்.
புகழ் தேடி அடைவதல்ல, தானே வருவது.
நல்ல புகழ் நிலைக்கும்; காலமெல்லாம் மக்களை பேச வைக்கும். விபத்தால் வரும் புகழ், ஒரு விபத்தில் முடிந்து விடும்.
சரித்திரத்தின் பக்கங்கள் இதை நமக்கு இன்றும் நினைவு படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு ஸூபி துறவி - ஞானத்தின் இருப்பிடம்.....

Wednesday, January 20, 2016

குழந்தைகளின் கேள்விக்கு இன்னும் எத்தனை எத்தனை புஸ்தகங்களை படிப்பதற்கு சுமக்கப்போகிறீர்கள்;

எல்லாம் தெரிந்த உங்கள் மமதையை அடித்து நொறுக்க உங்களை திணறடிக்க மிகப்பெரிய தத்துவஞானிகளோ ஆக சிறந்த அறிஞர்களோ அவசியப்படுவதில்லை; குழந்தைகளே போதுமானவர்கள்; கற்றதைக்கொண்டும், கற்பித்ததைக்கொண்டும் உங்களுக்கு எழும் கேள்விகள் வெறும் புஸ்தகங்களை மேய்ந்து அதை தன் உணவாக உண்டு செமித்துக்கிடக்கும் கரையான்களைப் போல; நீங்கள் அறிந்ததாக, தெரிந்ததாக நினைத்துக் கொண்டிருப்பவைகளில் பெரும்பாலும் பெரும்பாலும் இன்னொருவர் விட்டுச்சென்ற எழுத்துகளைப் பிடித்துக்கொண்டு தூக்கில் தொங்குகிறீர்கள்;

சுயமாக சிந்திப்பதாக நீங்கள் கற்பித்துக்கொண்டிருக்கும் அனைத்தும் எங்கேயோ; எப்போதோ விட்டுச்சென்ற இன்னொருவரின் குரலுக்கு மாதிரியாக திகழ்கிறீர்கள்; காதுகள் இரண்டுதான் இருக்கவேண்டுமா எனும் கேள்விக்கும்; விரல்கள் பத்துதான் இருக்கவேண்டுமா எனும் குழந்தைகளின் கேள்விக்கு இன்னும் எத்தனை எத்தனை புஸ்தகங்களை படிப்பதற்கு சுமக்கப்போகிறீர்கள்;

Sunday, January 17, 2016

அலெக்ஸாண்டிரியா


Mohamed Salahudeen



அலெக்ஸாண்டிரியா நகரின் பெயரை வைத்தே இந்த நகரை தோற்றுவித்தவர் யார் என்பதை அறிந்துக்கொள்ளலாம், ஆம் மாவீரர் அலெக்சாண்டர் இந்தப் பகுதியை வெற்றிக்கொண்டப்பின் அவர் பெயராலேயே உருவாக்கப்பட்ட நகரம். மத்தியத் தரைக் கடலை ஆரத் தழுவி இருக்கும் அழகிய நகரம். பேரழகி கிளியோபாட்ரா ஆட்சி செய்த நகரம். உலகின் பேரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த நகரம். இந்த நகரில் நிர்மாணிக்கப்பட்ட கலங்கரை விளக்கு அன்றையக் காலத்தில் உலகின் உயரமானக் கட்டிடங்களில் ஒன்றாம். அதன் மேற்பகுதியில் கண்ணாடிப் பொருத்தப்பட்டு இருந்ததாம், பகலில் சூரிய ஒளி பட்டு பிரதிபலிக்கும் வகையிலும் இரவில் நெருப்பைக் கொண்டு வெளிச்சம் ஏற்படுத்தப்பட்டு இருந்ததாம்.
உலகில் இந்த நகரைப் போல் நீண்ட நெடிய வரலாறும் வனப்பும், வாணிபமும் செழித்து வளர்ந்த நகரம் மிக மிகக் குறைவு. மார்க்கோ போலோ இந்த நகரைப் பற்றிக் குறிப்பிடும்போது கி.பி. 1300 வாக்கில் அலெக்ஸாண்டிரியாத் துறைமுகமும் சீனாவின் கான்ஜோவ் துறைமுகமும் உலகில் மிகவும் பரப்பரப்பான வியாபாரப் போக்குவரத்து நடந்த துறைமுகம் எனக் குறிப்பிடுகிறார்.இன்றைக்கும் எகிப்தின் மிக முக்கியமானத் துறைமுகமாக அலெக்ஸாண்டிரியா இருக்கிறது
.

எனது எழுத்துக்கு கிடைத்தஅங்கீகாரத்தின் சிலதை தருகின்றேன்/ Kalaimahel Hidaya Risvi

Kalaimahel Hidaya Risvi
என் கவிதைக்கு பகிரங்கமாக முக நூலில் அத்தாட்சி கேட்ட ஏறாவூர் சகோதரனுக்கு எனது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரத்தின் சிலதை தருகின்றேன்
.......................................................................................................
நான் இதற்காக ஒவ்வொரு இடமாக சென்று புகழ் தேடிஅழையவில்லை என் உள்ளத்து உணர்வுகளை ஒன்று திரட்டி பெண்ணாக இருந்து பொறுமையுடன் நான் சாதித்த சாதனைகள் பல
பணத்தை ,புகழை எல்லோரும் மண்ணில் இருந்து தேடலாம்.
ஆனால் கற்பனையில் உருவாகும் யதார்த்தங்களை எல்லோராலும் தேட முடியாதே...!
மகத்தான மாற்றங்களை உருவாக்கும் வல்லமை பெற்றவளே இந்த இரத்த புஷ்டியுள்ள ஆக்கங்களாகும்.
வானைப் பார்த்து “உருவாகும்” கற்பனைகளை விடமண்ணில் இருந்து“உருவாகும்”யதார்த்தங்களும் சிறப்பானவையாகும்
“கவிஞன் பிறக்கின்றான்! அவன் செய்யப்படுபவன் அல்ல! என்பது போல!
கவிதைகளும் “செய்யப்படுபவை”அல்ல! ஆனால் கவிஞன் பிறந்து வளர்கின்றான்!
கவிதைகளோ வளர்ந்த பின்பே பிறக்கின்றன.எனவே
நதிகளுக்கு யாரும் கடலின் விலாசத்தை சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை

என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து!'

என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு செய்து!'

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

Friday, January 15, 2016

நெஞ்சுக்கு நிம்மதி

சில - பல வருடங்களுக்கு முன்னால்
சென்னையில் நான் வாழ்ந்த காலம்.
அசோக் நகரில், ஹபீப் குழந்தைகள் மருத்துவமனை நடத்தி வந்த நேரம்.
வளர்ந்த, இளம்பருவ குழந்தைகள் பலர் மனநல (EMOTIONAL) பாதிப்புக்களில் சிக்கி, உடல் நலம் பாதிப்புக்குள்ளாகி, அதை சரியாக வெளியில் சொல்ல இயலாமல், அவதிபடும் அவஸ்தையை as a paediatrician...... என்னால் எளிதில் உணர முடிந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் சூழல், மற்றும் பெற்றோர்கள் உறவில் ஏற்படும் பல பிரச்சினைகள் - இந்த குழந்தைகளை, மனரீதியாக பாதிப்புக்கு உட்படுத்தி இருப்பதை, குழந்தை மருத்துவ நிபுணர் என்ற முறையில் என்னால் கண்டறிய முடிந்தது. இதனாலேயே, கிளினிக்கல் சைக்காலஜியில் முதுநிலை பட்டம் பெற நான் விரும்பினேன். இது குழந்தைகளின் எமோசனல் பிரச்சினைகளை எளிதில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, எனக்கு மிகவும் எளி தாக இருந்தது. நாள்பட... குழந்தைகளின் பெற்றோர்களும், எமோஷனல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண என்னை அணுக ஆரம்பித்தனர். அரசு உயர் அதிகாரிகளும், பல கார்பரேட் நிறு வனங்களின் தலைவர்களும், செயல் அதிகாரிகளும் - என்னை தேடி வர ஆரம்பித்தனர். எனது குழந்தைகள் மருத்துவமனை, ஒரு ஆஸ்ரமம் போன்று மாறி விடுமோ என்று, என் வீட்டில் உள்ளவர்கள் அச்சப்பட துவங் கினர்.

கால்சியம் சத்து குறைபாடா? கவலையை விடுங்க

கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள்
உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும்.

உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது.

பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும்.

எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பால்

பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

Thursday, January 14, 2016

மனிதன் என்ற மாயை

மனிதன் என்ற மாயை
விழு
எழு
வாழ
முழு வீச்சுடன்
ஓடு
ஓடிக் கொண்டே இரு....
பணம் தேட
பதவி தேட
புகழ் தேட
தேடல் தொடர
ஒடு
ஓடிக் கொண்டே இரு....
மரணத்தின் மடியில்
தலை சாய்த்து
உறங்கும் வரை
ஓடு
ஓடிக் கொண்டே இரு....
வாழ்வின் சுவையில், லயித்திருக்கும் மனிதனை, இமாம் கஸ்ஸாலி நான்கு
வகையாக பிரிக்கிறார்.

Wednesday, January 13, 2016

‪சில‬ நேரங்களில் பிரிவுகள் சுமையானாலும் சுகமானது...


"ஆபீஸ்ல பேஸ்புக் பார்க்குறது காணாதுன்னு வீட்டுக்கு வந்தும் பார்க்கனுமா..கொஞ்சமும் அனுதாபம் கிடையாது..
கொஞ்சமாவது உதவிச் செய்யனும்னு தோனுதா..."என்று கணவனிடம் புலம்பும் மனைவியும்...
"எப்பப் பாரு அதப் பாருங்க இத பாருங்கன்னு கொஞ்சம் மனுஷன் நிம்மதியா இருக்க முடியல" என்று மனைவியிடம் ஆதங்கப் படும் கணவனும்...
"வாப்பா தங்கம் ஒரு தோசையாவது சாப்பிட்டு படு செல்லம் இல்லைன்னா யானை பலம் குறைவு " எனும் தாயிடம்
"போம்மா உனக்கு வேற வேலை இல்லை "
என பிடிவாதம் பிடிக்கும் பிள்ளையின் அன்றாட எரிச்சல்கள்
இவர்கள் பிரிந்து பிழைப்புக்காக,படிப்புக்காக வெளி இடங்களுக்கு போகும் போது ஏதாவது ஒரு நேரத்தில் அருகிலிருக்கும் போது தெரியாத பல விஷயங்களை நினைவுகள் மெல்ல மெல்ல சொல்லித் தந்து விடுகிறது.
அதில் வெறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக களையப்பட்டு விருப்புகள் ஏற்றப்படுகிறது...தெளிந்த மனங்கள் மீண்டும் இணையும் போது மறுபடி எரிச்சல்களுக்கு இடமில்லாது போய்விடும்...

Sunday, January 10, 2016

அறியவேண்டிய "சுயமும்" உருவாகவேண்டிய உலக அமைதியும்.


உலகில் உருவாக்கப்படும்
எல்லாவகை தீங்குகளுக்கும்
அடிப்படை மூலம் "சுயம்"
இந்த "சுயத்தின்"
அடிப்படையை புரிந்துகொண்டால்
அதன் உலக தேவையும்,
உலக பயன்பாடும் புரிந்துவிடும்.
"சுயத்தின்" உலக தேவையும்
உலக பயன்பாடும் புரிந்த மனிதன்
உலகில் தன் செயல்களை
மிக சரியான இலக்குநோக்கி
நேர்த்தியாக கட்டமைக்கிறான்.

Thursday, January 7, 2016

யாரும் இல்லையென்ற கவலை வேண்டாம்.


யாருமில்லையென்ற
கவலை வேண்டாம்.
உனக்காய் அழுவதற்கு
உன் கண்கள் இருக்கின்றன
துடைப்பதற்கு
உன் கைகள் இருக்கின்றன
இனி யாருமில்லையென்ற
கவலை வேண்டாம்.

உன் தலையினை நீயே வருடிக்கொடு
உன் தோள்களை நீயே தட்டு
உன் திறமைகளை நீயே பாராட்டு..
உன் தவறுகளை நீயே குழிதோண்டிப் புதை

நண்பேண்டா!


 ஜேன் கோம். பிரையன் ஆக்டன்.

இந்த இரண்டு பெயர்களையும் மறந்து விடாதீர்கள்.

ஏனெனில், இவர்கள்தான் ‘வாட்ஸப்’ புரட்சியை உருவாக்கிய தொழில்நுட்ப வல்லுனர்கள்.

கோமுக்கு இப்போது வயது முப்பத்தொன்பது. ஆக்டனின் வயது நாற்பத்தி மூன்று. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஆசை ஆசையாக இவர்களிடமிருந்துதான் ‘வாட்ஸப்’ உரிமையை காசு கொடுத்து வாங்கியது.

விலை எவ்வளவு கொடுத்திருப்பார்கள்?

குன்ஸாக சொல்லுங்களேன் பார்ப்போம்.

பத்து லட்சம்? ஐம்பது லட்சம்? ஒரு கோடி? பத்து கோடி? நூறு கோடி?

தலைசுற்றி மயங்கி விடாதீர்கள்.

Wednesday, January 6, 2016

கோடி எறும்புகள் காதுக்குள் புகுந்தால் பட்டத்து யானைகள் என்னவாகும்?

சமஸ்

நாஞ்சில் சம்பத் விவகாரம் அடங்கியபாடில்லை. ஒரு கட்சிப் பதவியிலிருந்து ஒருவர் நீக்கப்படுவது - மன்னியுங்கள், விடுவிக்கப்படுவது - அவ்வளவு பெரிய செய்தியா? இந்த ஆட்சியில் இதுவரை 22 முறை அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது; 20 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்; 10 பேர் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; 6 பேர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவை அத்தனைக்குமான காரணங்கள் நமக்குச் சொல்லப்பட்டனவா? நாம்தான் கேட்டோமா?

பட்டத்து யானைகள் யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவை அல்ல என்றே தம்மைக் கருதுகின்றன. அதிலும் எறும்புகள் அதிகபட்சம் உழைப்பதற்கும் ஓட்டுப் போடுவதற்கும் மட்டுமே உரிமயுடையவை என்றும் அவை கருதுகின்றன. நம்மூரில் ஜனநாயகத்துக்கான அதிகபட்ச மதிப்பு அவ்வளவுதான். சர்ச்சைக்குரிய அந்தப் பேட்டிகளில் நாஞ்சில் சம்பத் இதைத்தான் அவருக்கே உரிய திராவிட நடையில் சொல்லியிருக்கிறார்: “எறும்புகள் சாகின்றன என்பதற்காகப் பட்டத்து யானைகள் ஊர்வலம் போகாமல் இருக்க முடியுமா?”

வெளிநாட்டு வாழ்க்கை ...

வெளிநாட்டு வாழ்க்கை ./..-ஜே .பானு ஹாரூன்
=======================

வெளிநாடு போய் வந்த பின்தான் தெரிகிறது ...
அழாத ஆண்பிள்ளைகளின் அவலநிலை !....
பாலைவனத்தையும் பழக்கிக்கொண்டு ,
பனிக்குளிரையும் பொறுத்துக்கொண்டு ...
காலை வெய்யிலுக்கும் ,காய்ந்த ரொட்டிக்கும் ...
பரபரப்பாய் ஓடும் ஓட்டமான ஓட்டம் ...
இயந்திரத்தனமான வாழ்க்கை மாற்றம் !..
இன்னும் இன்னும் காசு பற்றின தேட்டம் ..
நிற்கவோ நடக்கவோ நேரமில்லை ...
இங்கேயான மெத்தனம் அங்கில்லை ...
காய்த்த கைகளும் ,வெறுமையான மனசும் ...
கிடைத்த இடமும் உறக்கமும் ,உணவும் ...

Monday, January 4, 2016

முஸ்லிம் நண்பர்களுடன் என் இரத்த பந்தம்! -பேராசிரியர் மார்க்ஸ்


மழை வெள்ள அபாயத்தின்போது முஸ்லிம் தோழர்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் ஆற்றிய பணியை உலகே பாராட்டுகிறது.

சுனாமி அழிவுகளின் போதும் கடற்கரையோரங்களில் அவர்களின் தொண்டை நான் நேரில் பார்த்துள்ளேன். அவர்களின் தொழுகைத் தலங்களில் அனைத்தையும் இழந்த மக்கள் வாழ்ந்திருந்ததையும், அவர்களின் கபருஸ்தா்ன்களில் யாருமற்ற அனைத்து மதத்தினரையும் புதைக்க அனுமதித்ததையும், வீடிழந்தவர்களுக்கு அவர்கள் வீடுகள் கட்டித் தந்ததையும் நேரில் பார்த்தவன் நான்.

Sunday, January 3, 2016

சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள்

சதாம் உசைனின் இறுதி நிமிடங்கள் – அமெரிக்க படை வீரர் வெளியிட்ட கடிதம்!
மாவீரன் சதாம் உசைனின் நெகிழ வைக்கும் இறுதி நிமிடங்கள் பற்றி அமெரிக்க படைவீரர் வெளியிட்ட சிலிர்க்க வைக்கும் உண்மை கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
இராக் அதிபராக இருந்த சதாம் உசைனை அமெரிக்கா அநியாயமாக கொலை செய்த கொடுமையை உலகறியும். சதாமின் இறுதி நிமிடங்கள் பற்றி சில அழகான தகவல்களை அந்த நேரத்தில் அவரின் அருகில் இருந்த மிக சிலர்களில் ஒருவரான அமெரிக்க படைவீரர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அந்த படை வீரர் தனது அந்த கால கட்டத்தில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. ஒரு முஸ்லிமின் வாழ்வு எப்படி இருந்தாலும் அவனது இறுதி கட்டம் சிறப்பானதாகவும் இறைவனுக்கு விருப்பமானதாகவும் இருப்பது முக்கியம்.

வளைகுடா நாடுகளில் பிசினஸ் செய்தால்.........

20 கோடியில், தனி ராஜ கல்யாண மண்டபம்
அமைத்து, 55 கோடியை வெள்ளமாக ஒட விட்டு, ஆடம்பரமாக திருமணத்தை, இந்திய திருநாட்டில், தடபுடலாக நடத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார், துபை நாட்டின் இந்திய தொழிலதிபர், கேரளத்தைச் சார்ந்த ரவி பிள்ளை.
வளைகுடா நாடுகளை சார்ந்த ஆட்சியாளர்கள், மற்றும் மன்னர் குல வாரிசுகள் தங்களது தனித்தனி சொகுசு விமானங்களில், அணி வகுத்து வந்து இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து சிறப்பு செய்துள்ளனர்.
தொழிலதிபர், ரவி பிள்ளையின் மகள் டாக்டர் ஆர்த்தியின் திருமணம் நேற்று கேரளத்தின் - கொல்லத்தில் வைத்து நடைபெற்றது.

விருப்பமில்லாதவர்களை விட்டுவிடுங்கள் ...



Yasar Arafat
விருப்பமில்லாதவர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் நகர்ந்துக் கொள்ளட்டும்; பிடித்து இழுத்து வைப்பதினால்தான் கைகளெல்லாம் காயங்கள் உண்டாகின்றன; இன்னும் விசுவாசங்களுக்கும் பாசத்திற்கும் விளக்கம் அறியாதவரின் மூளைகளில் உங்களால் எதையும் உட்புகுத்த முடியாது; அவர்களுடைய பாதங்கள் பின்னிக்கொண்டிருப்பதெல்லாம் தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ எனும் உள் அச்சமே அன்றி வேறில்லை; விளக்கம் கொடுத்து அவர்களை வழி அனுப்பிவையுங்கள்;

பிள்ளைகளின் பிடிவாதங்கள் உங்களுக்கு இன்பமும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது; வயது ஏறியப்பின்னும் அவர்களுடைய அதே பிடிவாதங்கள் உங்களுக்கு சந்தேகமாகவும் எரிச்சலையும் தருகிறது; அவர்கள் வளர்ந்தப்பின்னே பக்குவம் வரவேண்டுமென்று விருப்பம்கொள்ளுங்கள் நீங்கள் அவர்களின் அந்த பிடிவாதங்களை சகித்துக்கொள்ளமுடியாமல் நீங்கள் குழந்தையாக மாறிவிடுகிறீர்கள்; அவர்களை வளர அறிவுறுத்திவிட்டு நீங்கள் குழந்தையாகவே மாறிவிடுகிறீர்கள்;

Saturday, January 2, 2016

எகிப்து நாட்டிற்கு சென்று அடைந்ததும்..

Mohamed Salahudeen


எகிப்து நாட்டிற்கு சென்று அடைந்ததும் முதலில் காண எண்ணியது கிசா பிரமிடுகள் தான்.
அதற்கேற்ப வாகனமும் வழிகாட்டியும் தங்கியிருந்த விடுதியிலேயே ஏற்பாடு செய்துக்கொண்டேன்.
பொழுது புலர்ந்ததும் கிசா நோக்கி பயணப்பட்டோம்.
கிசா பகுதிக்கு செல்லும் சாலைகள் சொல்லும் தரத்தில் இல்லை.
கிசா பகுதி நைல் நதிக்கு மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது.
பிரமிடுகள் அமைந்திருக்கும் பகுதி பாலைவனம். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு மலைப் போல் காட்சியளிக்கிறது.
இன்றைய நவீன காலக் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் இது வெறும் கற்குவியலாகத்தான் தோன்றும்.
பிரமிடுகளைக் கண்டு பிரமிக்கவேண்டுமெனில் மனதளவில் காலச்சக்கரத்தை சுமார் 4500 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்கவேண்டும்.
பிரமிடுகள் அன்றைய செல்வ வளம் கொழித்த மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடல் புதைக்கப்பட்ட கல்லறைகள். கல்லறைகளே இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும்போது அவர்களின் மாளிகை எப்படி இருந்திருக்கும் எனவும் மனம் யோசிக்கிறது.

Friday, January 1, 2016

புத்தாண்டு 2016 நம்பிக்கை - இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை

 நம்பிக்கையே வாழ்வு. இறைவன் மீது வைத்த நம்பிக்கை நம் மீது வைத்த நம்பிக்கை.
நல்லதையே நாடுவோம்.நல்லதையே செய்வோம்.வருவதை எதிர்கொள்வோம் .
 நிகழ்வது நிகழட்டும்.புதிய ஆண்டு என்று ஒரு கற்பனை கொண்டு நிகழும் நாளை ஒதுக்க வேண்டாம். இன்றைய நாளில் செய்வதை  செய்து  அதன் விளைவை  இறைவனிடம் விட்டு விடுவோம் .
கடமையை ஒதுக்கி பலனை தேடுவதில் பயனில்லை.
 ஒட்டகத்தைக் கட்டு இறைவனிடம் பாதுகாப்பு கேள்.-நபிமொழி

 Anas (radi Allahu anhu) reported that a person asked Rasul Allah (sal Allahu alaihi wa sallam), “Should I tie my camel and have Tawakkul (trust in Allah for her protection) or should I leave her untied and have Tawakkul.” Rasul Allah (sal Allahu alaihi wa sallam) replied, “Tie her and have Tawakkul.” (Hasan) [Jami At-Tirmidhi]

இறைவனுக்கே அனைத்துப் புகழும்

நடந்த காலங்களுக்கு நன்றி
நிகழ்பவையெல்லாம் நன்மையாக அமைய இறைவனை வேண்டுவோம்
ஓர் ஆண்டின் தொடர்ச்சியை கொண்டாடி மகிழ்ந்து வரவேற்பது வழக்கம்
நான் (நேற்று வியாழன் 2015)ஆண்டின் முடிவை பேரன் ஜாகிர்  Mohamed Shakir கடையில் பகல் விருந்து உண்டு மகிழ்ந்தேன்
இறைவனுக்கே அனைத்துப் புகழும்
உணவகம் இருக்கும் இடம்
சென்னையில் O M R வீதியில்
கிழக்கு நோக்கி உள்ளது
சென்னை போகும்போது முதல் டோல் கேட் முன் இடது பக்கம்
சென்னையிலிருந்து வரும் போது கடைசி டோல் கேட் வலது பக்கம்
தாங்கள் சிறப்பான .ஆரோக்கியமான உணவு மகிழ்வாக சாப்பிட அங்கு செல்லலாம்
படத்தில் போன் நம்பர் உள்ளது .
ஆர்டர் செய்தும் இருக்குமிடத்திற்கு வரவைக்கலாம்
தாங்கள் அவசியம் சென்று உணவு உண்டு மகிழுங்கள்
இரண்டாம் படம்
நான் மற்றும் பேரன் ஜாகிர்  Mohamed Shakir (ஜாகிர் பல ஆண்டுகள் லண்டனில் உணவகம் நடத்திய அனுபவம் உண்டு .அவர் கேட்ரரிங் catering படித்தவர்
மூன்றாம் படம் பேரன் சமீர் .பேரன் ஜாகிர் மற்றும் Mohamed Ali

ஐந்தாவது படத்தில் பேரன் யாசர் உள்ளார்
--------------------------------


London Grill N Shake

4/76 Rajiv Gandhi Salai,
OMR, Egattur
Near Navalur Sipcot Tollgate
Chennai - 603103
CONTACT INFO
TEL: +91 - (0)44 27435944
MOB: +91 - 9176385944
EMAIL: londongrillnshake@hotmail.com
http://www.londongrillnshake.com/index.html
---------------------------------------------------------------